Followers

Sunday, March 18, 2018

45 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த நேர்மையாளர்கள்!


45 ஆயிரம் பணத்தை ஒப்படைத்த நேர்மையாளர்கள்!

"வழித்தவறிய மூதாட்டியும் 45 ஆயிரம் பணத்தையும் உரியவரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தும்."

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
திருக்குர்ஆன்  99:7

காரைக்கால் மாவட்டம் பெரிய பள்ளிவாசல் அருகே போதிய உணவில்லாமல் உடல்மெலிந்து ஆரோக்கியமில்லாத நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த முன்பின் அறிமுகமில்லாத ஓர் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி ஆதரவற்ற நிலையில் மூன்று நான்கு நாட்களாக சுற்றி திரிவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாவட்ட செயலாளர் சகோதரர் ஜாகிர் அப்பாஸிற்கு தகவல் வரவே, கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டனர்.

வழிதவறி வந்த வயதான அம்மையார் வைத்திருந்த கைபையை சோதனையிடவே அதில் சில மருந்து சீட்டுகளும், சில பேப்பர் அட்டைகளும் கூடவே 45 ஆயிரம் பணமும் பேங்க் பாஸ் புக்கும் இருந்தது.

45 ஆயிரம் பெரும் தொகையுடன் வயோதிகத்தால் உண்டான நியாபக மறதியும், ஆதரவில்லாமல் மூன்று நான்கு நாட்களாக வீதியில் பரமரிப்பு இல்லாமல் படுத்திருந்த இந்த தாயரை பற்றி அல்லாஹ்வின் திருப்தியை நாடி நிஜமான அக்கறை கொண்டு இவரையும் இவர் வைத்திருந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தையும் உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இறங்கினர்.

கைபையில் பணத்துடன் வைத்திருந்த பேங்க் பாஸ் புக்கில் உள்ள தொடர்பு நம்பரை கொண்டு விசாரிக்கவே இவர் நெல்லை மாவட்டம், தென்காசியை அடுத்த பாபநாசம் , சுரண்டை என்னும் தகவல் கிடைத்ததின் மூலம் ஒருவழியாக அவர்களின் மகனையும், மகளையும் கண்டுபிடித்துவிட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.!!

காரைக்கால் மாவட்ட மர்கஸ்ஸில் மூதாட்டியின் மகளும், கல்லூரியில் படிக்கும் பேரனும் வரவே, இவர்கள் மூதாட்டியின் உறவினர் தான் என உறுதிபடுத்தும் விதமாக ஆதார் கார்டு உட்பட பல சான்றுகளை கொண்டு வந்து உறுதிப்படுத்தினர்.

இந்த மூதாட்டி ஒரளவிற்கு செல்வ செழிப்புடன் இருந்தவர், தனக்கு சேர்ந்த ரூபாய் 45 ஆயிரம் பணத்தை எப்போதும் கையில் வைத்து கொண்டே பேங்கில் டெப்பாசிட் செய்கிறேன் என்று கூறி பல நாட்களாக நடந்தாரம். பின்னர் எப்படியோ நாகூர் தர்ஹாவிற்கு வீட்டிற்கு தெரியாமல் வந்து பின்னர் நாகூரிலிருந்து வழிதவறி காரைக்கால் வந்துவிட்டார்.

இந்த தகவலை வந்திருந்த மகனும் மகளும் உறுதிபடுத்தவே, தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் "பெற்றோரை பேணுதல்" என்கிற தலைப்பில் இஸ்லாம் கூறுபவைகளை தெள்ளதெளிவாக எடுத்துகூறப்பட்டு வயதான மூதாட்டியையும் 45 ஆயிரம் பணத்தையும் அவர்களிடம் அல்லாஹ்வை முன்னிறுத்தி ஒப்படைக்கப்பட்டது.

மனநிறைவுடன் தவறிய பெற்றோரையும், பணத்தையும் மனமகிழ்வுடன் ஏற்று கொண்டனர். இதற்கு மிக பெரிய முயற்சி எடுத்து பெரும்பாடுப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காரைக்கால் மாவட்ட நிர்வகத்திற்கு நன்றியை கூறினார். "நன்றியும், புகழும் அல்லாவிற்கே உரிதாகட்டுமாக" என்று கூறி மனநிறைவுடன் அல்லாஹ்வின் கூலியை எதிர்ப்பார்த்தவறாக அந்த மூதாட்டியை வழியனுப்பினோம்.

அல்ஹம்துலில்லாஹ்..!!

(மனிதர்களே!) நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை.

திருக்குர்ஆன்  10:61

நெஞ்சை நெகிழ வைத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணியை அல்லாஹ் பொருந்தி கொள்ள துஆவா செய்யுங்கள்.




No comments: