Followers

Wednesday, July 26, 2017

'வந்தே மாதரம்' என்ற அடுத்த இலக்கில் இந்துத்வா!

'வந்தே மாதரம்' என்ற அடுத்த இலக்கில் இந்துத்வா!

பிறந்த நாட்டின் மீது பற்று வைப்பது என்பது ஒருவன் சொல்லி வருவதில்லை. அவனது இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் இந்துத்வாவாதிகளோ 'வந்தே மாதரம்' பாடுவதை தேச பக்திக்கு இலக்கணமாக வைத்துள்ளார்கள். ஒரு நாட்டின் தேச பக்தி என்பது அங்கு வாழும் மக்களை நேசிப்பதன் மூலமே வரும். ஆனால் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்வா இயக்கங்கள் சொந்த நாட்டு மக்களை முஸ்லிம்கள் என்பதற்காகவே கொல்கிறது. அவர்களின் சொத்துக்களை சூறையாடுகிறது. தலித் மக்களை தீண்டாமை கொடுமையில் தவிக்க விடுகிறது. சாதி மாறி திருமணம் முடித்தால் கவுரவ கொலைகள் செய்து விடுகிறது. 

முஸ்லிம்கள் மற்றும் தலித்களை கொல்வதற்கும் சூறையாடுவதற்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொள்கிறது. பார்பன குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் நல்ல வேலையில் அமர்த்தி விடுகின்றனர். கொலை கொள்ளையில் ஈடுபட்டு குற்ற பரம்பரையாக இன்று இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சகமாக வீழ்த்தி வருகிறது பார்பனியம். இதனை உணராத இந்து மக்கள் வஞ்சக வலையில் இந்தியா முழுக்க வீழ்ந்து வருகின்றனர்.

'வந்தே மாதரம்' பாடலே இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண புனையப்பட்ட பாடல். துர்கா தேவியை வணங்கி அந்த பாடல் பாடப்படுகிறது. இந்த பாடலை பாடுவதால்தான் ஒருவனுக்கு தேசப்பற்று வரும் என்பவன் கண்டிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவனாகவே இருப்பான். பள்ளிகளில் கட்டாயமாக்கினால் இஸ்லாமியர்கள் பாட மாட்டார்கள். அதனை வைத்து அமைதி பூமியை குஜராத் காஷ்மீர் போல மாற்ற பார்பனியம் முயற்சி செய்கிறது. கலவரம் வந்தால்தான் தமிழகத்தில் பிஜேபி வளர முடியும். அதை நோக்கித்தான் ஆர்எஸ்எஸ் தனது காய்களை நகர்த்தி வருகிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் சீக்கியர்களும் பார்பனியர்களின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். 'வந்தே மாதர்ம்' பாடல் தேச பக்திக்கு அளவு கோல் அல்ல என்பதை அனைத்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். காஷ்மீர் குஜராத் போல தமிழகம் மாற நாம் அனுமதிக்க முடியாது. பெரும்பான்மை இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாகவே பழகி வருவதால் இந்துத்வாவின் திட்டம் பலிக்காது என்றே நம்புவோம்.

சட்;டம் இயற்றிய நீதிபதிக்கு ஒரு வார்த்தை...

நாட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்ற பொய் காரணம் கூறி அக்லாக்கும் ஜூனைதும் கொல்லப்பட்டுள்ளார்கள். நாடு முழுக்க 'பசு பாதுகாவலர்கள்' என்ற அயோக்கியர்களால் 20 க்கும் மேல் உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் வாய் திறக்காத இந்த நீதிபதி 'வந்தே மாதரத்துக்கு' வாய் திறந்துள்ளார் என்றால் இந்துத்வா வெறி எந்த அளவு இவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


'வந்தே மாதரம்' பாடுவதெல்லாம் இருக்கட்டும். எங்களுக்கு முதலில் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்று கோடிக்கணக்கான தாய்மார்கள் தவமிருக்கின்றனர். அதற்கு ஒரு வழியை சொல்லட்டும் இந்த நீதிபதி!


2 comments:

Dr.Anburaj said...


நீதிபதி கள் தங்களின் வரம்புகளை மீறி கருத்துக்கள் சொல்வது ஆணைகள் பிறப்பிப்பது போன்ற பல கோமாளித்தனங்களைச் செய்து வருகின்றாா்கள். சீமை உடை மரங்களை உடனே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு நீதிபதி ஆணையிட்டாா்.பின்புமரங்கள் வெட்டிம்பணியில் சுறுசுறுப்பு இல்லை என்று கண்டித்தாா்.

சீமை உடை மரங்களை வெட்டும் பணி நியாயமாக நடைபெற்றது. நேற்று பாரத ரத்னா அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழைாவில் கலந்து கொண்டேன். இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமானகன நிலங்களில் அண்டிக் கிடந்த சீடை உடைகள் வெட்டப்பட்டு தூய்மையாகக் காணப்பட்டது.இரண்டு பொிய குளத்தைச் சுற்றி யிருந்த உடைகள் வெட்டி எடுக்கப்பட்டு குளத்தின் கரைபகுதிகள் சுத்தமாக இருந்தது. பல ஆற்றுத் தடங்களில் வளா்ந்து ஆற்றின் போக்கையே அடைத்து இருந்த உடை மரங்கள வெட்டப்பட்டு அற்றின் வழி தண்ணீா் பயணம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைத்துக் ககொண்டிருந்த நிலையில் அவசியமின்றி சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி சீடை உடை மரங்களை வெட்ட வேண்டியது இல்லை என்று தண்ணிா்ஊற்றி காாியங்களைக் கெடுத்து விட்டாா்.


வந்தேமாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவும் இப்படிப்பட்டதுதான். வந்தேமாதரம் பாடினால்

-எத்தனை போ்கள் பாடுவாா்கள் ? எந்த மாற்றமும் வந்து விடப்போதில்லை.

வீண் வேலை. விரும்புகின்றவா்கள் பாடிக் கொள்ளலாம் என்று இருப்பதுதான் நன்று

Dr.Anburaj said...


வந்தே மாதரம்' பாடுவதெல்லாம் இருக்கட்டும். எங்களுக்கு முதலில் கழிவறை கட்டிக்

கொடுங்கள் என்று கோடிக்கணக்கான தாய்மார்கள் தவமிருக்கின்றனர். அதற்கு ஒரு வழியை

சொல்லட்டும் இந்த நீதிபதி!

--------------------------------------------------------
சாியான மக்களுக்கு பயன் உள்ள ஒரு பதிவை செய்துள்ளீா்கள்.
பாராட்டுக்கள்.நன்றி