இந்த பெண்ணிடம் நமக்கும் பாடம் உள்ளது.
ஒரு சிறிய தோல்வி ஏற்பட்டாலும் உடனே தற்கொலையை நாடும் இந்த சமூகத்தில் 15 வருடமாக 'தசைகள் செயலிழப்பு' நோயினால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலேயே காலம் தள்ளுகிறார் இந்த பெண்மணி. நமது இந்திய தேசத்தை சேர்ந்த இவரது பெயர் ஷோபிகா. தற்போது குடும்பத்தோடு துபாயில் வசித்து வருகிறார். தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதையே மறந்து எந்த நேரமும் சிரித்த முகத்துடனேயே உள்ளார். தன்னைப் போன்று வீல் சேரில் அமர்ந்து வாழ்வை கழிக்கும் பலருக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். வாழ்வில் எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வதால் தன்னால் எந்த நேரமும் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்கிறார்.
"இறைவன் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் இறைவனையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 9:51
1 comment:
ஹெலன்ஹெல்லா் என்ற அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யுங்கள்.
திருநெல்வேலி தென்காசி பக்கத்தில் அமர்சேவா என்ற இடத்தில் இராமகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி செய்யும் தொண்டுகளைப் பற்றி என்றும் மததுவேசம் காரணமாக எழுத மாட்டீர்கள்.
Post a Comment