Followers

Tuesday, December 03, 2019

'ஃபித்னா' பட டைரக்டரின் அழகிய சொற்பொழிவு!

'ஃபித்னா' பட டைரக்கடரின் அழகிய சொற்பொழிவு!
இஸ்லாத்தையும், முகமது நபியையும் இழிவுபடுத்த வேண்டி 'ஃபித்னா' என்ற படத்தை இயக்கியவர் அர்னார்ட் வான் டூர்ன். ஊடகங்களில் இஸ்லாம் பற்றி வரும் செய்திகளின் அடிப்படையில் அதனை உண்மை என்று நம்பி இப்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் 2008 ஆம் ஆண்டு இணையத்தில் வெளியானது. படம் வெளியானவுடன் இந்த அவதூறு பிரசாரத்துக்கு எதிராக உலகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. நபிகள் நாயகம் என்ற ஒரு மனிதருக்கு இத்தனை ஆதரவு குரல்களா என்று வியந்த அர்னார்ட் குர்ஆனையும் நபிகள் நாயகத்தின் வாழ்வு முறையையும் படிக்கிறார். தாம் மிகப் பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்கிறார். தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்கிறார்.
மக்கா மதினா வந்து புனித இடங்களை பார்வையிடுகிறார். நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்துக்கும் செல்கிறார். இறைவனிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறார். பிறகு அவர் கொடுத்த சொற்பொழிவைத்தான் கேட்கிறோம். என்ன ஒரு அழகிய தெளிவான பேச்சு.
இவரைப் போன்று இஸ்லாத்தை தவறாக விளங்கியவர்களுக்கும் இறைவன் நேர் வழி காட்டுவானாக!


1 comment:

Dr.Anburaj said...

