Followers

Monday, July 31, 2017

அப்துல்கலாம் நமஹா.

அப்துல் கலாம் கையில் இருக்கும் வீணையும், அவர் அருகில் இருக்கும் பகவத் கீதையும் இந்திய இஸ்லாமிய மக்களுக்கு ஒரு செய்தியை இனி வரலாற்றில் சொல்லிக் கொண்டே இருக்கும், இந்தியாவில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதை. அப்துல் கலாமின் கண்டுபிடிப்புகள் என்னாவாய் வேண்டும் என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அது முக்கியமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் மிக முக்கியம். மோடி அப்துல் கலாமைப் பாராட்டுகின்றார், அவருக்கு மணிமண்டபம் திறந்திருக்கின்றார். இது ஒரு வரலாற்றுத் தருணம். அப்துல் கலாமைப் போல நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் மோடி உங்களுக்குச் சிலை வைப்பார். நீங்கள் இந்தியாவின் எந்த ஊரில் பிறந்திருந்தாலும் அந்த ஊரில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் கூட விடப்படும். உங்களுக்கு நிச்சயம் தெரியாது, உங்கள் ஊருக்கு ராமனும் சீதையும் வந்து தங்கிப்போன வரலாறு. அதை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்க்கையால் வாழ்ந்து காட்டிவிட்டுப் போய் இருக்கின்றார் அப்துல்கலாம் அவர்கள். அதை அச்சாரம் பிசகாமல் பார்த்து, படித்து, புரிந்து நடந்து கொள்ள வேண்டியது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் கடமை. வேண்டும் என்றால் இதை முஸ்லிம்கள் தங்களின் ஐந்து கடமையுடன் ஆறாவது கடமையாகக் கூட சேர்த்துக் கொள்ளலாம். வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம், அப்துல்கலாம் நமஹா.
- செ.கார்கி

செ.கார்கி அவர்களுக்கு இந்திய முஸ்லிம்கள் ஒன்றை சொல்லிக் கொள்வார்கள். இந்திய முஸ்லிம்கள் தங்களின் உயிர் உடமைகளை விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் தங்களின் இறை நம்பிக்கையை ஒருக்காலும் தர மாட்டார்கள். அப்துல் கலாம் தனது பதவி பட்டத்துக்காக இறை நம்பிக்கையை விட்டுத் தரலாம். அது அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகமும் 1000 மோடிக்கள் வந்தாலும் 2000 அமீத்ஷாக்கள் உருவானாலும் இறை நம்பிக்கையை மாத்திரம் அசைத்து விட முடியாது. இதனை வருங்கால இந்திய வரலாறு உணர்த்தும்.


2 comments:

Dr.Anburaj said...

