குர்ஆனை மொழி பெயர்க்க வந்து இஸ்லாத்தை ஏற்றவர்!
அமெரிக்காவில் கிருத்தவ பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர் சாமுவேல் எர்ல். குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பின் எடிட்டர் பணிக்காக 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஜெத்தா நகருக்கு வருகிறார். முதன் முதலாக சவுதி அரேபியாவை பாரக்கும் அவருக்கு ஆச்சரியமே மேலிட்டது. ஏனெனில் அமெரிக்க மீடியாக்கள் இஸ்லாத்தை பற்றி தப்பும் தவறுமாக பிரசாரம் செய்து வந்திருந்தன. அதனை உண்மை என நம்பி வந்திருந்த சாமுவேலுக்கு சவுதி நாட்டவரின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தை தந்தன.
சவுதி நாட்டவர் மிகவும் அன்புடனும் நட்புடனும் இவரோடு பழகியுள்ளனர். அறிவு சார்ந்த சமூகமாகவும் ஏக இறைக் கொள்கையில் அவர்களுக்குள்ள பிடிப்பும் சாமுவேலை மிகவும் கவர்ந்தன. அடுத்து குர்ஆனை மொழி பெயர்க்கும் பணியிலும் இருந்ததால் அதன் உண்மைதன்மையும் அவருக்கு விளங்க ஆரம்பித்தது. இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் மதிப்பு கூடியது. இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டார். தற்போது முஸ்லிமாக வாழ்வை சவுதி அரேபியாவிலேயே கழிக்கிறார்.
1 comment:
நானும் தான் சுமாா் 2.5 ஆண்டுகள் குரான் ஹதீஸ் போன்ற அரேபிய நூல்களைப் படித்தேன். இவ்வளவு ..மோசமாக .........இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.
காலத்தை வீணாக்கி விட்டேனே என்று வருந்தினேன்.
திருக்குறளை பகவத்கீதையை திருமந்திரத்தை தாயுமானவரைப் கம்பனை இளங்கோவை சித்தா்களை யோகசுத்திரங்களை சைவசிந்தாந்தங்களைப் படித்த காலங்கள் பொற் காலம் என்று நினைக்கின்றேன்.
சாமுவேலைக் கவர்ந்த விசயம் எது என்று அவர் பதிவு செய்துள்ளாரா ?
பொதுவான பிற மதத்தவர்கள் அரேபிய மதம குறித்து ஏதேனும் அறிய முற்பட்டால் முஸ்லீம்கள் அவரை கொண்டாட ஆரம்பித்து அறிவை மயக்கி முஸ்லீம் ஆக மாற்ற முயலுவார்கள்.
அஹமதிய இயக்கம் என்னிடம் இப்படி விளையாடிப் பார்த்தது. எனது கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. மேலப்பாளையத்தை சோ்ந்த மௌலவி என்னிடம் என் குணம் தெரியாமல் மிகவும் கோபப்பட்டு விட்டாா்.பதிலுக்கு எனது கோபத்தை நான் பல மடங்காக காட்டினேன்.அதோடு எனக்கும் அவர்களுக்கும் உளள உறவு நட்பு அறுந்து விட்டது.
Post a Comment