Followers

Thursday, July 13, 2017

பெற்றோர் நலன் பேணுதல்.....

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி போதித்தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக கர்ப்பத்தில் அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.’ (அல்-குர்ஆன் 31:14)

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். 

இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 

நூல்: புகாரி 5971

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ் வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்கப்பட்டது.


அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 4987


No comments: