Followers

Thursday, March 29, 2018

தவ்ஹீத் ஜமாத் தனி மனிதர்களை வைத்து செயல்படுகிறதா?


தவ்ஹீத் ஜமாத் தனி மனிதர்களை வைத்து செயல்படுகிறதா?

முன்பு பிஜே அவர்களுக்கு கேன்சர் என்று சொல்லப்பட்டபோது துடித்துப் போனோம். நோய் முற்றி இறைவன் அவரை அழைத்துக் கொண்டால் ஏகத்துவ கொள்கைக்கு ஒரு பின்னடைவு ஏற்படுமே என்று வருந்தினோம். அப்போது பிஜேக்கு மாற்றாக அல்தாஃபி வந்தார். அல்தாஃபியின் வருகைக்கு பிறகு சிறிது நிம்மதி வந்தது. ஆனால் இன்று அல்தாஃபி அதள பாதாளத்தில் வீழ்ந்தவுடன் மீண்டும் கவலை வந்தது. ஆனால் இது போன்று தனி மனிதர்களை வைத்து ஏகத்துவ கொள்கை நிலை பெறாது கொள்கையை வைத்தே நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று இறைவன் நமக்கு உணர்த்துவதற்காகவே இது போன்ற சறுக்கல்களை ஏற்படுத்துகிறான்.

எத்தனை பெரிய தலைவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் என்ற முறையில் தவறிழைக்கக் கூடியவர்களே... எனவே எவரின் மீதும் அளவு கடந்து பற்று நம்பிக்கை வைத்து அவர்கள் மேல் அனைத்து பொறுப்புகளையும் சுமத்தி விட்டு ஒதுங்கி கொள்ளும் போக்கை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தவ்ஹீத் ஜமாத் என்ற இந்த பேரியக்கமானது இன்று தமிழகம் கடந்து இந்தியா முழுக்கவும், மேலும் உலகம் முழுக்கவும் பல கிளைகளை பரப்பி பல அரிய பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் தந்தை பெரியாரால் கூட ஏற்படுத்திட முடியாத மாற்றத்தை இஸ்லாமியர்கள் மத்தியில் கடந்த 30 வருடங்களில் தவ்ஹீது ஜமாத் சாதித்து காட்டியுள்ளது. இது ஒரு தனி மனிதராலோ, அல்லது ஒரு சிலராலோ ஏற்படுத்தப்பட்டது அல்ல. இந்த அமைப்பின் கொள்கையானது குர்ஆனை அடிப்படையாக வைத்து செயல் பட்டது. இறைவன் அதற்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தான்.

கபுர் முட்டிகளும், மத்ஹப் வெறியர்களும், ஷியாக்களும், பரேலிகளும், நாத்திகர்களும், இந்துத்வா வெறியர்களும் இன்று அல்தாஃபியின் விலக்கத்தை வைத்து குதூகலிக்கிறார்கள். தமுமுக பிரிந்த போதும் இப்படித்தான் குதூகலித்தார்கள். பாக்கரை விலக்கிய போதும் இவ்வாறே குதூகலித்தார்கள். முடிவில் இறைவன் குதூகலித்தவர்களின் முகத்தில் கரியை பூசி முன்பை விட வீரியமாக செயல்பட வைத்தான். அதே போல் தற்போதும் அல்தாஃபி விலக்கலுக்குப் பிறகும் தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு தவ்ஹீத் ஜமாத் முன்பை விட வீரியமாக செயல்படும் இன்ஷா அல்லாஹ்.

"அறிந்து கொள்ளுங்கள்...! தூய்மையான இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது..."

திருக்குர்ஆன் 39:3

"அல்லாஹ்வே..! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே..! நீ நாடியோருக்கு அதிகாரத்தை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய். நீ நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்  என்று கூறுவீராக!"

திருக்குர்ஆன்  3:26

10 comments:

A.Anburaj Anantha said...

குப்புற விழுந்து விட்டு மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீர வசனம் பேசியதுபோல்

உள்ளது தாங்கள் கருத்து. உயா் பதவியில் இருப்பவனுக்கு தான் சுய ஒழுக்கம் அதிகம்

தேவை. ஊருக்கு மட்டும் உபதேசம் என்பது ஏமாற்று வேலை.

