Followers

Wednesday, December 04, 2019

என்று தீரும் இந்த பாழாய்ப்போன தீண்டாமைக் கொடுமை!

என்று தீரும் இந்த பாழாய்ப்போன தீண்டாமைக் கொடுமை!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ளது உத்தமர்சீலி. இந்த கிராமத்தின் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் தனது குடும்பத்தார் மற்றும் வழக்கறிஞர் சகிதமாக திருச்சி காவல்துறை மண்டல இயக்குநர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் அதிகாரிகளைச் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் பாலச்சந்திரன், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் வசித்து வருவதாகவும், அந்த இடத்தில் கழிவறை கட்டி வருவதாகவும், அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் கழிவறை கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், கடந்த 18-ம் தேதி சுமார் 20 -க்கும் மேற்பட்டோருடன் எனது வீட்டருகே வந்த கலைச்செல்வன், `ஊரில் மாற்றுச் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறோம். நீ இறந்தவர்களின் பிணங்களை எரிப்பது, சாவு வீட்டில் மேளம் அடிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்தால்தான் ஊரில் இருக்க முடியும். இல்லையென்றால் இருக்கும் நிலத்தை எல்லாம் பிடிங்கிக்கொண்டு ஊரைவிட்டு விரட்டி விடுவோம்’ எனக் கூறியதாகவும்.
தொடர்ந்து பாலச்சந்திரன், உத்தமர்சீலி ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்ததாகவும், அதற்கு ஊர் கட்டுப்பாடு உள்ளதால் குடிநீர் இணைப்பு வழங்க முடியாது என ஊராட்சி செயலாளர் ராஜகோபால் கூறியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட திருச்சி மண்டல காவல் துறை இயக்குநர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசாருக்குப் புகாரை பரிந்துரை செய்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய பாலச்சந்திரனின் வழக்கறிஞர் மதன், ``பாலச்சந்திரன் வசிக்கும் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். மேலும் அங்கு பட்டியலின மக்கள் நான்கு குடும்பங்களே உள்ளன. இதனால் பட்டியலின மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில்தான், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டிவந்த பாலச்சந்திரனுக்கு இடைஞ்சல் செய்துள்ளார்கள். தொடர்ந்து அவரை ஊருக்கு ஊழியம் செய்யவும், பிணம் எரிப்பது உள்ளிட்ட தொழில் செய்வதற்குக் கட்டாயப் படுத்தி இருக்கிறார்கள்.
அதற்கு உடன்பட மறுத்த பாலச்சந்திரன் உள்ளிட்ட சில குடும்பங்களை செத்த பிணங்களை எரிக்கும் வேலை செய்தால் மட்டுமே ஊரில் இருக்க முடியும் என மிரட்டியதுடன், ஊர் வேலை செய்யவில்லை என்றால், மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் தெருக்களுக்கு வந்து பால் பருப்பு மற்றும் ரேஷன் பொருள்கள் வாங்கக் கூட வர முடியாது என கட்டுபாடு விதித்துள்ளனர்.
அந்தத் தெருவில்தான் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. தப்பித்தவறி அந்தப்பக்கம் வந்துவிட்டால் உயிரோடு திரும்பிப் போக முடியாது எனத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்த பாலச்சந்திரனுக்குத் தண்ணீர் இணைப்பு வழங்கக் கூடாது என ஊராட்சிச் செயலாளர்கள் மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து காவல் ஆய்வாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் அனுப்பினேன். துளியும் நடவடிக்கை இல்லை.
தொடர்ந்து அவர்களின் அச்சுறுத்தல் தொடர்வதால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை என திருச்சி மண்டல காவல் துறை இயக்குநர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளோம்" என்றார்.
பட்டியலின இளைஞரை பிணம் எரிக்கக் கட்டாயப்படுத்தியதாகவும் இல்லையெனில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவதாக எழுந்த புகார் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் உதவி
விகடன்.காம்
04-12-2019

1 comment:

Dr.Anburaj said...

