படிப்பில் கவனம் செலுத்தும் முஸ்லிம்கள்!
பீகாரில் நீதித் துறைக்கான தேர்வு முடிவுகள் சென்ற வெள்ளிக் கிழமை வெளியானது. இதில் 22 முஸ்லிம்கள் நீதிபதிகளாக தேர்வு பெற்றுள்ளனர். இதில் 7 பேர் இஸ்லாமிய பெண்கள்.
இதற்கு முன்பு உபியில் நடந்த தேர்வில் 38 முஸ்லிம்கள் தேர்வாகினர். இதில் 18 பேர் இஸ்லாமிய பெண்கள்.
இதே போல் ராஜஸ்தானில் 6 முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளனர். இதில் ஐந்து முஸ்லிம்கள் பெண்கள் ஆவர்.
வழக்கறிஞராக பணி புரியும் இக்பாலின் மகள் சப்னம் ஜபி கூறுகிறார் 'சிறு வயது முதல் எனது தந்தை கருப்பு உடையில் பணிக்கு செல்வதை பார்த்து வந்துள்ளேன். இதே போன்று கருப்பு உடையில் நாமும் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது'
சுப்ரீம் கோர்ட்டில் தற்போது நான்கு முஸ்லிம் நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். தற்போது அதிக முஸ்லிம்கள் தேர்வாகியுள்ளதால் எத்தனை பேரை மத்திய அரசு பணியில் அமர்த்துகிறது என்று பார்போம்.
பாசிசம் ஆட்சி செய்யும் இச்சூழலில் இஸ்லாமியர்கள் பள்ளி படிப்போடு நின்று விடாது கல்லூரி வரை செல்ல வேண்டும். வாய்ப்புகள் நிறையவே நமது நாட்டில் காத்திருக்கிறது.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
சியாஸத்.காம்
சியாஸத்.காம்
2 comments:
இந்துஸ்்தான் பண்பாடு மிக்க மனிதம் சமூக நீதி பேணும்
இந்து மக்களைக் கொண்ட
நாடு
இசுலாம் அரசாங்க மதம் என்ற அந்தஸ்தை அளித்துள்ள பாக்கிஸதானிலோ பங்களாதேஸ் நாட்டில் இந்துக்களுக்கு இவ்வளவு வாய்ப்புஉள்ளதா என்று இந்திய முஸ்லீம்கள் யோசிக்க வேண்டும். இந்துக்கள் இனப்படுகொடுக்கு ஆளாகி வருகின்றார்கள்.
Post a Comment