மார்க்கம் தெரியாத மர மண்டைகள்!
விபசாரம் புரிபவன்: வட்டி வாங்குபவன்: பள்ளிவாசல் சொத்தை திருடுபவன்: குடிகாரன்: அனாதைகளின் சொத்தை அபகரிப்பவன்: அநியாயமாக கொலை செய்தவன் போன்ற பெரும் பாவங்களை செய்தவன் பள்ளிக்குள் நுழையக் கூடாது என்று போர்டு வைக்க இந்த நிர்வாகிகளுக்கு தைரியம் உண்டா? அவ்வாறு வைத்தால் நிர்வாகிகளிலேயே பலர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.
குர்ஆன் (அத்தவ்பா : 18)
1 comment:
விபசாரம் புரிபவன்: வட்டி வாங்குபவன்: பள்ளிவாசல் சொத்தை திருடுபவன்: குடிகாரன்: அனாதைகளின் சொத்தை அபகரிப்பவன்: அநியாயமாக கொலை செய்தவன் போன்ற பெரும் பாவங்களை செய்தவன் பள்ளிக்குள் நுழையக் கூடாது என்று போர்டு வைக்க இந்த நிர்வாகிகளுக்கு தைரியம் உண்டா? அவ்வாறு வைத்தால் நிர்வாகிகளிலேயே பலர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள
------------------------------------------------------
இப்படி ஒரு அறிவிப்பு இந்து ஆலயங்கள் கிறிஸ்தவ சர்ச் முகப்பில் வைத்தால் சிக்கல்தான். எத்தனைபேர் தகுதி பெற்றிருப்பார்கள் ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
--------------------------------------------------------------------------
எல்லா மதத்திலும் கழிசடைகளுக்கு பஞ்சமில்லை. கழுதை விட்டையில் முன் விட்டைவேறா பின் விட்டை வேறா ” என்பார்கள். இந்த வகையில் வீட்டுக்கு வீடு வாசல்படிதான். தௌஹீத்ஜமாத் பள்ளிவாசலுக்கும் அதுதான் கதி.
-----------------------------------
தொப்பி அணிந்துான் தொழுகைக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு யாரையும் உறுத்த வேண்டியதில்லையே. அது முடியாத காரியமா ? முஸ்லீம்கள் அனைவரும் தொப்பி அணிந்தே காணப்படுகின்றார்கள்.அப்படி இருக்கும்போது இந்த அறிவிப்பில் என்ன பிழை,யாருக்கு என்ன கஷ்டம். தாங்கள் வலிந்து ஏதோ காரயம் செய்வதுபோல் உள்ளது.சுன்னத் ஜமாத் காரன் இருந்து விட்டுதான் போகட்டுமே. அவர்களிலும் நல்லவர்கள் 4 பேராவது நிச்சயம் இருப்பார்கள். சில சடங்குகளை முன்னிறுத்தி அவர்களை மலினப்படுத்துவது திமிா் கா்வம் மமதை ஆவணம் தற்பெருமை ஆகும்.
தங்களுக்கு மேற்படி நோய் பிடித்துள்ளதோ என்று நினைக்கின்றேன்.
ஏகத்துவம் என்ற சொல்லி பிறரை தாழ்வாக நினைத்து கா்வம் கொ ண்டு அலைய தேவையில்லை.
அதுவே பாவம்
Post a Comment