அந்த ஊரில் பிறாமணர்கள் யாரும் இல்லை. சம்பந்தப்பட்ட சாதியினா் பிறாமணா்கள் என்றால் பார்பனிய கொடுமை என்று பட்டவர்த்தமாக போட்டிருப்பீர்கள். வேறு சாதிக்காரன் என்பதால் சாதி பெயரைக் குறிப்பிட தைரியம் இல்லை.

150 ஆண்டுகளுக்கு மன்பே ஸ்ரீ நாராயணகுரு இப்பிரச்சனைக்கு தீர்வு சொல்லி செயல்படுத்தியும் காட்டியுள்ளாா்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக இந்துக்களை இருட்டில் இருக்க வைத்துள்ளது திராவிடம்.
அதுதான் இப்படி பிரச்சனைகள் வரக் காரணமாக இருக்கின்றது.

சக்கிலிய சாதி தோட்டி சாதியைச் சோ்ந்த ஒருவரை தனது சீடராக்கி அவருக்கு சுவாமி அற்புதானந்தா் என்று பெயா் அளித்து அனைவரும் வணங்கும் படி வைத்தவா்.ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சா்.

திராவிடத்தில் தி.க என்று அமைப்பின் நிரந்தர தலைவா் செயலா் கீ.வீரமணிதான்.இவன் செத்தால் இவன் மகன்தான் செயலா் தலைவா்.
திமுக கழகத்தில் கருணாநிதிதான் சக்கரவர்த்தி. அப்பன் செத்து விட்டான் மகன் சக்கரவா்த்தியாக முடிசுட்டல் நடந்து விட்டது.இளைய சக்கரவா்த்தியாக மகன் உதய நிதி களத்திற்கு வந்தாகிவிட்டது. இளம் பெண்கள் தலைவியாக கனிமொழி.மழலையா் பிரிவுக்கு இன்பநிதி என்ற கொள்ளு பேரனும் தயாா்.
ஆா்எஸஎஸ் இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் வலு பெற்ற இடங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழும்பாது. வந்தாலும் சுமூக தீர்வு கண்டுவிடுவார்கள். அவர்களையும் கறித்து கொட்டி விரட்ட அனைத்தையும் அரசு இயந்திரம் செய்கிறது. சுவனப்பிரியனும் தன் பங்கிற்கு இந்து இயக்கங்களை இந்தக்களை மலினப்படுத்த பகீரபிரயத்தனம் செய்கின்றார்.
பழைய காலங்களில் ஒரு உயா் சாதி மக்களுக்கு இறந்தவரகளை புதைப்பது வேறு ஒரு சாதி இருக்கும்.இன்று அனைத்து சாதியினரும் கல்வி கற்று பல தொழில்கள் செய்ய போய்விட்டனா். எனவே என் சாதி பிணத்தை நீதான் அடக்கம் செய்ய வர வேண்டும்எ ன்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
ஸ்ரீநாராயணகுரு வழி
பிணத்தை அவனவன் குடும்பத்தார்கள் அடக்கம் செய்ய வேண்டும். பிணத்தை குளிப்பாட்டி துணி உடுத்தி ஒரு சிறு மாலை போட்டு தூக்கிச் சென்று எரிக்க அல்லது புதைக்க வேண்டும். வேறு எந்த சடங்கும் தேவையில்லை.சங்கு ஊதவேண்டும்எ ன்று விரும்பினால் செத்தவன் குடும்ப உறுப்பினா் ஒருவா் ஊதலாம்.அடுத்த சாதிக்காரனை கட்டாயம் ஊது என்று சொல்லக் கூடாது.
இதை இந்துக்களுக்கு கற்றுக் கொடுக்க மறுத்து வரும் அரசு இந்து சமய அறநிலையத்துறைதான் குற்றவாளி.