அஷ்ரப்’புகள் சூழ் உலகு
துபாயில் ஒரு சாமான்யர் உள்ளார்
பெயர் அஷ்ரப்
தொழில் சிறிய மெக்கானிக் கடை
பெயர் அஷ்ரப்
தொழில் சிறிய மெக்கானிக் கடை
இவர் சொந்த விருப்பத்தின் பேரில் , துபாயில்
இறந்து போகும் வெளிநாட்டினரின் உடல்களை கவர்மெண்டிடம் பெற்று அவர்கள் ஊருக்கு
பத்திரமாக அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறார்.
பாலிவுட்டின் ஆண்ட பரம்பரையான கபூர் குடும்பம் இவரைதான்
ஸ்ரீதேவியின் உடலை பெற்றுத்தர கோரி அணுகி உள்ளனர்.
இவரும் அனைத்து பார்மாலிடிசையும் முடித்து உடலை பெற்று
தந்துள்ளார்.
இணையமெங்கும் உலவும் ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைக்கப்பட்ட
அனுமதி கடிதத்தில் அஷ்ரப்பிடம்தான் உடல் ஒப்படைக்கப்பட்டதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்தான் கையெழுத்திட்டு உடலை வாங்கியுள்ளார்.
இந்த உதவிக்காக கபூர் குடும்பம் பணம் தர முயன்ற போது “இன்று
மட்டும் ஸ்ரீதேவியுடன் சேர்த்து ஐந்து உடல்களை பெற்று அனுப்பியுள்ளேன். அவர்கள்
அனைவருக்கும் அவர்கள் நாட்டில் உறவினர்கள் ஒரே அன்புடனும் அழுகையுடனும்
காத்திருப்பர். அதற்காகதான் செய்கிறேன். இதற்கு பணம் வாங்கி பழக்கம் இல்லை . என்னை
பொறுத்தவரை ஸ்ரீதேவி ஒரு சாமான்யர்தான் இங்கே ஒரு வெளிநாட்டினர் இறந்தால் என்ன
வழிமுறை கடைபிடிப்பார்களோ அதையேதான் இவருக்கும் செய்திருக்கிறார்கள்.மீடியாதான்
பெரிதுபடுத்துகிறது” என்று கூறி ஒரு தோள் குலுக்கலுடன் விடை பெற்று கொண்டார்.
அவரது எளிய வீடு மெடல்களாலும் நன்றி கடிதங்களாலும் நிரம்பி
உள்ளது. அவரது செல் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கிறது .
நன்மை
செய்வதில் பிசியாக இருப்பதால் ஸ்ரீதேவிகளையும் சாமான்யராக கருதி வாழ்வை கடந்து
போகும், அஷ்ரப்பை போன்ற வெளித்தெறியாத சாமான்யர்களால்தான் உலகம்
உய்த்துக் கொண்டிருக்கிறது ❤
பாத்
டப்புக்குள் அமர்ந்து செய்தி படிக்கும் மீடியாக்களால் அல்ல
❤
❤
No comments:
Post a Comment