Followers

Saturday, March 17, 2018

மத்ஹப்வாதி(சாதி)யும் ஏகத்துவவாதியும்......


மத்ஹப்வாதி(சாதி)யும் ஏகத்துவவாதியும்......

மத்ஹப்வாதி: அண்ணே! அஸ்ஸலாமு அலைக்கும்...

ஏகத்துவவாதி: வஅலைக்கும் சலாம்... சவுக்கியமா?

'சவுக்கியம்.... அபு அப்துல்லா பிரிந்து போனப்போ இப்படித்தான் நினைச்சேன்'

'என்ன நினைச்சே..'

'ஏகத்துவம் ஒழிந்தது என்று..ஆனா ஒழியல'

'சரி... இக்பால் மதனி ஒதுங்கினப்போ ஏகத்துவம் ஒழிந்ததா?'

'இல்லண்ணே.... அதை விட அதிகமாத்தான் பெருகியது'

'அப்புறம்... கமாலுதீன் மதனி தனியா பிரிஞசு போனாரே... அப்பவாவது...'

'இல்லண்ணே.... அப்பவும் ஏகத்துவத்துவம் அதிகரித்ததை பார்த்தேன்'

'பிறகு வாத்தி ஜவாஹிருல்லாஹ் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் தமுமுகவை தனியாக பிரித்து சென்றாரே.... அப்பவாவது ஏகத்துவம் வீழ்ந்ததா?'

'இல்லண்ணே... அதன் பிறகுதான் தாறுமாறாக ஏகத்துவம் வளர்ந்து. கும்பகோணமே குலுங்கியதை பார்த்தோமே....'

'அதெல்லாம் போகட்டும்.... ஹாமித் பக்ரி விலகினாரே... அப்பவாவது'

'இல்லையே... கடைசியில் அவரு சமாதிக்கு முன்னால நின்னுகிட்டு ஃபாத்திஹா ஓதின கூத்தை பார்த்தோமே...'

'பாக்கர் விலகுனாரே ஏதாவது மாற்றம்'

'நானும் சந்தோஷப்பட்டேண்ணே... வழக்கமா ஏகத்துவாதிகளுக்குத்தான் இங்கும் வெற்றி'

'கடைசியா... அல்தாஃபி விலக்கப்பட்டாரே... ஏதாவது மாற்றத்தை பார்த்தியா'

'இல்லண்ணே... தலைவரையே விலக்கி இந்த இயக்கம் இவ்வளவு கட்டுக் கோப்பா இருக்குறதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்... அண்ணே....'

'சரி... இப்போ பிஜே குடும்ப பிரச்னையை காரணமாக்கி தலைமை பொறுப்பிலிருந்து விலகினாரே... அப்போவாவது மாற்றங்கள் ஏதாவது'

'இல்லண்ணே... எனக்கு மேலும் ஆச்சரியத்தை கொடுக்குதுண்ணே...'

'இதுல ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லப்பா.... இது இறைவனுடைய மார்க்கம். இதனை பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டுள்ளான்.'

"நாமே அறிவுரையை (வேதத்தை) அருளினோம் நாமே இதைப் பாதுகாப்போம்." (திருக்குர்ஆன் 15:9)

No comments: