மாநபி போதித்த மனித_நேயப்பணி...
வேலூர் மாவட்டம் நியூடவுன்
காலேஜ் விளையாட்டு திடலில் கடந்த எட்டு மாதங்களாக கல்பனா எனும் வயது முதிர்ந்த தாயார்
ஒருவர் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.
இதைகண்ட வேலூர் தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் விசாரித்ததில் அந்த பெண்மணி கொல்கத்தாவை
சார்ந்தவர் என்பதும், பெங்களூரில் தன் மகனுடன்
வசித்து வரும்போது சற்று மனக்கோளாரினால் வழிதவறி வாணியம்பாடி வந்ததும் தெரியவந்தது.
அவருடைய மகன் சுர்ஜித்சிங்
என்பவரை இணையத்தின் வாயிலாக தேடியதில் அவருடைய தொடர்பு கிடைத்தது.அவரிடம் தகவல் தெரிவிக்கவே
உடனடியாக ஆனந்ததோடு வாணியம்பாடியை நோக்கி விரைந்தார்.
தாயை பிரிந்த சேயும்,மகனை பிரிந்த தாயும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர்.மேலும்
இதைகண்ட பொதுமக்கள் ஜமாஅத்தார்களின் இந்த உன்னத செயலை பாராட்டி வாழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்!!
இந்த நன்மையான செயலில்
TNTJ மாவட்ட பொருளாளர் இஸ்மாயில்
அவர்களுக்கு அதிக பங்குண்டு.இணையம் வாயிலாக அவரது மகனை தேடியதில் சுணக்கம் காட்டாமல்
செயல்பட்டதால்தான் மிக விரைவாக தாயையும் சேயையும் சேர்க்க முடிந்தது.அல்லாஹ் அந்த சகோதரருக்கு
அருள் புரிவானாக..
"இஸ்லாம் என்பதே பிறர்
நலன் நாடுவது தான்!"
-நபிகள் நாயகம்(ஸல்)
No comments:
Post a Comment