Followers

Wednesday, March 07, 2018

மீனாட்சிபுரத்தின் இன்றைய நிலை!


மீனாட்சிபுரத்தின் இன்றைய நிலை!

முன்பு மீனாட்சிபுரமாக இருந்து இன்று ரஹ்மத் நகராக மாறியுள்ள கிராமத்துக்கு சில ஆண்டுகள் முன்பு பிபிசி குழு கள ஆய்வுக்கு சென்றிருந்தது. அதனை மேற்கொண்டு பார்போம்.

தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'


'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.


'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'


'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'


'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'


'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'


பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம். 

நன்றி:
பிபிசி தமிழோசை

1 comment:

Dr.Anburaj said...

இந்துக்கள் படிக்க வேண்டிய படித்த பாடம் இது. மீண்டும் நினைவு படுத்தியதற்கு.
முறையான சமய கல்வி 1000 ஆண்டுகளாக இந்துக்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது.
நாட்டை ஆண்ட மன்னா்கள் மக்கள் நேயம் அற்றவர்களாக இருந்தார்கள். காலம் மாறிக்கொண்டு இருக்கின்றது.