Followers

Monday, November 12, 2018

'நீதி தேவன் மயக்கம்' நாடகத்தை முழுவதுமாக படிக்க.....

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தன்னுடைய உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது 2017-20 கல்வியாண்டில் எம்.ஏ தமிழ் பாடத்திட்டத்தில் இரண்டாம் ஆண்டு படிப்பில் அண்ணா எழுதிய ‘நீதி தேவன் மயக்கம்’ என்கிற நாடக பாடத்திட்டம் உள்ளது. இந்த பாடத்தை நீக்கி அழகப்பா பல்கலைக்கழக உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி சிவகங்கை தி.மு.க நகர செயலாளர் கூறியிருப்பதாவது, ‘தமிழில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் அறிஞர் அண்ணா. அவர் தமிழ் இக்கியத்தில் பல பட்டங்களை பெற்றவர். அண்ணாவின் சிறப்பு வாய்ந்த நீதி தேவன் மயக்கம் என்ற பாடத்தை எம்.ஏ தமிழ் பாடத்திட்டத்திலிருந்து நீக்க கூடாது. அண்ணா படத்தை பொறித்த கட்சிக்கொடி, அண்ணா பெயரை தாங்கி இருக்கும் கட்சியின் ஆட்சியில் அண்ணாவின் பாடத்திட்டத்தை நீக்கி இருப்பது கல்வி அமைச்சருக்கு தெரிந்தே நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு அண்ணாவிற்கோ, ஜெயலலிதாவிற்கோ விசுவாசமாக இல்லை என்பதையே காட்டுகிறது. அதிமுக போன்று நாங்கள் இருக்க முடியாது, அண்ணாவின் கொள்ளையை சுமந்து நிற்கிறோம். அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் பாடத்தை நீக்கி விட்டு அரு.ராமநாதன் எழுதிய நூலை உள்ளே திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது அதற்கான பதிலை அழகப்பா பல்கலைக்கழகம் தெளிவாக வெளியிட வேண்டும் இல்லையெனில் தி.மு.க சார்பில் பல்கலைக்கழகம் முன்பு மாபெரும் போராட்டத்தை கட்சியின் அனுமதி பெற்று நடத்துவோம் . பாடத்திட்டத்தில் சேர்க்க மீண்டும் சேர்க்க வலியுறுத்தி திங்களன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
VIKATAN
12-11-2018
திமுகவின் அறிவிப்புக்குப் பிறகு பல்கலைக் கழகம் பாடத்தை திரும்பவும் சேர்த்துள்ளது. திமிறி எழும்போதெல்லாம் ஆரியத்தின் தலையில் குட்ட வேண்டிய முறையில் குட்ட வேண்டும். இல்லை என்றால் பழையபடி வெளியே தனது கோரப் பற்களை காண்பிக்க ஆரம்பித்து விடும்.

'நீதி தேவன் மயக்கம்' நாடகத்தை முழுவதுமாக படிக்க.....

2 comments:

Dr.Anburaj said...

குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும்.போடுவது சரியானதுதான்.
----------------------------------------------------------------------------
கிராது போட்டியில் நீதிதேவன் மயக்கம் உண்டா ? என் வைக்கவில்லை. முஸ்லீம்கள் படிக்காத குப்பை புத்தகஙகளை இந்துக்கள் படிக்க வேண்டும் என்பது கெட்ட புத்திதான்.
----------------------------------------------------------------------------------------
ஒரு தலைவா் நடிகை பானுமதியின் வீட்டிற்கு அடிக்கடி விருந்திற்கு சென்றாராம் அதுகுறித்து கேட்டதற்கு ” நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல.பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல” என்றாராம்.
----------------------------------------------------------------------------------
அடியே மதுரை மீனாட்டிஉனக்கு எதுக்கடி வைர மூக்குத்தி என்று மதுரையில் பேசிவிட்டாா் வாய் பந்தல் போடுவதில் வல்லவா். ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவேன் என்று தோ்தல் வாக்குறுதி அளித்து பின் படி அல்ல பிடி அரிசி என்ற வார்த்தை ஜாலம் பேசி மக்களை ஏமாற்றிய நயவஞ்சகன் அவன்தான்.
திரு.முத்துராமலிங்க தேவா் ” இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்.தவறினால் தலை இருக்காது” என்று அறிவிப்பு கொடுத்து தனது தொண்டா்களை மதுரையை விட்டு வெளியே செல்லும் வழிகளை எல்லாம் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்து விட்டாா். காவல்துறை திணறியது. தலை தப்பாது என்று உறுதியாக முட்டாளுக்கு தெரிந்து விட்டது.மன்னிப்பு கேட்டு தன் தசுலையை காப்பாற்றிக்கொண்ட வாய்சொல்வீரான்.
பாரதியின் புத்தகங்கள் சிறந்தது.சுவாமிவிவேகானந்தா் புத்தகங்கள் மிகச்சிறந்தது. நீதி தேவன் மயக்கம்படித்து என்ன ஆவது.ஒழுக்கம் வேண்டாம்எப்படியும் வாழலாம் என்ற முடிவுக்கு மனிதனை தள்ளக் கூடிய ஆபத்தான புத்தகம்.
குப்பையில் போடுவது நாட்டிற்கு நலம்.

ASHAK SJ said...

ஆங்கிலேயனுக்கு பயந்துகொண்டு பாண்டிச்சேரிக்கு ஓடிய பாரதி புத்தகம் சிறந்தாம்