பொன் ராதா கருத்துக்கு தவ்ஹீத் ஜமாத் எதிர்ப்பு!
நாள்: 10.07.2017
பத்திரிக்கை செய்தி
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்..
கோவைப் பகுதி இந்து முன்னணியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த
சில தினங்களுக்கு முன் வெட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில்
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி
அளிக்கையில், தொடர்ந்து நடைபெறுகிற இது போன்ற சம்பங்களால் தமிழகத்தில்
கலவரம் வெடிக்கும் என கூறியுள்ளார்.
ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் அது குறித்து எந்த ஒரு உண்மையும்
வெளி வருவதற்கு முன்னதாக இது முஸ்லிம்களால் செய்யப்பட்டது போன்றும், முஸ்லிம்களுக்கு
எதிராக கலவரத்தை தூண்டும் விதமாகவும் இவர் பேசியது கடும் கண்டனத்திற்கு உரியது.
அனைத்து மக்களுக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு அமைச்சர் இப்படி பேசுவது
அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.
நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வெளியிட்டுள்ள
தகவலின் படி, இலங்கை அகதிகள் முகாமில், இந்த
ரமேஷ் பாலியல் சேட்டை செய்ததினால் அங்குள்ள இலங்கை அகதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பல்வேறு காரணங்களுக்காக இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
தாக்கப்படும் போதெல்லாம் முஸ்லிம்களால் செய்யப்பட்டது போல் ஒரு பொய்யை இது போன்ற
பதவிகளில் உள்ளவர்கள் சர்வ சாதரணமாக கூறிவிடுகின்றனர். இது போன்ற உணர்வுகளை
தூண்டும் பேச்சுக்களால் பல வன்முறை சம்பவங்கள் நாட்டில் பல பகுதிகளில்
நடந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொன் ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வன்மையாகக் கண்டிப்பதோடு, சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் இவருக்கும் எதிராக
மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment