அத்தி மரங்கள் அபச
குணம் - வெட்ட உத்தரவிட்ட யோகி
உத்தரப்பிரதேசத்தில்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ
பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது.
முதல்வர்
ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும்
வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது.
’விரதம் இருந்து புனித யாத்திரை
மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம் என்று
பக்தர்கள் கருதுகின்றனர்’
விகடன்
02-07-2017
அத்தி மரங்கள் அபச குணமாம். அதனால் பல நூறு அத்தி மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஒரு மரத்தை வளர்க்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மரம் வளர்க்க வேண்டிய ஒரு
அரசு மூட நம்பிக்கையை பயன்படுத்தி மரங்களை வெட்டலாமா? இது தான் தேச பக்தியா? மரங்களை வெட்டினால்
மழை நின்று போகுமே? விவசாயிகள் பாதிக்கப்படுவார்களே? என்ற கவலை இந்த சந்நியாசிக்கு
இருந்தால் இப்படி ஒரு உத்தரவை போடுவாரா?
No comments:
Post a Comment