Followers

Sunday, July 16, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 14



இந்த பாடத்தில் اَلْ - அல் என்ற வார்த்தையானது எவ்வாறு எழுதும் போது மாறுபடுகிறது என்பதை பார்போம்......

ஒரு வார்த்தையின் ஆரம்பத்தில் اَلْ - அல் வருவது என்பது குறிப்பு பெயர்ச்சொல்லின் அடையாளம் ஆகும். ஒரு வார்த்தையின் கடைசியில் தன்வீன் வருவது என்பது பொது பெயர்ச்சொல்லின் அடையாளம் ஆகும். ஆகவே இவை இரண்டும் ஒரே வார்த்தையில் வருவதற்கு சாத்தியம் இல்லை. ஒரு வார்தையின் முன்னால் அல்( اَلْ) வந்தால் கடைசியில் உள்ள தன்வீன் போய்விடும். கடைசியில் தன்வீன் வந்ததால் முன்னால் உள்ள அல்( اَلْ) போய்விடும்.

இதனை சில உதாரணங்கள் மூலம் பார்போம்....

بَيْتٌ - பைதுன் - ஏதோ ஒரு வீடு,

الْبَيْتُ - அல் பைது - குறிப்பிட்ட அந்த வீடு.

பொதுவான ஒரு வீட்டை பற்றி பேசும் போது 'பைதுன்' என்று எழுதினோம். அதே நேரம் 'குறிப்பிட்ட அந்த வீடு' என்று ஒரு வீட்டை சுட்டிக் காட்டிப் பேசும் போது அங்கு 'அல்' - اَلْ - அதிகமாக சேருகிறது. அடுத்து வார்த்தையின் முடிவில் 'துன்' என்று முடிந்தது 'து' என்று முடிவதை பாருங்கள். அதாவது 'பைதுன்' என்று முடிந்தது 'அல்' சேர்ந்தவுடன் 'பைது' என்று முடிவதைப் பார்த்தோம். மேலும் சில உதாரணங்கள் மூலம் இதனை தெரிந்து கொள்வோம்.

مَسْجِدٌ - மஸ்ஜிதுன் - பள்ளி வாசல்

الْمَسجِدُ - அல் மஸ்ஜிது - அந்த பள்ளி வாசல்

அல் சேர்ந்தவுடன் 'துன்' 'து' வாக மாறியுள்ளது.

-----------------------

مَاءٌ - மாவுன் - தண்ணீர்

الْمَاءُ - அல் மாவு - அந்த தண்ணீர்

அல் சேர்ந்தவுடன் 'வுன்' 'வு' வாக மாறியுள்ளது.

-----------------------

قَلَمٌ - கலமுன் - எழுது கோல்

الْقَلَمُ - அல் கலமு - அந்த எழுது கோல்

'அல்' சேர்ந்தவுடன் 'முன்' 'மு' வாக மாறியுள்ளது.

--------------------------

كِتَابٌ - கிதாபுன் - புத்தகம்

الكِتاَبُ - அல் கிதாபு - அந்த புத்தகம்

'அல்' சேர்ந்தவுடன் 'புன்' 'பு' வாக மாறியுள்ளது.

-------------------------

مِفْتَاحٌ - - மிஃப்தாஹூன் - சாவி

المِفْتاَحْ - அல் மிஃப்தாஹ் - அந்த சாவி

'அல்' சேர்ந்ததால் 'ஹூன்' 'ஹ்' ஆக மாறியுள்ளது.

-------------------------

مَكْتَبٌ - மக்தபுன் - மேசை

المَكْتَبْ - அல் மக்தப் - அந்த மேசை

'அல்' சேர்ந்ததால் 'புன்' 'ப்' ஆக மாறியுள்ளது.

--------------------------

قَمِيْصٌ - - கமீஸூன் - சட்டை

القَمِيسُ - அல் கமீஸூ - அந்த சட்டை

'அல்' சேர்ந்ததால் 'ஸூன்' 'ஸூ' வாக மாறியுள்ளது.

அல் சேர்வதனால் எழுத்துக்கள் எப்படி மாறுகிறது என்பதனை பார்தோம். இனி மேலும் சில விளக்கங்களை இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் பார்போம்.

No comments: