தினம் ஒரு தகவல்
நாள் : 18-03-2018
ஒரு முறை நபி (ஸல்)
அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள்.
நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது
நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள்.
நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்
பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க
மக்கள் நிற்பார்களே... அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு
செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தினால்
நீங்களும் நின்று தொழுங்கள். அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து
தொழுங்கள் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 701
No comments:
Post a Comment