பணம் பெண் விசயத்தில் பல தவறுகள் நடந்தது.அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக

விலக நேரிட்டது.கடைசியில் அதிமகா பரிபுரண யோக்கியன் போல் இருந்த தலைவரின்

யோக்கியதையும் சந்தி சிரித்து விட்டது.அடுத்தவர்களை அதிகம் விமா்சித்து

அவமரியாதை செய்தவா்கள் அனைவரும் மாியாதை இழந்து தலைகுனிந்து

நிற்கின்றார்கள்.

இறைவன் ஜமாத்தை ஆசீர்வதிக்கவில்லை.

அகம்பாவம் இந்து மத ஒழிப்பு வெறி முஸ்லீம் வல்லாதிக்க வெறி நியாயம்

ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு நடத்தப்பட்டு வரும்-முறையான தகுதியான

கொள்கையின்றி செயல்படு்ம் எந்த அமைப்பிற்கும் இந்த கதிதான்

ஏற்படும்.முஸ்லீம்களின் வல்லாதிக்க வெறிக்கு தூபம் போட்டு வளர முயன்ற

கபடவேடதாாிகளின் இயக்கத்தை அல்லா முறித்து போட்டு விட்டான்.

சத்தியம் வேவ ஜெயதே சத்தியம் வெல்லும்.

Dr.Anburaj said...

தேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் முனங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் வெளிப்பாடாகவே தெரிகிறது.எண்பதுகளின் தொடக்கத்தில், மதீனாவில் (சவூதி அரேபிய நாட்டின் மதீனா எனும் நகர்) வேதம் பயன்றவர்களைக் கொண்ட இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் மூலம் ஜாக் (ஜாமியத்துல் அஹ்லில் குரான் வல் ஹதீஸ் என்பதின் சுருக்கம் – மெய்யான குரான் ஹதீஸ் வழியில் நடக்கும் அமைப்பு என்பது பொருள்) எனும் பெயரில் வஹ்ஹாபிய அமைப்பு ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு அரசியல் ரீதியாக யதார்த்தத்தில் இஸ்லாமிய மக்களின் பிரச்சனைகள் என்ன? அவைகளை எவ்வாறு தீர்ப்பது? அவைகளுக்காக என்ன வழியில் மக்களைத் திரட்டுவது? போன்ற எந்த முனைப்பும் இன்றி மதவாதத்தில் மூழ்கித் திளைத்த அமைப்பாக இருந்தது. அரசியலற்ற மதத் தூய்மை பேசுகின்ற அமைப்பாக தன்னை காட்டிக் கொண்டது. ஆனால், அரசியலின்றி ஏதேனும் இருக்க முடியுமா?வஹ்ஹாபியம் பேசும் இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பதே அரசியல் தான். சர்வதேச அரசியல். அமெரிக்கா, சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் காலங்களில் சோவியத் யூனியனை வெல்ல அமெரிக்கா கண்டுபிடித்து, கடைப்பிடித்த அரசியல். வியட்நாமில் வாங்கிய அடியில் அமெரிக்க மக்களே ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடத் தொடங்கி விடுவார்களோ என்ற பயத்தில் நேரடியான இராணுவ நடவடிக்கைகளை தவிர்த்து மாற்று யோசனைகளை செயல்படுத்த முயன்றது அமெரிக்கா. அதில் ஓர் உத்தி தான் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த செய்யத் குதூப் எனும் எகிப்தியரின் இஸ்லாம் ஓர் அறிவியல் மதம் எனும் சிந்தனை வழியாக ஆப்கானில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் உத்தி. இது தான் வளைகுடா நாடுகளின் பொருளாதார பலத்தினாலும், அமெரிக்க ஊடக பலத்தினாலும் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இன்றும் எங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ அங்கெல்லாம் இந்த மீட்டுருவாக்க குழுக்கள் இஸ்லாமிய தூய்மைவாதம் பேசி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதே சான்று

Dr.Anburaj said...

இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய மீட்டுருவாக்க வஹ்ஹாபியக் குழுக்கள் வளர்ந்த அதே காலகட்டத்தில் தான், பார்ப்பனிய பாஜகவும் அரசியல் அதிகாரத்தில் வளர்ந்தது. அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எப்படி அமெரிக்காவுக்கு உதவியதோ அதைப் போலவே இந்தியாவில் பார்ப்பனியத்துக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இது தான் வஹ்ஹாபிய இயக்கங்களின் அரசியல். தெளிவாகச் சொன்னால், தன்னைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான உழைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தன்னை உருவாக்கிய முதலாளியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் அதன் இந்தியக் கூட்டாளிக்கும் உதவும் அரசியல்.
இன்று தமிழகத்தில் இயங்கும் பல வஹ்ஹாபியக் குழுக்களுக்கு தாய் அந்த ஜாக் எனும் அமைப்பு தான். அதிலிருந்து பிரிந்து வந்த பல உடைவுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிஜே என அழைக்கப்படும் பி ஜெய்னுலாப்தீன் காரணமாக இருந்திருக்கிறார். தமிழ இஸ்லாமிய இளைஞர்களிடம் மதத்தூய்மைவாதம் தீயைப் போல் பற்றிக் கொள்வதற்கு பிஜேவின் பேச்சாற்றல் ஒரு முதன்மையான காரணி. அதேநேரம் காயிதே மில்லத் மறைவுக்குப் பிறக்கான அப்துல் சமது, அப்துல் லத்தீப் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அரசியலை முழுமையாக கை கழுவி பிழைப்புவாதத்தில் கரைந்து போக விரக்தியுற்ற இஸ்லாமிய இளைஞர்கள் பீஜேவின் எளிமையான தர்க்கவியல் பேச்சால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். அதேநேரம் வளைகுடாவில் கிடைத்த வேலை வாய்ப்பும் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.
எழுபதுகளின் பிற்பகுதியில் உத்திரப் பிரதேசத்தில் அஹ்மதுல்லா சித்திக் என்பவரால் தொடங்கப்பட்ட சிமி அமைப்பின் தமிழகப் பிரிவு, குணங்குடி ஹனீபாவால் தொடங்கப்பட்ட முஸ்லீம் முன்னேற்றக் கழகம், கோவை பாஷாவால் தொடங்கப்பட்ட அல் உம்மா போன்றவை அரசின் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகின. இவற்றில் இருந்தவர்கள் (ஜவாஹிருல்லா, பாக்கர் போன்றோர்) மேற்கூறிய வஹாபிய குழுக்களோடு தங்களை இணைத்துக் கொண்டதும் அரசின் அடக்குமுறை காணாமல் போனது. இவற்றில் சிமியின் தாய் அமைப்பான ஜாமாதே இஸ்லாம் இ ஹிந்த் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து நிற்கிறது.
அரசியல் கலப்பில்லாத இஸ்லாமிய தூய்மைவாதம் பேசுவதாக கூறப்படும் வஹ்ஹாபிய குழுக்களில் ஏன் பிளவுகள் தோன்றுகின்றன? இவ்வாறான அனைத்து பிரிவுகளுக்கும் கொள்கை(!) ஒன்று தான். இஸ்லாத்தின் சன்னி பிரிவை தான் இவர்கள் அனைவரும் பின்பற்றுகிறார்கள். சன்னி பிரிவை பின்பற்றும் நடைமுறைகளில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. பின் ஏன் பிளவுகள்?

Dr.Anburaj said...

ஜாக் தொடங்கி இன்று தவ்ஹீத் ஜமாத் வரை ஏற்பட்டுள்ள அத்தனை குழப்பங்களுக்கும் தனி நபர் ஒழுக்கக் கேடு, பொருளாதார பிரச்சனைகள் தான் காரணமாக முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக ஏன் இந்த வஹ்ஹாபிய அமைப்புகள் தனி மனித கேடுகளில் சிக்குகின்றன? அதன் வழியாக பிளவைச் சந்திக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாறாக, பிஜே, அல்தாபிகளின் பாலியல் நடவடிக்கைகள், அவர்களின் பைலா விதிகள், பிஜேவா அல்தாபியா யார் சரியானவர்?, அதில் சதி இருக்கிறதா? என்பன போன்ற கவைக்குதவாதவைகளை அலசுவது பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ள உதவாது.
என்பதுகளுக்கு முன்பு வரை தமிழக இஸ்லாமியர்களிடம் மதமும் அதன் கோட்பாடுகளும் முதன்மையாக இருந்ததில்லை. வணக்க வழிபாடுகளும் கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர அன்றாட ஐவேளைத் தொழுகைகளுக்கு ஒரு வரிசை நிறைந்தாலே அதிசயம் தான். எல்லா மதத்தினருடனும் கலந்து பழகி ஐக்கியமாக உழைக்கும் மக்களாக வாழ்ந்த காலம். வஹ்ஹாபிய குழுக்கள் தான் மதத்தை முதன்மையாக நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவருகின்றன. இது தான் அன்றைய ஏகாதிபத்தியங்களுக்கு தேவையான அரசியலாக இருந்தது. மிழக வஹ்ஹாபிய குழுக்களின் இருத்தலுக்கு அடிப்படையாகிய பொருளாதார தேவைகளை வழங்குவது வளைகுடா நாடுகளில் இருக்கும் உழைக்கும் மக்களே. அந்த வளைகுடா நாடுகள் முதலாளித்துவ விதிகளுக்கு ஆட்பட்டு நிடாகத் போன்ற சட்டங்கள் மூலம் ஆட்குறைப்பு செய்த போது இந்த வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன? மேலும், தங்களைப் பின்பற்றும் மக்களின் அன்றாட பிரச்சனைகளான விலைவாசி உயர்வு மணமுறிவு போன்ற வஹ்ஹாபிய இயக்கங்கள் செய்ததென்ன? எதுவுமில்லை, அல்லது ஆழமற்ற மேம்போக்கு நடவடிக்கைகள் மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கு உழைக்கும் மக்களின் அரசியல் தேவையே இல்லை மாறாக ஏகாதிபத்திய அரசியல் மட்டுமே தேவை

