Followers

Sunday, July 02, 2017

டி.ராஜேந்தருக்கு கஃபாவின் மேல் உள்ள பற்று!



20 வருடங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ் என்ற நண்பர் என்னிடம் 'நஜீர் பாய்.... என் வாழ்நாளில் ஒரு முறையாவது கஃபாவை பார்க்க வேண்டும்' என்று சொல்வார். அவரிடம் 'உனக்கு ஏம்பா இந்த வேண்டாத வேலை. முஸ்லிம் அல்லாதவர்கள் அங்கு சென்று மாட்டிக் கொண்டால் பெரும் பிரச்னையாகி விடும்' என்று அறிவுறுத்தினேன்.

ஆறு மாதத்துக்குப் பிறகு திடீரென ஒரு நாள் 'நான் காஃபாவை பார்த்து விட்டேன். எனது கனவு நனவாகியது' என்றார். 'எப்படி சென்றாய்?' என்று கேட்டதற்கு கம்பெனி வண்டி ஜெத்தாவிலிருந்து மெக்கா சென்றது. மூடிய வண்டியாக இருந்ததால் பழக் கூடைகளுக்கு மத்தியில் மறைந்து கொண்டேன். டிரைவர் கச்சிதமாக என்னை மெக்கா அழைத்து சென்று விட்டார். அவரே கஃபாவுக்கு அருகிலும் கூட்டிச் சென்றார். அந்த அனுபவத்தை என்னால் விவரிக்க வார்த்தை இல்லை' என்றார்.

வர்கீஸூக்கு மட்டுமல்ல உலகில் பல நபர்களுக்கும் இந்த ஆவல் இயற்கையிலேயே உள்ளதை பலரிடம் நான் பார்த்திருக்கிறேன். அதற்கு காரணமாக நான் நினைப்பது உலக மக்களின் மூதாதையர்களான ஆதமும் ஹவ்வாவும் முதன் முதலாக இறை இல்லத்தை நிர்மாணித்து இறைவனை தொழுது வந்ததாக இருக்கலாம். அவர்களின் சந்ததிகளான உலக மக்களுக்கு இயற்கையிலேயே கஃபாவின் மீது ஒரு பற்று வந்து விடுகிறது.

இந்த காணொளியில் கூட டி.ராஜேந்தர் கஃபாவின் மீது உள்ள தனது பிரியத்தை விவரிக்கிறார். அங்கு சென்று இறைவனை வழிபட மாட்டோமா என்று ஏங்குகிறார். மெக்காவின் நுழைவாயிலில் நின்று டி.ஆர் எழுதிய பாடல் வரிகளை பார்போம்.

'கஃபாவை கண் தேடுதே....

உனை காணத்தான் மனம் வாடுதே....

நுழைவாசல் ஓரம் நுழையாமல் நானும்.....

தவிக்கின்ற நேரம்... தடுமாறும் பாதம்.....

இருந்தும்தான் பிடிக்குதந்த வேதம்....

இதய சோகத்தை வடித்தேனே நானும்...

அல்லாஹ்.... அல்லாஹ்.... அல்லாஹ்.....'

என்று பாடி தனது தலையை தரையில் வைத்து படைத்த இறைவனிடம் கோரிக்கையை வைக்கிறார்.

இதனை பப்ளிக்காக சொல்வதால் டி.ஆர் ஏதும் இஸ்லாமியர்களிடம் எதிர்பார்க்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இஸ்லாத்துக்கும் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம். மேலும் தற்போது மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல தொல்லைகளும் பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே டி.ஆர் நடிக்கிறாரா.... அல்லது உளமாற கஃபாவையும் படைத்த இறைவனையும் நேசிக்கிறாரா என்பதை இறைவனே அறிவான். பழைய வீடியோவாக இருந்தாலும் முக்கியத்துவம் கருதி மீண்டும் பதிகிறேன். கேட்டுப் பாருங்கள்.







1 comment:

Dr.Anburaj said...

இந்துக்கள் பாிதாபத்திற்குாியவராக இருக்கின்றாா்கள்.முட்டாள்கள் என்பா வெகுளி என்பதை ஏமாளிகள் என்பதா எனக்கு புாியாத விசயம் இது. ஒர் அரசியல் கட்சியை அவா் மட்டும் இருந்து நடத்தும் அதிபெறும் திறமைசாலி திரு.இராஜேந்திரா் அவா்கள்-அதாவது ஒரு நபா் ஒரு கட்சி.அரசியல் என்று வந்து விட்டால் இந்த இந்து ஏமாளிகளுக்கு பாக்கிஸ்தான் பிாிவினை கிழக்கு பாக்கிஸ்தானில் இன்றும் இந்துக்களுக்கு நடக்கும் கொடுமை ஏதுவும் தொியாது.இந்துக்களை காபீா்கள் என்று முஸ்லீம்கள் இழிவு செய்வது நினைவில் நிற்காது.முஸ்லீம்கள் புகழ வேண்டும் தங்கள் கட்சியில் முஸ்லீம்கள் சேர வேண்டும் என்பதற்கு இவா்கள் செய்யும் மானங்கெட்ட கூத்துக்கள் ஏராளம் ஏராளம்.அதில் இதுவும் ஒன்று தள்ளுங்கள் சுவனப்பிாியன். பதிவு செய்ய வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.முடியும் அளவிற்கு குறித்து பொய் பிரச்சாரங்களைச் செய்தாகிவிட்டது.வேறு என்ன பதிவு செய்ய ?