ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.
ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.
இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.
இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.
'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'
-குர்ஆன் 6:125
எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.
7 comments:
no science in koran.
இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம்.
-------------------------------------------
இப்படி வாதிடுபவா்கள் முஸ்லீம்களில் நிறைய பேர்கள் உள்ளார்கள்.
-------------------------------------------------------------------------
இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.
'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'
-குர்ஆன் 6:125
இந்த வசனத்தில்
01) காற்றில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராண வாயு -ஆக்சிஜன் உள்ளது என்ற கருத்து இல்லை.
02. காற்றினால் அழுத்தம் எற்படுகின்றது என்ற கருத்தும் இல்லை
03.தரை மட்டத்தில் இருந்து உயரே செல்ல செல்ல ஆக்சிஜன் அளவு காற்றின் அழுத்தம் குறைகின்றது என்ற கருத்து இல்லவே இல்லை.
04.மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் என்ற வாயு தேவை என்ற கருத்தும் இல்லை.
05.விண் வெளி வீரா்கள் பற்றி முகம்மது அறிய மாட்டாா்.
06. அவர் விண்வெளிக்க புராக்கு என்றகுதிரையில் சென்ற கட்டுக் கதையைச் சொல்லும் போதும் பல வா்ணனைகளைச் சொல்கிறாா்.
07.ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். --இநத கருத்து புதிய கருத்துக்களை ஏற்கும் ஒரு மனோநிலையை எடுத்துக் காட்டுவதாகத்தான் பொருள் கொள்ள முடியும்.
08.அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'அதாவது புதிய கருத்துக்களை ஏற்காத ஒரு மனநிலையில் அவன் இருப்பான் என்பததான் பொருள்.
அதில் அறிவியல் இல்லை.இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லை இல்லவேயில்லை.
08.அ. மனிதனின் நல்வாழ்விற்கும் பாவ வாழ்விற்கும் அல்லாதான் காரணம் என்கிறது.-நியாயத்தீா்ப்பு நாளில் அலலா ஒருவருக்குதான் தண்டனை அளிக்க வேண்டும் என்ற அசிங்கமான கருத்துதான் உள்ளது.

அசக் ஐயா அசக் என்ன! மௌத்தாகிப் போனாரா ?
ஆவேசமான பதிவுகளைப் போடுவாரே .
மனநிலை பாதிக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சோ்ந்து விட்டாரா ?அதுவும் நன்றுதான்.
ஜமால் முஹம்மது கல்லூரி சதக் அப்துல்லா கல்லூரி மற்றும் முஸ்லீம்கள் நடத்தும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் முஸ்லீம் மதத்தைச் சோ்ந்த இயற்பியல் பேராசிரியா் யாராவது சுவனப்பிரியன் ல் வெளியிடப்பட்டுள்ள மேற்படி கருத்தை ஏற்று பதிவை செய்ய முன் வந்தால் தாங்கள் வெளியிடலாமே.
முஸ்லீம் பேராசிரியா்களே முன்வாருங்கள்.
தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
i dont want argue with stupids
Post a Comment