Followers

Wednesday, November 28, 2018

70 வருடங்களுக்குப் பிறகு தனது தங்கைகளை சந்தித்த பயான்த் சிங்!



70 வருடங்களுக்குப் பிறகு தனது தங்கைகளை சந்தித்த பயான்த் சிங்!
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பல குடும்பங்கள் பிரிந்தன: பலர் காணாமல் போயினர். அல்லா ரக்கி என்ற இஸ்லாமிய பெண்மணி கலவரத்தில் தனது ஒரே மகனை தொலைத்து விட்டார். தனது இரு மகள்களோடு பாகிஸ்தானில் தங்கி விட்டார். தனது உறவினர்கள் மூலமாக தொலைந்த தனது மகன் சீக்கியனாக இந்தியாவில் வளர்வதை உறுதி செய்து கொண்டார். அதன் பிறகு இரு குடும்பங்களும் கடிதங்கள், தொலைபேசிகள் மூலமாக தொடர்பில் இருந்தனர்.
குரு நானக்கின் 549 வது நினைவு தினம் பாகிஸ்தானில் அவர் பிறந்த இடத்தில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த நிகழ்வில் இரு குடும்பங்களும் சந்திப்பது என்று முடிவானது. நான்கானா சாஹிப் குருத்வாராவில் இரு குடும்பங்களும் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தனர்.
உல்ஃபத் பீவி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தனது சகோதரனை சந்திக்க உதவுமாறு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு பயான்த்சிங்குக்கு பாகிஸ்தான் வருவதற்கு விஷா வழங்கப்பட்டது. இதன்படி கர்தார்பூர் பார்டர் திறக்கப்பட்டு பல சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தான் புறப்பட்டனர். பயான்த் சிங்கும் பயணமானார்.
திட்டமிட்டபடி சென்ற திங்கட் கிழமை பயான்த்சிங் தனது இரு சகோதரிகளையும் எழுபது வருடங்களுக்குப் பிறகு சந்தித்து கண்ணீர் மல்க கட்டித் தழுவினார். பாகிஸ்தான் மீடியாக்களும் இதனை கவர் செய்தன. உடன் பிறந்த தனது இரு சகோதரிகளை 70 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் அண்ணனின் உணர்வுகளை நாம் வார்த்தைகளால் விவரித்து விட முடியுமா? இந்திய பிரிவினையானது இது போன்ற பல ஆயிரம் சோக வரலாறுகளை இன்று வரை சுமந்த வண்ணம் உள்ளது.
தகவல் உதவி
கேரவன் நியூஸ்
27-11-2018


1 comment:

Dr.Anburaj said...

அரேபிய வல்லாதிக்க இசுலாமும் ஜின்னா என்ற காடையனும் இதற்கு காரணம்.