நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் - உச்சநீதி மன்றம்.
குஜராத்தில் 2005-ல் நடந்த சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கு மும்பை சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.நீதிபதி லோயோ விசாரித்து வந்தார். புனேயில் உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அங்கு லோயா அங்கு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். நீதிபதி தீபக் மிஸ்ரா, லோயா மரணத்தில் லேசான சந்தேகம் இருப்பது போல் தெரிகிறது என்றார். சந்தேகம் ஊர்ஜிதமானால் தனி நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் என கூறப்படுகிறது.
தகவல் உதவி
தினமலர்
6-3-2018
நீதிபதி லோயா யாரால் ஆள் வைத்து தீர்த்துக் கட்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். குற்றவாளி அரசு பாதுகாப்போடு உலா வருகிறார். இதற்கெல்லாம் என்னதான் முடிவு?
No comments:
Post a Comment