இறைவா! உனது படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்!
உலகில் உள்ள படைப்புகளை கூர்ந்து நோக்குங்கள். ஒவ்வொன்றும் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எத்தனை கோடி உயிரினம் இருந்தாலும் ஒன்றையொன்று வித்தியாசப்படுத்தி வேறுபடுத்திக் கொள்கிறது.
அல்லாஹ் தன்னை ‘அல் பாரி’ – தொடங்குபவன், படைப்பவன் – என்று குர்ஆனில் மூன்று முறை குறிப்பிட்டுள்ளான். சூரத்துல் ஹஷர் இறுதி வசனத்தில் ‘அல் காலிக்’, ‘அல் பாரி’ (படைப்பாளன், உண்டாக்குபவன்) மற்றும் ‘அல் முஸவ்விர்’ ஒழுங்குபடுத்துபவன், உரு கொடுப்பவன் என்ற ஒன்றுக்கொன்று கருத்தில் தொடர்புடைய மூன்று பெயர்களுமே உள்ளன. இவை அல்லாஹ்வின் தன்மையான படைப்பாளன் என்ற முறையில் அவன் நிலைகளைக் குறிப்பிடுகின்றன. அவனைத் தவிர, பிரபஞ்சத்தில் உள்ள மற்றவை அனைத்தும் படைப்புகள்.
No comments:
Post a Comment