Followers

Saturday, November 17, 2018

தவ்ஹீத் ஜமாஅத் மீட்பு பணியால் மனமகிழும் மாற்று மத சகோதரர்கள்

தவ்ஹீத் ஜமாஅத் மீட்பு பணியால் மனமகிழும் மாற்று மத சகோதரர்கள்

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் ஒருசில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு செய்ய வேண்டிய மீட்பு பணிகளை எதிர்பாராமல் மக்கள் நலனை கருதில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் வழிகாட்டுதலின் படி ஏகத்துவ தொண்டர் படை களத்தில் இறங்கியது.

வீதியெங்கும் கஜா புயலால் சரிந்து கிடந்த மின் கம்பங்களை அற்புறபடுத்தியும், சாலையெங்கும் முறிந்து கிடந்த மரங்களையும் வெட்டி ஒழுங்குபடுத்தியும் மக்களின் இயல்புநிலைக்கு கொண்டுவரும் பணிகளை செய்து வருகிறனர்.

இந்நிலையில் திருத்துறைபூண்டியில் உள்ள ஒரு இந்து சமுதாயத்தை சார்ந்த கோவில் பகுதியில் மக்கள் நடைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் மீட்பு குழு உடனடியாக இப்பகுதியில் வந்து பாதையை சரிசெய்யும் பணியில் இறங்கினர்.

மாநில நிர்வாகிகளுடன் TNTJ மீட்பு பணியில் ஈடுப்படிருந்த குழுவினரை அப்பகுதி மாற்றுமத பொதுமக்கள் மனதார பாராட்டினார்கள்.

இம்மக்களின் பாராட்டையும் நன்றியையும் அல்லாஹ்விற்கே உரித்தாகட்டும்...

''இறை நம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


No comments: