முத்துப்பேட்டையில் இடர்பாடுகளை அகற்றும் பணியில் TNTJ நாகை வடக்கு மாவட்டம் மீட்புக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கிலிருந்து மீட்பு பணிக்காக மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி 17-11-2018 அன்று முத்துப்பேட்டை செல்லும் வழியெங்கும் திருவாரூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மரக்கிளைகள் முறிந்து கிடப்பதை கடும் மழையிலும் அகற்றிக்கொண்டு சென்றனர்.
மேலும் மின்சாரம் மற்றும் அனைத்து தொலைதொடர்புகளும் துண்டிப்பில் உள்ள முத்துப்பேட்டைக்கு சென்று கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை, கொய்யாதோப்பு போன்ற பகுதிகளில் மக்கள் செல்லும் பாதைகள் முழுவதும் பெரும் பெரும் மரங்கள் ஏராளமாக விழுந்து பாதைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் அகற்றி மக்கள் செல்வதற்கான வழிகளை சரிசெய்தனர். TNTJ தொண்டர்களின் பணிகளை கண்டு மனம் நெகிழ்ந்து வியந்து பாராட்டி உணவு வழங்கி உபசரித்தனர்.
மேலும் பா.ஜ.க-வின் திருவாரூர் மாவட்டத்தலைவர் சிவா மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் அவர்கள் TNTJ வின் மீட்புப் குழுவின் பணிகளை வியந்து பாராட்டி இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து தேவையை உணர்ந்து 18-11-2018 அன்று தொடர்ந்து முத்துப்பேட்டையில் மரங்களை அகற்றி மக்கள் போக்குவரத்து பாதைகளை சரிசெய்து மீட்புபணிகளை செய்தனர்.
முத்துப்பேட்டையில் கஜா புயலின் தாக்கம் மிகக்கடுமையாக இருந்ததையும், மக்கள் மிகக்கடுமையாக பாதிப்பிற்குள்ளாகி இருப்பதை பார்த்து கனத்த உள்ளங்களுடன் நமது தொண்டர்கள் களப்பணியாற்றினர்.
அம்மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் பல நாட்கள் ஆகும் என்ற நிலை உள்ளது.
அல்லாஹ் பாதுகாப்பானாக
TNTJ நாகை வடக்கு

No comments:
Post a Comment