இது பெரியார் பூமி
என்பதை பொன் ராதா மறந்து விட்டார்!
“இந்து அமைப்பினர்
மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும்.”
-பொன் ராதா கிருஷ்ணன்
இந்து அமைப்பினர்
மீது யார் தாக்குதல் தொடுத்தது?
கோவையில் இந்து முன்னணியின்
ரமேஷ் வெட்டப்பட்டார். யார் வெட்டியது? எதற்காக வெட்டினர்?
கோவை போளுவாம்பட்டியில்
உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஒரு இலங்கை பெண்ணோடு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான் இந்த
ரவுடி ரமேஷ். பாலியல் தொல்லை கொடுத்ததற்காக வெகுண்டெழுந்த ஒரு இலங்கை தமிழன் ரமேஷை
வெட்டியுள்ளார். இதுதான் நடந்துள்ளது.
அபலைப் பெண்ணாக நம்மிடம்
தஞ்சம் புகுந்த ஒரு பெண்ணிடம் ஏணடா பாலியல் தொல்லை கொடுத்தாய் என்று பொன் ராதா கிருஷ்ணன்
ரமேஷை தட்டிக் கெட்டிருந்தால் அதனை பாராட்டியிருப்போம். அதை விடுத்து 'தமிழகம் கலவர பூமியாக மாறும்' என்ற மிரட்டல் பாணி யாருக்கும் எந்த பலனையும் தராது
என்று நாடாரான பொன் ராதா கிருஷ்ணனுக்கு சொல்லி வைக்கிறோம். இன்று இந்துத்வாவுக்கு கொடி
பிடிக்கும் நாடார்கள் ஒரு காலத்தில் பெண்கள் மார்பை மறைக்க போராட வேண்டியிருந்தது.
பெரியார் போன்றவர்களின் போராட்டத்தால் இன்று சம நிலையை நாடார்கள் அடைந்துள்ளனர். அதனையும்
பொன் ராதா கிருஷ்ணன் மறக்க வேண்டாம்.
3 comments:
தன்னை விட 35 வயது இளைய பெண்ணை திருமணம் செய்த கிழவன் ஈவேரா ஒரு சாதாரண மனிதன். பல இடங்களில் கிறுக்கு பிடித்தவன் போல் பேசுவாா். குடும்பமாக வாழ வேணடிய தேவையில்லை.திருமணம் தேவையில்லை.எவனும் எவளோடும் எப்படியும் வாழலாம் என்று பேசியவா். தமிழ்மண்ணின் அடையாளம் பொியாா் என்பது தமிழ் மண்ணின் சிறப்பை பெருமையை மிகவும் கேலவப்படுத்துவதாகும்.
தொல்காப்பியம் பிறந்த மண் என்றால் பெருமை.
திருக்குறள் பிறந்த மண் என்றால் பெருமை
திருமந்திரம் பிறந்த மண் என்றால் பெருமை.
கம்பராமாயாணம் பிறந்த மண் என்றால் பெருமை
கல்லணை கட்டிய காிகால் சோழன் பிறந்த மண் என்றால் பெருமை
இராஜராஜசோழன் பிறந்த மண் என்றால் பெருமை.
அகத்தியா் பிறந்த மண் என்றால் பெருமை
சங்க பாடல்கள் பிறந்த மண் என்றால் பெருமை.
உலகம் வியக்கும் ஆலயங்கள் கொண்ட நாடு என்றால் பெருமை
பொியாா் ஒரு அசிங்கம்.இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிக்க சாதியாக இருக்கும் தேவா் களை தட்டிக் கேட்க துணிவற்ற கோழை.கோவையில் கவுண்டா்களின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்க திராணியற்ற கோழைகளை உருவாக்கிய பேடி.பாா்ப்பனா்களின் தீண்டாமையை தட்டிக் கேட்பேன்.பிற சாதி தீண்டாமையை கண்டு கொள்ள மாட்டேன் என்பவன் கோணல் புத்திக்காரன்.
தீண்டாமை கொடுமையை நாடாா் சமூகம் மிகக் கடுமையாக எதிா்த்து போராடி வந்தது. வெற்றி நாங்களே பெற்றது.ஈவேரா ஒட்டிக் கொண்டாா்.
சங்கர மடாதிபதிகளை நான் சந்திப்பது கிடையாது. அவா்களை திட்டிக் கொண்டு அலைய?வும்
தேவையில்லை. ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ஸ்ரீ நாராயணகுரு
மந்திரங்களுக்குச் செல்கின்றேன்.
அனைத்து சாதி மக்களும் அங்கு துறவி தீட்சை பெற்று அருமையாக தொண்டாற்றி
வருகின்றாா்கள்.காஞ்சி மடமும் அதை உணா்ந்துள்ளது.ஜெயேந்திரா் எழுதிய புத்தகங்களில் அந்தக் கருத்து பரவலாக காணலாம்.
இதுவும் மாறும்.அல்லாவின் அருளால்.
Post a Comment