முஹம்துவின் தகுதி ஆளுமை யில் சிறப்பு என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரண இந்திய மன்னர்கள் வரிசையில் நிற்க தகுதி படைத்தவராகவே எனக்கு காணப்படுகின்றாா்.கொள்கை அடிப்படையில் நபி -இறைவனின் தூதர் என்று யாரும் கிடையாது. அது ஆபிரகாமிக் மதத்தில் பழக்க தோசமாக வருகின்றது.நான் இறைவன் தூதர் என்பதும் பின் அவர்கள் கொல்லப்படுவதும் அந்த நாடுகளில் தனித்தன்மை. உலகம் கலாச்சாரத்திற்கு பொருத்தமான நிகழ்வு அல்ல. முஹம்மதின் காலத்தில் 3 பேர்கள் தங்களை இறைவனின் தூதா் என்று அறிவித்து முஹம்மதுவால் கொல்லப்படுகின்றனா்.அதில் ஒரு பெண் ணின் பெயரும் வருகின்றது.முஹம்மதுவின் சொந்த வாழ்க்கையும் விமா்சிக்கதக்க, பினபற்ற முடியாத பல உதாரணங்களைக் கொண்டது. 1,24,000 நபிகளை இறைவன் உலகின் பல பாகங்களுக்கு அனுப்பியுள்ளான் என்று எண்ணி சொல்லும் முஹம்மது சொர்க்கத்தில் பார்த்து ஒன்றாக தொளுகை செய்த நபிமார்கள் அனைவரும் ஆபிரமாமிக் மத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டவர்கள் மட்டுமே.அதாவது முஹம்மதிற்கு யாா் பெயர்கள் சரித்திரம் தெரியுமோ அவர்களை மட்டும் சந்தித்தாா். இஸ்ரேல் -அரபு பகுதிகளுக்கு வெளியே பிறந்த -அல்லா அனுப்பிய நபிகள் என்று யாரையும் முஹம்மது சொர்க்கத்தில்பார்க்கவில்லை. முஹம்மது சொர்க்கம் சென்றாா் என்பது பச்சை பொய் என்பதற்கு இது ஒரு முக்கிய ஆதாரம்.
---------------------------------------------------------------------------
முஹம்மது சிதறிக்கிடந்த அரேபிய மக்களை ஒன்று படுத்தி பிற மக்களை ராணுவ பலத்தால் வென்று உலகம் தழுவிய அகண்ட அரபிஸ்தானை- இசுலாமிய அரசை- உருவாக்கவே முயன்றாா். பண்பினால் நல்நடத்தையினால் உலகை வெல்ல அவருக்கு பொறுமையில்லை.
”அவரது போதனைகள் பிரமாண்டமான அரபிய ராணுவத்தை உருவாக்கியது” அது படையெடுத்து எகிப்து ஈரான் இந்தியா வரை கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று அரேபிய கலாச்சார அடிப்படையில் வாழும் கூட்டத்தைஉருவாக்கியுள்ளது.அதில் சுவனப்பிரியனும் ஒருவா்.முஹம்மது உருவாக்கிய ஒரு ஜமாத் இன்று பல நூறு பிரிவுகளாகப் பிரிந்து ராணுவ மோதலில் உலகை நாடுகளை மனித இரத்தத்தில் குளிப்பாட்டி வருகின்றது. அறிவியல் மருத்துவன் போன்ற துறைகளில் ஒரு நோபல் பரிசை கூட இந்த காட்டறபிகளால் பெற முடியவில்லை. குவைத் போன்ற பணம் கொழிக்கும் நாடுகளில் இருந்து இந்தியா போன்ற நாடுகளுக்?கு வரும் பண்க்கார கிழவர்கள் ” ஏழை சிறுமிகளை” புணர வருகின்றார்கள்.
பிரமாண்டமான அரபிய ராணுவத்தை உருவாக்கியது ஒரு சமயாச்சாரியாரின் சாதனை என்று சொல்ல ---கௌதமனை ஆதிசங்கரரை ஸ்ரீஇராமானுஜரை வள்ளலாரை தாயுமானவரை ஸ்ரீராமகிருஷ்ணரை மகாத்மா காந்திஜியை படித்த எனக்கு -- முடியவில்லை.
---------------------------------------------------------------------------------
இயேசுவின் போதனை பிரமாண்டமான ராணுவத்தை உருவாக்கவில்லை. கல்வி மருத்துவம் படைபலம் இப்படி பல தந்திரங்களை கையாளத் தெரிந்த திருச்சபையை உருவாக்கியுள்ளது.
கௌதம புத்தா் இந்தியாவில் பிறந்த மிகவும் புகழ்படைத்த அதிக மக்களை கவா்ந்த வெகுஜன சமயாச்சாரியாா். இவரது போதனைகள் மிக பிரமாண்டமான கலாச்சார பாிணாமத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது.கல்வி மருத்துவம் இப்படி பல ஆக்கப்புா்வமான துறைகளிலும் பெரும் ஆளுமைகளை உருவாக்கியது. கௌதமனை படித்த அசோகன் வன்முறையைக் கைவிட்டு தொண்டனாக வாழ்ந்தான். அசோகனது குடும்பமே தொண்டில் உயா்ந்தார்கள். வாள் குப்பைக்கு போனது. அன்பினால் உலகின் கணிசமான பகுதியை கௌதமா் வென்றாா்.அவரது வெற்றி இன்றும் வன்முறையால் காக்கப்படவில்லை. சீனா ஜப்பான் மலேசியா தாய்லாந்து மங்கோலியா போன்ற நாடுகள் கௌதமரால் கலாச்சாரம் கற்பிக்கப்பட்ட நாடுகள். இன்றும் கௌதமா் ” அன்பின் வடிவமமாக” அறியப்படுகின்றாா். அவரது செல்வாக்கு நிலையானதாக உள்ளது.
எனக்கு முஹம்மதுவிடம் சிறப்புகள் இருப்பதாக தோன்றவில்லை.