Followers

Wednesday, July 26, 2017

சோதனைகளைக் கண்டு மனம் தளரக் கூடாது!

சோதனைகளைக் கண்டு மனம் தளரக் கூடாது!

'ஒரு முறை ஒரு செல்வந்தரை சந்திக்கச் சென்றேன். ஒரு பெரும் கிராமத்தையே தத்து எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 7000 வீடுகளை அங்குள்ளவர்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளார். அங்குள்ள பல்கலைக் கழகத்துக்கு என்னை அழைத்துச் சென்று அதனை காண்பிக்க வேண்டும் என்பது அவரது அவா. நாங்கள் இருவரும் வாகனத்தில் அமர்ந்து பயணித்தோம். பல்கலை கழகத்தை நெருங்கும் சமயம் சாலையில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதால் எங்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. எங்கெங்கோ போன் செய்து முயற்சித்துப் பார்த்தார். முடியவில்லை. பல்கலைக் கழகம் செல்லாமல் திரும்பினோம். அப்போது அந்த செல்வந்தரிடம் சொன்னேன்.

'பரவாயில்லை.... இன்னொரு நாள் வரலாம்' என்றேன். அதற்கு அவர்.

'லத்தீஃப் பாய்..... ஒரு காரியம் வெற்றியாக முடிந்தால் இறைவனுக்கு ஒரு முறை நன்றி சொல்வேன். அந்த காரியம் தோல்வியில் முடிந்தால் அந்த இறைவனுக்கு இரண்டு முறை நன்றி சொல்வேன். என்னை படைத்த இறைவனுக்கு தெரியும் எனக்கு எதை கொடுத்தால் நல்லது என்று'

அந்த செல்வந்தர் சொன்னதை நான் ஆச்சரியத்தோடு பார்தேன். ஒரு காரியம் தோல்வியில் முடிந்தால் உடன் துவண்டு விடுகிறோம். இறைவனை சபிக்கத் தொடங்குகிறோம். மகன் சரியாக படிக்கவில்லை என்றால் அதற்காக வருத்தமுறுகிறோம். அதில் ஏதோ நன்மையை இறைவன் நாடியுள்ளான் என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். அந்த செல்வந்தரிடமிருந்து மிகப் பெரும் பாடம் ஒன்றை அன்று பெற்றுக் கொண்டேன். நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதில் ஏதோ இறைவன் நன்மையை நாடியிருக்கிறான் என்று கடந்து சென்று விட வேண்டும். இறைவனுக்கு நன்றியும் செலுத்த வேண்டும்.'


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663 

சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்று தான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.


ஏகஇறைவனை மறுப்போர் ஊர்கள் தோறும் சொகுசாக திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

அல்குர்ஆன் 3 : 196  198

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.

நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.













No comments: