Followers

Tuesday, March 13, 2018

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார்!


இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் காலமானார்!

லண்டன் : தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார். குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு உள்ளிட்டவற்றை உருவாக்கியவர் இவர்.

இயற்பியல் மேதையான இவரது கண்டு பிடிப்புகளை மேற்கோள் காட்டி அதனை குர்ஆன் வசனத்தோடு ஒப்பிட்டு முன்பு நான் எழுதிய ஒரு பதிவை மீள் பதிவாக தருகிறேன்.

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம்.

"
முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்"

-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது.

 

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.
-
குர்ஆன் 51:47

பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.
-
குர்ஆன் 51:48

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-
குர்ஆன் 15:19

இன்னும், பூமியை படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
-
குர்ஆன் 55:10

பூமியை விரித்தான் என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் தஹாஹா என்ற சொல் தஹ்வு என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. தஹ்வு என்ற சொல்லை அரபி அகராதியில் சென்று தேடிப் பாருங்கள். விரித்தல் என்ற பொருளைக் கொடுக்கும்.
பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்
-
விஞ்ஞானி ஹப்பிள்.

இதைத்தான் இறைவனும் பூமியை விரித்தான் அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா திரு ரூபன்!
பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை என்று புன்னகை புரிகிறார், ஸ்டீஃபென் ஹாக்கிங்!

இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.

-
ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)
“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.”
(
பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(
அதே புத்தகம் பக்கம் 42)








5 comments:

Dr.Anburaj said...


இவரது அறிவாற்றலுக்கு உலகமே தலை வணங்குகின்றது. இவரது கண்டுபிடிப்புகளுக்கு

முன்னோடி அரேபிய புத்தகம் ஆக குரான் என்பதுபோன்ற போலியான தோற்றத்தை சுவனப்பிரியன் உருவாக்க முயன்று வருகின்றார்.

குரானில் இருப்பது அறிவியல் அல்ல.
குரானில் அறிவியல் இல்லை.இல்லவேயில்லை.

ஸ்டீபன் ஒரு அசல் நாத்திகவாதி.இறைவன் இருப்பை ஒப்புக் கொள்ளாதவா்.
அவருக்குள் குரானை புகுத்துவது முட்டாள்தனம்.சுவனப்பிரியன் வழக்கம்போல் பல முட்டாளதனங்களைச் சொல்வதுபோல் இந்த பதிவிலும் முட்டாளதனங்களைச் செய்துள்ளாா்.


இந்தியா உலகிற்கு சிறந்தகணித இயற்பியல் அறிஞா்களை அளித்துள்ளது என மனம் நிறைந்து வாழத்தியுள்ளது இவரது நற்குணத்திற்கு உரைகல்.

அடுத்த பிறவியில் இவர் இந்தியாவில் இந்துவாக பிறக்க வேண்டும்.அறிவியல்துறையில் மீண்டும் அளப்பரிய தொண்டு செய்ய வேண்டும் என்று இறைவனை பரம்பொருளை ஆதி மூலத்தை பரப்பிரம்மத்தை சிவத்தை பரசிவனை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை பிரார்த்திக்கின்றேன்.

ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியை நினைவு கூா்ந்தமைக்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

Dr.Anburaj said...

entropy of the world increases என்பது இயற்பியல் கோட்பாடு. இதை குரானோடு சம்பந்தப்படுத்த முடியாது.

Dr.Anburaj said...

சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எல்லாம் கற்பனைக் கதை என்று ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை தி கார்டியனுக்கு அளித்தப் பேட்டியை இன்று நாம் நினைவுகூர்வது அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

ஸ்டீபன் ஹாக்கிங்...அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்பட்டார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரை அவருடைய 21-ஆம் வயதில் தாக்கியது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.

மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார்.

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் தி கார்டியன் இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை "சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே" என்றார்.

இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.

தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.

தி கிராண்ட் டிசைன் சம்பாதித்த எதிர்ப்புகள்..

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் 'தி கிராண்ட் டிஸைன்', (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.

Dr.Anburaj said...

இந்தியர்கள் கணிதம், இயற்பியலில் திறமைசாலிகள்’’ என்று இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

இங்கிலாந்தின் இயற்பியல் மற்றும் விண்வெளி துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நேற்று தனது 76-வது வயதில் காலமானார். கடந்த 2001-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங், 16 நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, மும்பை, டெல்லியைச் சுற்றிப் பார்த்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேசினார்.

அப்போது, இந்தியர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளில் மிக திறமைசாலிகள் என்று அவரிடம் ஹாக்கிங் மகிழ்ச்சியாக கூறினார். இந்தச் சந்திப்பு மறக்கமுடியாத அனுபவம் என்று நாராயணன் பின்னர் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ‘‘மனிதர்களின் நம்பிக்கை சின்னமாக, ஏதாவது ஒரு வகையில் குறைபாடு உள்ள மனிதர்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்’’ என்று புகழாரம் சூட்டினார். ஹாக்கிங் பின்னாளில் கூறும் போது, ‘இந்திய பயணம் மிகச் சிறப்பாக இருந்தது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அப்போது மும்பையில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் 5 நாட்கள் நடந்த சர்வதேச இயற்பியல் மாநாட்டில் பல அமர்வுகளில் ஹாக்கிங் உரை நிகழ்த்தினார். இந்திய பயணத்தின் போது தனது 59-வது பிறந்த நாளை தான் தங்கியிருந்த ஓபராய் டவர்ஸ் ஓட்டலில் கொண்டாடினார். சக்கர நாற்காலியுடன் இவர் மும்பை, டெல்லியை சுற்றிப் பார்க்க பிரத்யேகமான வாகனத்தை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தயாரித்து தந்தது. அதன் மூலம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், குதுப் மினார் உட்பட பல முக்கிய இடங்களை ஹாக்கிங் சுற்றிப் பார்த்தார்.

சிந்திக்கும் ரோபோக்கள்


உலகளவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்கவும், சிந்திக்கும் திறனுள்ள ரோபோக்களை உருவாக்கவும் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக சில திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பிபிசி-க்கு அளித்த பேட்டியின் போது, ‘‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்கினால் மனித குலத்துக்கு பேரழிவாக அமையும்’’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் முக்கிய விஷயங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே ஹாக்கிங் தொடர்ந்து எச்சரித்து வந்தார். பருவநிலை மாறுபாடு, செயற்கை நுண்ணறிவு, மக்கள் தொகை பெருக்கம், வேற்றுகிரகவாசிகளால் பூமிக்கு ஆபத்து உட்பட பல விஷயங்கள் குறித்து அவர் எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு ஒட்டுமொத்தமாக மனிதர்களுக்கு மாற்றாக மாறிவிடும் என்று கூறியுள்ளார். பருவநிலை மாற்றத்தால் 2,600-ம் ஆண்டுக்குள் பூமி பெரும் நெருப்பு கோளமாக மாறிவிடும். அப்போது மனித இனம் இல்லாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். பருவநிலை மாற்றம், விண்கற்களின் தாக்குதல், மக்கள் தொகை பெருக்கத்தால் அடுத்த 100 ஆண்டுகளில் மக்கள் வேற்று கிரகங்களில் குடியேறும் நிலை உருவாகும் என்று ஹாக்கிங் நம்பினார்.

மேலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை, தொழில்நுட்பங்களில் பெரும் வளர்ச்சி ஆகியவை அணுஆயுத, ரசாயன போர்களுக்கு வழிவகுத்து நம்மை முற்றிலும் அழித்துவிடும். இந்த அசம்பாவிதத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகளின் அரசுகளுக்கு உள்ளது என்று வலியுறுத்தினார்.

பூமியில் மனிதர்கள் வாழ்வதை, தங்களது இருப்பை வேற்றுகிரகவாசிகளுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளுக்கு ஹாக்கிங் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். ஏனெனில், நம்மை விட வேற்றுகிரகவாசிகள் தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்று அவர் நம்பினார். - ஐஏஎன்எஸ்
thanks:The Hindu

Dr.Anburaj said...

தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், "மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன" என்றார்.

-------------------------------------------------------
குரான் இப்படியா சொல்கின்றது.?????? இவரது அறிவியல் கருத்துக்களை குரான் எடுத்து இயம்புகின்றதா ? ஆஹா ஆஹா! இப்படியும் முட்டாள்தனங்கள் உலகில் இருப்பது ஆச்சரியமே.