Dr.Anburaj said...

ஜாக் கில் இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் ஒரு சிலரே எஞ்சி இருப்பதன் காரணம் என்ன? ஏனென்றால் உழைக்கும் மக்களை ஈர்க்கக் கூடிய எந்த அம்சமும் அதில் இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் ஏற்படும் பிரிவினால் பிளவுபடும் இயக்கம் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. காரணம் ஏற்படும் பிளவு உழைக்கும் மக்களின் அரசியலற்ற அதன் தன்மையை தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளி பிளவு பேசு பொருளாக ஆக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள், ஜாக் கில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்றால் இன்றைய பல வஹ்ஹாபிய இயக்கங்களின் செல்வாக்கு ஜாக் கிற்கு கிடைத்திருக்குமா?
ஆம். ஒவ்வொரு முறை ஏற்பட்ட பிளவின் மூலம் மட்டுமே, அதன் வழியேயான எதிரெதிர் போட்டி மனப்பான்மையால் மட்டுமே தமிழகத்தில் வஹ்ஹாபிய இயக்கங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.பிஜே என்பவர் மீதான நாயக பிம்பமும் இதற்கு துணை செய்தது. இதனைத் தாண்டி அந்த இயக்கங்களில் எதுவுமில்லை. இதற்கு இன்றைய காலங்களில் புதிய இளைஞர்களை அந்த இயக்கங்கள் ஈர்க்க முடியாமல் திணறுவதையே போதுமான சான்றாக கொள்ளலாம்.இப்போது ஒரு முக்கியமான கேள்விக்கு திரும்புவோம்.

அல்தாபி, பிஜே, சைபுல்லா ஹாஜா, பாக்கர் இன்னும் பலர் மீது ஏன் பாலியல், கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன? அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே என்று கம்பீரமாக முழங்கும் இவர்களால் ஏன் சமூகத்தில் அப்பழுக்கற்றவர்களாக நல்லவர்களாக இருக்க முடிவதில்லை?

Dr.Anburaj said...

இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஊழலிலும், முறைகேடுகளிலும், ஆணாதிக்கத்திலும் மூழ்கிக் கிடப்பதற்கு இது ஒன்றே காரணம். அவர்களுக்கு சமூகம் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. சமூகத்தின் இயக்கத்தை இயங்கியல் பார்வையோடு அவர்கள் அணுகுவதில்லை. அதனால் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. மதம் ஒரு போதும் சக மனிதர்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள தூண்டாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாத்துக்குள் நடக்கும் மோதல்களே போதுமான சான்றாகும். இஸ்லாத்தையே தன் பேச்சாலும் விளக்கங்களாலும் தூக்கி நிறுத்தி இருப்பதாக கருத்தப்படும் பிஜே மீது அன்றிலிருந்து இன்று வரை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இவைகளை அவர் எதிர்கொண்ட விதத்தை நேர்மையான மீளாய்வுக்கு உட்படுத்திப் பாருங்கள். மதமும், வேதங்களும் அது கொடுக்கும் நீதி போதனைகளும் மனிதனை நேர்மையானவர்களாக நிலைநாட்டுவதற்கு போதுமானவை அல்ல என்பதை அந்த மீளாய்வு உங்களுக்கு புலப்படுத்தும்.

