Followers

Sunday, July 09, 2017

தனது இரு மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி!


தனது இரு மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி!

சேஹோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார் காலா. விவசாயியான இவருக்கு ராதிகா (14), குந்தி (11) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சர்தார், எருதுகளுக்கு பதில் தனது இரு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார். இது தொடர்பான படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சர்தார் கூறும் போது, “வறுமை காரணமாக எனது மகள்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர். மேலும் நிலத்தை உழுவதற்கான எருதுகளை வாங்கவும் அவற்றை பராமரிக்கவும் எனக்கு பண வசதி இல்லை. அதனால் வேறு வழியின்றி ஏரில் எனது மகள்களையே பூட்டி நிலத்தை உழுதேன்என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
10-07-2017

பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில்தான் இத்தகைய நிலை. மாடுகளை விவசாயிகள் வைத்திருக்க பல்வேறு கெடுபிடிகளை இந்துத்வா அரசு மேற்கொண்டு வருகிறது. மாடுகள் உழவுக்கோ அல்லது பால் தராத நிலையிலோ அதனை விற்க முடியாது. இதனால் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய மாட்டை இலவசமாக கோசோலைக்கு கொடுக்கும் நிர்பந்தத்திற்கு விவசாயி ஆளாகிறான். இதனால் எல்லாம் வெறுப்புற்றே இந்த விவசாயி தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுதுள்ளார்.

சிறந்த விவசாயிகளைக் கொண்ட நமது நாடு இந்துத்வா ஆட்சியாளர்களால் உலகமெங்கும் மிகவும் பரிதாபமாக பார்க்கப்படுகிறது. இவர்களின் கோமாளித் தனமான சட்டங்களால் இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது.








1 comment:

Dr.Anburaj said...

அது அவாின் வறுமை மற்றும் நிதி ஆதாரம் காரணம்.வேறு காரணம் இல்லை.