காவிகளின் மிரட்டலுக்கு தோழர் பினராயி விஜயனின் பதிலடி
சபரிமலை காரணம் காட்டி வேண்டாத காரியங்களை முன்னெடுத்து நாட்டில் குழப்பங்களை உருவாக்கலாம் என்று புறப்படுவர்கள் மிக மோசமான நிலையை சந்திப்பீர்கள் என்றே கூறுவேன்.
இதனிடையில் ஒரு மிரட்டலை ஒரு பிஜேபி (பொன். ராதாகிருஷ்ணன்) தலைவர் கூறுகிறார், பினராயி விஜயனை மிதித்து கடலில் தள்ளுவேன் என்று...
ஆனால் பினராய் விஜயனை மிதிக்கும் சக்தி உன் காலுக்கு இல்லை. இருக்கும் கொஞ்ச சக்தி காலை வைத்து இங்கு வருவது உனக்கு சரியில்லை..
இராதாகிருஷ்ணன் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இந்த (என்) சரீரம் மிதி படாத சரீரம் இல்லை. மிதி வாங்கிய சரீரம், பூட்ஸ் கால்களால் அதிகம் மிதி வாங்கிய சரீரம் இது. அதற்காக இராதாகிருஷ்ணன் ஏறி விளையாடும் இடம் என்று நினைக்க வேண்டாம். பெரிய விளைவு சந்திக்க நேரிடும் பார்த்து கொள். அப்படி ஒரு நினைப்பு உண்டு என்றால் அதை உன் மனதில் வைத்து கொள்.
வைக்கோல் வைத்து சில விசயங்கள் சிலர் செய்வது போல, கடற்கரையில் வைக்கோல் கொண்டு உருவத்தை செய்து அதை மிதித்து "விஜயன் கடலில்" என்று கூறி அமைதி அடைந்து கொள். அதை விட்டு விட்டு நீங்கள் (காவிகள்) கூறிய எந்த மிரட்டல்களையும் எந்த காலத்திலும் நான் கண்டுகொள்வதே கிடையாது என்று புரிந்து கொள்ளும் அறிவு கூட உனக்கில்லையா ராதாகிருஷ்ணனா.?
"கேரளாத்தின் முதலமைச்சரையே நாங்கள் ஆக்கோரமனம் செய்வோம் எனில் மற்றவர்களை விடுவோமா.? ஏனெனில் நாங்கள் (காவிகள்) வில்லாதிவில்லன்கள்..." என்று பிதற்றுகிறீர்கள்.
அடேய்.! நீங்கள் ஒரு வில்லாதி வில்லன்களும் கிடையாது. இதை வேறு இடத்தில் போய் கூறுங்கள். இந்த வித்தைகளை இங்கு காட்டவேண்டாம். இது கேரளாவாகும், கேரளா சமூகமாகும். கேரளத்தின் இடசாரிகள் மனம் திடமானது. நாம் அனைவரும் ஒன்றினைந்து இதுபோன்ற தீயசக்திகளை தடுக்கவேண்டும்.
:- தோழர். பினராயி விஜயன்
கேரளா முதலமைச்சர்
கேரளா முதலமைச்சர்
No comments:
Post a Comment