ராகுல் பஜாஜின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !
எக்னாமிக் டைம்ஸ் நாளிதழ் ஒருங்கிணைத்த விருது வழங்கும் விழா நேற்று (சனிக்கிழமை) மும்பையில் நடந்தது. இந்த விழாவில் அமித்ஷா முகத்துக்கு நேரே ஆட்சியை விமர்சித்தார் ராகுல் பஜாஜ்
1. இந்தியாவில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது"
2. ஐக்கிய முற்போக்கு அரசின் இரண்டாவது ஆட்சியின் போது, நாங்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும்.
3. ஆனால், உங்களை விமர்சிக்க எங்களுக்கு ஒருவித அச்சம் இருக்கிறது.
4. வளர்ச்சி என்ன வானத்திலிருந்தா வரும்?"
5. நாட்டில் வளர்ச்சி இல்லை என்பதை மத்திய அரசு வேண்டுமானால் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால், ஐ.எம்.எஃப், உலக வங்கி உள்ளிட்டவை கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இந்திய வளர்ச்சியில் வீழ்ச்சியிருப்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
6. கும்பல் கொலைகள் சகிப்பின்மை சூழலை உண்டாக்குகிறது. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது.
7. கும்பல் கொலைகள் தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை" என்றார்.
8. இப்போது யாரை வேண்டுமானாலும் தேசப்பற்றாளர் என அழைத்துக் கொள்ள முடிகிறது. காந்தியை யார் சுட்டது என உங்களுக்குத் தெரியும். அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? அவர் இப்போது மட்டும் காந்தியைக் கொன்றவரை துதிபாடவில்லை முன்பே அப்படிச் செய்திருக்கிறார்
9. ஆனால், நீங்கள்தான் அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்தீர்கள். யார் என்றே தெரியாத அவரை வெல்லவும் வைத்தீர்கள். அவரை மன்னிப்பது கடினம் எனப் பிரதமர் கூறுகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறீர்கள்
No comments:
Post a Comment