Followers

Saturday, November 24, 2018

இந்தியா உலகளவில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக வந்துள்ளது.

புதுதில்லி:
மத வன்முறை நடக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா உலகளவில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளரான மார்க் ப்ரோமகர் என்பவர் தலைமையில், உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களின் உதவியுடன் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மதம் சார்ந்த பிரச்சனைகள் என்ன நடக்கின்றன; சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகின்றனர்? என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு, மொத்தம் 196 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், 38 நாடுகளில் மத அடிப்படையிலான வெறுப்புணர்வும், அதில், 18 நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான பெரும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த 18 நாடுகளில், முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தகவல் உதவி
தீக்கதிர்
24-11-2018

4 comments:

vara vijay said...

Who are the other four. All will be Muslim majorities.

ASHAK SJ said...

I see the news that bomb blast in afganistan, i really wonder because the dont have food to eat, then how they got bombs and sophisticated weapons?

suvanappiriyan said...

அஷாக்....

வெரி சிம்பிள்... இதனை கொடுப்பதே மேற்கத்திய வாதிகள். அவர்களுக்கு ஆயுத வியாபாரம் நடக்க வேண்டும்.

ASHAK SJ said...

ஏது பணம்?