Dr.Anburaj said...

இஸ்லாமிய இளஞர்களே! உங்கள் மத நம்பிக்கைகள் எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும். அது இப்போதைய பிரச்சனை அல்ல. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை பின் தள்ளி வைத்துவிட்டு இருக்கிறார் என்றே கொள்வோம். நீங்கள் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, சக மனிதர்களுக்கு உண்மையானவர்களாக மாற விரும்பினால், முதலில் சக மனிதர்களைப் பாருங்கள். உழைத்தே உடல் வற்றிப் போன அந்த மக்களின் நிலைக்கு காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது என்று சிந்தியுங்கள்.
நம்முடைய அன்றாடப் பிரச்சனைகள் என்ன? விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. தொழில்துறை கார்ப்பரேட்டுகளுக்கான இயந்திரங்களாகவும் மக்கள் அதில் சிக்கி பிழியப்படும் கரும்புகள் போலவும் மாற்றப்பட்டு விட்டன. நீர், நிலம், காற்று என சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுகிறது. கனிம வளங்கள் வகைதொகையின்றி கொள்ளையிடப்படுகின்றன. இவைகளின் விளைவுகள் தான் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். இவைகளை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்?
நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் நெறிமுறைகளில் இதற்கு தீர்வு இருக்கிறதா என்று சிந்தியுங்கள். இருக்கிறது என்றால் விளக்குங்கள் நாங்களும் உங்களோடு வருகிறோம். இல்லை என்றால் இந்த மக்களையும், சமூகத்தையும், இயற்கையையும் காப்பாற்ற எங்களோடு ஏன் நீங்கள் இணையக் கூடாது?
நன்றி செங்கொடி 273.2018

Dr.Anburaj said...

இஸ்லாம் இந்தியாவில் எப்போது பரவியது என்பதற்கு, துல்லியமாக இந்த ஆண்டில் தான் பரவியது என்பதற்கு சான்றாதாரம் எதுவுமில்லை. ஆனால் ‘உணர்வு’ கும்பல் முகம்மதின் காலத்திலேயே அதாவது 630 லேயே பரவியது என்று அடித்து விட்டிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்று எதனையும் அவர்கள் காட்டவில்லை. என்றாலும், பொதுவாக முஸ்லீம்கள் முகம்மதின் காலத்திலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவியதாக நம்புகிறார்கள்(!) எந்த அடிப்படையில் இப்படி நம்புகிறார்கள் என்றால், முகம்மது நிலவை பிளந்து காட்டியதாக ஒரு கட்டுக்கதை குரான், ஹதீஸ்களில் உண்டு. இந்த நிலவு பிளந்த நிகழ்ச்சியை இந்தியாவிலிருந்து ஒருவர் பார்த்து அவர் முஸ்லீமாக மாறினார் என்றொரு கதை முஸ்லீம்கள் மத்தியில் உலவுகிறது. இந்த கதையின் அடிப்படையில் தான் ‘உணர்வு’ கும்பல் 630 களிலேயே இஸ்லாம் இந்தியாவில் பரவி விட்டதாக கதையளக்கிறது.
முகம்மது நிலவை பிளந்து காட்டிய அதே காலத்தில் இந்தியாவில் கேரள பகுதிகளை ஆண்டு வந்த சேரர் தொண்டைமான் எனும் மன்னர் நிலவு பிளந்ததை தன் கண்களால் பார்த்து, கடல் வழியாக அரபு நாட்டுக்குச் சென்று முகம்மதை சந்தித்து இஸ்லாத்தை தழுவுகிறார். பின்னர் தரை வழியாக இந்தியாவை நோக்கி திரும்பும் வழியில் ஓமன் நாட்டில் மரணித்து விட, அவரின் சமாதி இன்றும் ஓமனில் உள்ளது. பின்னர் அவருடன் அனுப்பி வைக்கப்பட்ட மாலிக் பின் தீனார் என்பவர் இந்தியா வந்து இஸ்லாத்தை பரப்பினார் என்று ஈர்க்கும் வண்ணம் கதை சொல்கிறார்கள். ஆனால் கதைகள் உண்மை ஆகி விடுவதில்லையே.
தொண்டைமான் என அழைக்கப்படும் சேரமான் பெருமான் பாஸ்கர ரவி வர்மாவின் காலம் எட்டாம் நூற்றாண்டு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மது நிலவை பிளந்ததை எப்படி பார்க்க முடிந்தது? முகம்மதை எப்படி சந்திக்க முடிந்தது?
மக்காவில் முகம்மதை சந்தித்துவிட்டு கடல் வழியாக திரும்பினாலும், தரை வழியாக திரும்பினாலும் தற்போது ஓமன் நாட்டிலிருக்கும் சலாலா எனும் நகருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரின் சமாதி இருப்பது சலாலா நகரில். இது எப்படி நேர்ந்தது?
அன்றைய அரேபிய பகுதியில் அருகில் இருந்த நாடுகளுக்கு முகம்மது கடிதம் அனுப்பிய செய்திகள் கூட அதிகாரபூர்வ ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது, தூரப் பகுதி நாடான இந்தியாவிலிருந்து ஒரு மன்னரே முகம்மதை தேடி வந்து மதம் மாறி பின் அவருடன் மாலிக் பின் தீனார் எனும் பிரச்சாரகரையும் அனுப்பி வைத்தனர் என்றால் அந்தச் செய்தி அதிகாரபூரவமான ஹதீஸ்களில் இடம் பெறாமல் போனதெப்படி?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பது யார்? ‘உணர்வு’ கும்பல் ஒருபோதும் விடையளிக்காது. பரிசீலனையுள்ள முஸ்லீம்கள் தான் விடையளிக்க வேண்டும். எனவே, 630 களிலேயே இந்தியாவில் இஸ்லாம் பரவிவிட்டது என ‘உணர்வு’ கும்பல் கூறுவது கலப்பற்ற கட்டுக்கதை. இஸ்லாம் இந்தியாவில் எதனால் பரவியது என்பதில் ‘உணர்வு’ கும்பலின் மதவாதப் பொய்களைக் காணலாம்.

