Followers

Wednesday, December 04, 2019

JP Terry பதிவின் காப்பி பேஸ்ட்... அருமையான கேள்விகளை அடுக்குகிறார்.

JP Terry பதிவின் காப்பி பேஸ்ட்... அருமையான கேள்விகளை அடுக்குகிறார்.
யாரை நோக்கி கேள்வி கேட்க​ வேண்டும்?
மேட்டுப்பாளையத்தில் நடந்தது போல் ஷியா பிரிவை சேர்ந்த மூஸ்லீம்கள் தீண்டாமை சுவர் கட்டி சன்னி பிரிவை சேர்ந்த மூஸ்லீம்களை படுகொலை செய்திருந்தால் நீங்கள் யாரை நோக்கி கேள்வி கேட்டிருப்பீர்கள்? நிச்சயமாக​ நீங்கள் மூஸ்லீம் மத​ அமைப்புகளையும் மூஸ்லீம் அரசியல் கட்சிகளையும் நோக்கி தான் கேள்விகளை தொடுத்திருப்பீர்கள்.
மேட்டுப்பாளையம் கொடுமையில் ஆதிக்க​ சாதி இந்துக்கள் தீண்டாமை சுவர் கட்டி தாழ்த்தப்பட்ட​ சாதி இந்துக்களை படுகொலை செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த​ கொடுமையில் நீங்கள் இந்து மத​ அமைப்புகளையும் இந்து மத​ கட்சிகளையும் நோக்கி ஒரு சிறிய​ கேள்வி கூட​ கேட்கவில்லை. ஏன் இந்த​ கயமைத்தனம்?
கேள்வி கேளுங்கள்!
"நீங்கள் உருவாக்கிய​ வர்ணாமசிரம சாதி அடுக்கு செய்யும் படுகொலைகளை பற்றி உங்கள் கருத்து என்ன" என்று சங்கராச்சியார்களை நோக்கி கேள்வி கேளுங்கள்.
"உங்கள் ஈஷா யோகா மையத்திற்கு வரும் ஆதிக்க​ சாதி இந்துக்கள் தான் தாழ்த்தப்பட்ட​ சாதி இந்துக்களை படுகொலை செய்திருக்கிறார்கள், இதில் உங்கள் ஆன்மீக பார்வை என்ன?" என்று ஈஷா ஜக்கியிடம் கேளுங்கள்.
"நீ தூக்கி பிடிக்கும் மனுதர்மம் செய்யும் படுகொலைகள் என்னும் அதிசயம் அற்புதம் பற்றி உன் ஆன்மீக​ அரசியல் என்ன சொல்கிறது" என்று ரஜினியை நோக்கி கேள்வி கேளுங்கள்.
"17 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டு கள்ளமவுனமாக​ இருக்கிறாயே உனக்கு இந்து என்னும் உணர்வே இல்லையா" என்று மாரிதாஸை நோக்கி கேள்வி கேளுங்கள்.
"படுகொலை செய்யப்பட்ட​ 17 இந்துக்களுக்காக​ வீதிக்கு வந்து போராடாமல் இருக்கிறாயே ஏன்" என்று பிஜேபியை நோக்கி கேள்வி கேளுங்கள்.
சாதி அடுக்கை உருவாக்கி அந்த​ சாதி அடுக்கை புனிதமாக​ ஆராதிக்கும் இந்து மத​ அமைப்புகளையும் இந்து மத​ கட்சிகளையும் நோக்கி நீங்கள் கேள்வி கேட்பது மட்டுமே சாதி பாசிசத்தை அடக்கும் வழி.
இதனை செய்யாமல் மற்றவர்களை நோக்கி கேள்வி கேட்பது சாதி பாசிசத்தை காப்பாற்றி அதனை ஆதரிக்கும் செயலே.

1 comment:

Dr.Anburaj said...

இந்த கேள்விகளைக் கேட்டவன் முட்டாள்.பதிவிட்டு பிரச்சாரம் செய்பவன் எத்தன்.கலகக்காரன்.நடந்தது ஒருவிபத்து.ஆனால் சற்று முன் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிா் சேதம் ஏற்பட்டிருக்காது.அரசின் தவறு.

தீண்டாமை சுவா் அங்கு இல்லை.சமூக நிலையில் அடி மட்ட தொண்டா் ஆக கருதப்படும் ஆதிவாசி மக்களைச் சோ்ந்தவர் கட்டிய சுவா். அவர் எதற்காக கட்டினாா் என்பது குறித்து யாரும் கருத்து சொல்லவில்லை.வெகுநாட்களாக சுவா் ஆபத்தானதாக உள்ளது என்று புகாா் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.அவர்கள் மட்டும்தான் குற்றவாளி.

” மேட்டுப்பாளையம் கொடுமையில் ஆதிக்க​ சாதி இந்துக்கள் தீண்டாமை சுவர் கட்டி தாழ்த்தப்பட்ட​ சாதி இந்துக்களை படுகொலை செய்திருக்கிறார்கள்” .

இந்த வரி ஒரு நயவஞ்சகனால் எழுதப்பட்டுள்ளது.பொய்யனால் எழுதப்பட்டுள்ளது.ஒரு நீசனால் எழுதப்பட்டுள்ளது.இந்த தேசத்தை பாழாக்கி அலங்கோலமாக்கி பார்க்க துடிக்கும் இந்த இந்துஸ்தானத்தில் காலடி வைக்க தகுதியற்ற ஒரு அரேபிய அடிமையால் எழுதப்பட்டுள்ளது.
சுவனப்பிரியனின் சொந்தக்காரா்கள் யாராவது சம்பந்தப்பட்ட புகாரை பெற்று முறையாக நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டிற்கு ஆளாகி யிருப்பார் போலிருக்கின்றது.ஆகவேதான் நயவஞ்சகமாக பிரச்சனையை திசை திருப்புகிறாா்.