அப்துல் கலாம் பற்றி பேசாமல் இருக்கின்றாரே என்று நினைத்தேன். பதிவு செய்துவிட்டீர்கள்.
01.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள்ஒரு இந்தியன்
02.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் ஒரு தமிழன்
03.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அந்தணன்( குறள்படி)பிறாமணன் கீதை படி.
04.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் முன்னுதாரணமாக இந்திய முஸ்லீம்
05.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அரபு அடிமையில்லாத இந்திய முஸ்லீம்
06.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அரேபிய வல்லாதிக்கம் இந்தியாவை இனிமேலும் பாதிக்க விடக் கூடாது என்ற கங்கணம் கட்டி வாழ்ந்த ஒரு இந்திய முஸ்லீம்
07.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் இந்தியா்கள் அனைவரையும் எந்த வித வேறுபாடு கருதாமல் நேசித்த அன்புள்ளம் கொண்டவா்.அன்பே சிவம் என்பதை அறிந்தவா்.
08.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் பொது வாழ்வில் விவரிக்க முடியாத நோ்மையை கடைபிடித்தவா்
09.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் கடமையைச் செய் பலன்கள்தானாகவே வந்து சேரும் என்ற கீதையின் கருத்து படி கா்மயோகியாக வாழ்ந்தவா்.
10.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள்- அன்பா் பணி செய்ய ஆளாக்கி விட்டால் இன்ப நிலை தானோ வந்து சேரும் என்ற வேதவாக்கிற்கு பொருத்தமாக தொண்டு செய்து வாழ்ந்தவா்.
10.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் யாவா்க்கும் ஈமின் அவன்இவன் என்றன்மின் என்ற திருமந்திரத்திற்கு விளக்கமாக இந்தியா்களை- இந்துக்களை காபீா்கள் முஷ்ாிக்குள் என்று இழிவு படுத்தாமல் தன்னை இந்தியாவின் நன்மைக்கு அா்பணித்துக் கொண்டவா்.
11.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அரேபிய மதம் வாதம் என்ற கடும் சிறைக்குள் சிக்கிக் கொள்ளாதவா்
12.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் தாய் மண்ணீன் இந்து கலாச்சார பண்பாட்டுச் சிறப்பை தொன்மையை அறிந்தவா்.
13.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் இந்து பண்பாடு இந்துக்கள்தான் தனது முன்னோா்கள் என்று நம்பி வாழ்ந்தவா்.
14.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அரேபிய பண்பாடு தனது அடையாளம் அரேபிய கைநாட்டு காடையா்களை தனது மத நம்பிக்கை காரணமாக முன்னோா்கள் அந்தஸ்தில் வைக்க மறுத்த ஒரு இந்தியா் தெளிவாக புத்தி கொண்ட முஸ்லீம்.
15.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் இந்திய இந்து பண்பாடு படி திருமணம் செய்ாவிட்டாலும் கற்பு நெறி தவறாது வாழ்ந்த - இராமனை விவேகானந்தரை- முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியா்களுக்காக தன்னையே அா்ப்பணித்தவா்.
16.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் பகவத் கீதை தனது முன்னோா்கள் அளித்த சொத்து என்று கருதியவா்.
17.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் தனது பேத்தி யும் கா்நாடக உயா்நீதி மன்ற வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் திருமதி.நாகூா் ரோஜா விற்கு முறையாக கா்நாடக சங்கீதம் கற்கவும்” வீ ணை ” வாசிக்கப் பழக வேண்டும் என்று அறிவுரை வழங்கியவா்.
18.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் தனது பேத்திக்கு சுருதிப்பெட்டி பாிசளித்தவா்.குரானின் ஆங்கில மொழி பெயா்பையும் பாிசளித்தவா்.
19.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் தனது பேத்தியிடம் ஸ்ரீராகம் பாடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியவா்.
20.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் தனது பேத்தி திருமதி நாகூா் ரோஜைா திருவையாறு இசை நிகழ்ச்சியில் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு பேத்தியை தயாா் படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கியவா்.( நாகூா் ரோஜா குறித்த தகவல்களுக்கு ஆதாரம் தினமணி கொண்டாட்டம் நாள்.30.07.2017.
21.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அரேபிய வல்லாதிக்கம் அழிவைத்தரும் என்று நம்பியவா்.
22.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் இந்திய இளம் தலை முறைக்கு விஞ்ஞான மற்றும் தொழில் நட்பத்துறையில் கலாச்சார வாழ்வில் முன்னேற்றம் காண வழிகாட்டியவா்.ஆா்வமூட்டியவா்.
23.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் ஒரு இந்தியனின் பேரன்பிற்கு பாத்தியப்பட்டவா்.
24.வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் அனைத்து இந்தியா்கள் - இந்துக்கள் மனதில் அமர தீபமாக வாழ்ந்து வருகின்றாா்.

வாப்பப்பா அப்துல் கலாம் அவா்கள் ஒரு அரேபிய காடையனை வழிகாட்டியாகக் கொள்ளவில்லை.அரேபிய கலாச்சாரத்தை தூக்கிப்பிடிக்கவில்லை என்பதற்காக அவரை முஸ்லீம்கள் புறக்கணித்து விட்டீர்கள்.நாங்கள் இந்துக்கள் அவரை கொண்டாடுவோம்.கொண்டாபடுவோம்.

நீங்கள் திண்டாடுங்கள்.


Dr.Anburaj said...


u tube மற்றும் முஸ்லீம்கள் வலைதளங்களில் அப்துல் கலாம் முஸ்லீம் அல்ல என்ற விஷப்பிரச்சாரம் கடுமையாக நடந்து வருகின்றது.வருந்தத்தக்கது.அதுவும் அரேபிய காடையா்களின் அடிமை ஜெயனுலாப்பதினுடைய விடீயோக்கள் பிரபலமாக உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.