Dr.Anburaj said...

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பதை மேலோட்டமாக பார்த்தால் வெகு யதார்த்தமாக தெரியலாம். ஆனால், இஸ்லாம் ஆணுக்கு வழங்கியிருக்கும் கலவிச் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தான் இதன் முழுமையான பொருளாக பெண் ஆணுக்கான காமப் பதுமை என்பது விரியும். ஆண் நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டவன், மட்டுமல்லாது அடிமைப் பெண்கள் இருந்தால் அவர்களை எண்ணிக்கை வரம்பின்றி கையாளவும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றவன். பெண்ணோ ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டவள். அதாவது ஒரு மனைவி மறுத்தாலும் ஆணுக்கு கல்வி இன்பம் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடு இருக்கிறது. மனைவி அதற்காக காத்துக் கிடப்பவளாகிறாள். இந்த நிலையில் யார் அழைத்து யார் மறுக்கக் கூடாது எனும் விதி வந்திருக்க வேண்டும்? மாறாக அல்லா பெண்ணை சபிக்க உத்தரவிட்டிருக்கிறார். என்றால் அவரின் பார்வை பெண் ஆண்களுக்கான காமப் பதுமை என்பதாக இருக்கிறது என்பதல்லவா உண்மை.
பெண் -மனைவி - அழைத்து கணவன் - ஆண் மறுக்கக் கூடாது என்பதுதான் அல்லாவின் விதியாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் குரான் ஒரு அரேபிய வல்லாதிக்க புத்தகம்.பெண்அடிமைத்தனம் பேணும் ஒரு புத்தகம்.எனவே அது பெண்ணிற்கு மீண்டும் நிபந்தனைகளை விதிக்கின்றது.
நன்றி செங்கொடி

Dr.Anburaj said...

அல்லாஹ்வே..! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே..! நீ நாடியோருக்கு அதிகாரத்தை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து அதிகாரத்தைப் பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய். நீ நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக!"
----------------------------------------
அல்லா என்ற ஆட்சி அதிகார புரோக்கரா ? அட்சியாளா்களை தோ்வு செய்வது எபப்படி என்பது குறித்து முடிவான கருத்து என்ன என்பதைச் சொல்லமல் மக்களை ஏமாற்ற இப்படி சல்லி அடிப்பது எமாற்று வேலை.மதம் கடவுள் என்ற பெயரில் நடக்கும் மோசடி.