Followers

Sunday, July 02, 2017

மசூதியின் சப்தத்தால் ஒலி மாசுபடுகிறதாம்!

மசூதியின் சப்தத்தால் ஒலி மாசுபடுகிறதாம்!
 புதுடில்லி: ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில், மசூதி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய சான்றிதழ் இடைநிலை கல்வி வாரியத்தின் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்துபவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. இதில், ரயில், கார், பஸ், விமானம் உள்ளிட்டவற்றுடன், மசூதி படமும் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், சமூகவலை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.சி.எஸ்.இ., தலைவர் ஜெர்ரி கூறியதாவது: இந்த பாட புத்தகத்தை எங்கள் வாரியம் வெளியிடவில்லை. தனியார் வெளியீட்டு நிறுவனமே இதற்கு காரணம். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தின் உரிமையாளர் ஹேமந்த் குப்தா கூறுகையில், ''ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில் இடம் பெற்ற அந்த படம் உடனடியாக நீக்கப்படும். நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம்; இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றார்.

தின மலர்
03-07-2017


கோவில் திருவிழாக்களில் விடிய விடிய பஜனை பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப் படுகிறதே... கிருத்தவ தேவாலயங்களிலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிறதே இவற்றுக்கெல்லாம் எந்த படங்களும் போடப்படவில்லை. இந்துத்வாவின் நரித் தந்திரம் இதில் வெளிப்படுகிறது.

மேலும் அனைவரிடத்திலும் செல் போன்கள் உள்ளது. அலாரங்களும் வீடுகளில் உள்ளது. எனவே காலை நேரங்களிலாவது நகரங்களில் ஒலி அளவுகளை குறைத்துக் கொண்டு மற்ற மதத்தவர்களின் அசௌகரியங்களுக்கு மதிப்பு கொடுக்கலாம். பரீட்சை நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வயதானவர்களுக்கும் இதனால் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை அனைத்து மதத்தவர்களும் கடைபிடித்தால் நல்லது.

சில முஸ்லிம் கிராமங்களில் மவுலூது என்ற பேரிலும் ராத்தீப் என்ற பேரிலும் பயான் என்ற பேரிலும் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் விடிய விடிய அதிக சப்தத்தோடு ஒலிபரப்புகிறார்கள். ஒலியின் சப்தத்தை குறைத்துக் கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.

உமது இறைவனைக் காலை யிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 7:205


ராத்திபு என்றும் ஹல்கா என்றும் பல பெயர்கள் இட்டுக் கொண்டு திக்ர் மஜ்லிஸ் நடத்துகின்றார்கள். அதில் இறைவன் கூறும் இந்த ஒழுங்கைப் பேணுவதில்லை. 

அல்லாஹூ என்பதை "ஹூஹூ' "ஹூஹூ' என்றும் "அஹ்' என்றும் இறைவனின் பெயரைச் சிதைத்துக் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி ஹக் தூ ஹக் என்றும் 'இல்லல்லாஹ்' 'இல்லல்லாஹ்' என்றும் இன்னும் பல்வேறு அர்த்தம் இல்லா புது வார்த்தைகளை இவர்களாக உருவாக்கி திக்ர் என்ற பெயரில் செய்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இறையருள் நிறைந்த ரமலான் மாதத்திலும் கூட இறை சாபத்தைப் பெற்றுத்தரும் இக்காரியத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களது இந்தச் செயல் பின்வரும் வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 7:180




No comments: