Followers

Thursday, July 27, 2017

ஆர் எஸ் எஸ் பற்றி எம்ஜிஆர்




ஒரு பத்திரிகையாளர் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரிடம் கேட்கிறார்  :

" ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?"

எம்ஜிஆர்:

நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட இருந்த  நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் 'இந்து மஞ்ச்' என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள் -படித்தவர்கள் - யோசித்துச் செயல்படும் தகுதி உள்ளவர்கள் - என் முன்னால் நின்று கொண்டு தமிழ்நாட்டில் பதினைந்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள்.

நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக ஒழிக’’ என்று கோஷமிட்டார்கள்.

அவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.

அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது.

நேரத்தையும் முன்னதாகக் குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள்.

அவர்கள் பெரியவர்கள். அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்குப் பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது.

தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

இது போல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும்?

இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள்.

இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு 'இந்து முன்னணி', அங்கு ஆர்.எஸ்.எஸ்.

இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா? என்பதையும் நாம் உணர்ந்ததாக   வேண்டும்.

இதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றிக் கேள்வி கேட்க வேண்டியதே இல்லை.

இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம்.

எந்த மதம் ஆனாலும் -
தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் - பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது.


(17.2.1983)

2 comments:

Dr.Anburaj said...


கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா ? ஆாஎஸஎஸ குறித்து பொய்பிரச்சாரம் செய்யும் நோக்கில் தங்களின் பதிவு உள்ளது.

ஆயிரம் கை கள் மறைத்து நின்றாலும் ஆதவன்ன மறைவதில்லை
ஆணைகள் இட்டே யாா் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை.

மனிதத் தவறுகள் என்று நாம் பொதுவாகச் சொல்லும் நிலை எங்கும் உள்ளது.

A.Anburaj Anantha said...

துன்முகனுக்கு உண்டோ சுகம்?


‘இடும்பைக்கு இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக் குண்டோ சுகம்

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!


பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ “மனந்தடுமாறேல்”, “துன்பத்திற்கிடங்கொடேல்” என்கிறார்.

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

‘போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

“துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது” என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.