Followers

Thursday, November 15, 2018

கல்லூரி மிரட்டல்... பேராசிரியர் தற்கொலை..!

கல்லூரி மிரட்டல்... பேராசிரியர் தற்கொலை..!
நம் நாட்டு கல்லூரிகளின் இது போன்ற அராஜகமான செயல்களுக்கு ஒரு முடிவில்லையா?
எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. எனது மூத்த மகன் பொறியியல் படிப்பில் சேர்ந்து முதலாண்டிலேயே என்ன காரணத்தினாலோ அவனுக்கு கல்லூரி பிடிக்கவில்லை. எனவே வேறு கல்லூரிக்கு மாற்றச் சொன்னான். அப்போது நான் சவுதியில் இருந்தேன். எனவே உறவினர்களை விட்டு வேறு கல்லூரிக்கு மாற்றும் வேலைகளை செய்யச் சொன்னேன். ஆனால் கல்லூரி நிர்வாகமோ மீதி உள்ள மூன்று ஆண்டுகளுக்கான முழு பணத்தையும் கொடுத்தால்தான் சான்றிதழ்களை தருவேன் என்று சொல்லி விட்டனர். கல்லூரி தாளாளரோ திமுக முன்னால் அமைச்சரின் நெருங்கிய உறவினர். பெரும் சிக்கல். ஒரு மாதம் அவசர விடுப்பு எடுத்துக் கொண்டு இதற்காக ஊர் சென்றேன். பையனின் படிப்பல்லவா?
முதலில் கல்லூரி நிர்வாகத்தோடு பேசிப் பார்த்தேன். மசிவதாக தெரியவில்லை. ஒரு வக்கீலை பிடித்து கவர்னர், அண்ணா யுனிவர்சிடி, மாவட்ட கலெக்டர், என்று அனைவருக்கும் "எனது மகனின் படிப்பை வீணாக்குகின்றனர்" என்று ஒரு மனுவை அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் கழித்து கல்லூரி முதல்வரிடமிருந்து எனக்கு போன் வந்தது. உடனே கல்லூரிக்கு என்னை வரச் சொன்னார்கள். நானும் சென்றேன். முதல்வர் என்னிடம் 'என்ன சார் மூன்று நாட்களாக எனக்கு தூக்கம் இல்லை. கலெக்டரிடமிருந்து ரொம்பவும் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு லட்சமாவது கொடுங்கள். சான்றிதழ்களை தந்து விடுகிறோம்' என்று சமரசத்துக்கு வந்தார்.
எனக்கோ சரியான கோபம். "ஒரு ரூபாய் கூட தர முடியாது. சான்றிதழ்களை தரவில்லை என்றால் கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுப்பேன்" என்றேன். பல அலைக்கழிப்புக்குப் பிறகு சான்றிதழ்களை தந்தனர். உடன் வேறு கல்லூரியில் சேர்த்து படிப்பையும் முடித்து விட்டான் எனது மகன்..
போராடி எதனையும் சாதிக்க வேண்டும். இது போன்று கோழைத்தனமாக தற்கொலையை நாடக் கூடாது என்பதற்காகவே இதனை இங்கு பதிகிறேன்.


-4:57

4 comments:

Dr.Anburaj said...

தற்காலை செய்ய நினைப்பவனுக்கு மகத்தான தைரியம் வரும். சுவாமி விவேகானந்தா் சொன்ன கதை
ஒரு ஊரில் நடுபஜாரில் ஒருஉயா்ந்த ஆஜாகுவான முரட்டு தோற்றம் கொண்ட ஒருவன் ஒரு போர்யால்தன்உடலை மூடிக்கொண்டு அவ்வழியே செல்பவா்களை அழைத்து அவரிகளிடம் இருப்பதை பறித்துக் கொள்வான்.மிகப்பெரிய நகரத்தில் அவனை தட்டிக்கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. பக்கத்து ஊரைச் சோந்த ஒருவன் வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்ய முடிவு செய்து செல்கிறான். இவனை அந்த கேடி வழி மறித்து அவனிடம் இருப்பதை கொடுக்க கேட்டு மிரட்டுகின்றான். இவனிடம் அசாத்தியமான தைரியம் பிறந்து விட்டது.உடனே கேடியை அடித்து உதைத்து விடுகின்றான். கைகலப்பில் கேடியின் போா்வை வீழே விழுந்து விட்டது. ஆச்சரியம். கேடிக்கு இரண்டு கையும் இல்லை. இரண்டு கையும் இல்லாத ஒரு கேடி வெறும் தோற்றத்தை வாய் சவுடாலை மட்டும் வைத்து எத்தனைவருடங்கள் ஒரு ஊரையே ஏமாற்றியிருக்கின்றான் பாருங்கள். இதுதான் நமது நிலை.உயிரைப்பற்றிய பயம் பற்று இல்லாதவன் மகத்தான துணிவு பிறக்கும்.செயல் திறன் மிகும்.
------------------------------------------------------------------------
பொறியியல் பட்டம் பெற்று கிழித்த இந்த கோழை ஒருநாளாவது விவோகானந்தரின் ஞானதீபத்தை படித்தால் கல்லூரி நிா்வாகததை பணியவைத்திருப்பான்.

ASHAK SJ said...

இரண்டு கையும் இல்லாத ஒரு கேடி வெறும் தோற்றத்தை வாய் சவுடாலை மட்டும் வைத்து எத்தனைவருடங்கள் ஒரு ஊரையே ஏமாற்றியிருக்கின்றான் பாருங்கள்.

# Dedicated to Modi#

Dr.Anburaj said...

suvanappriyan is a Muslim and Asak is also a Muslim.
Both are slaves to Arabian imperialism.Mr.Narendra Modi is an honest pious Hindu dedicated to the welfare of India and Indians.
-------------------------------------------------
அசக் ஒரு அரைப் பைத்தியம். இவன் ஒரு முஸ்லீம் என்பதால் இவனது தகுதியற்றப் பதிவுகள் வெளியிடப்படுகின்றது. Suvanappriyan is a Nepotist.

ASHAK SJ said...

Idiot, we are not slave, we pray in tha masjid with all nationalities includes arabs, so whole muslims are equal, but in parppana religion, u cant enter temple, cant touch statue, your grandma not allowed to cover her breast, need to pay breast tax, so think twice before to say something. Finally you are sudra, slave of bramin.