Followers

Sunday, December 01, 2019

முகலாய மன்னர்கள் வந்தேறிகளா ......!

முகலாய மன்னர்கள் வந்தேறிகளா நியாயமாரே......!
ஹானஸ்ட் மேன்!
//முகமது கோரி இந்திய மண்ணில் பிறந்தானா? கஜினி முகமது இந்திய மண்ணில் பிறந்தானா? இவர்கள் எல்லாம் வந்தேறிகளா? அல்லது மரமேறிகளா? [edited]// Honest Man
சுவனப்பிரியன்:
உங்களை பொறுத்த வரையில் அகண்ட இந்துஸ்தானம் தானே உங்களின் கனவு. அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்திய பகுதிகள் இவை அனைத்தும் சேர்ந்ததுதானே நீங்கள் குறிப்பிடும் அல்லது இந்துத்வா குறிப்பிடும் அகண்ட ஹிந்துஸ்தானம். ராமாயணத்தின் பல பகுதிகள் இன்று ஆப்கானிஸ்தானத்தில் அல்லவா இருக்கிறது. அதன்படி கோரி முஹம்மதும், கஜினி முஹம்மதும் உங்கள் பார்வையில் அகண்ட இந்துஸ்தானத்துக்குள் வருகிறார்கள். மேலும் இந்திய ராஜ புத்திர பெண்களை மணந்து கொண்டு நமது பாரத மண்ணிலேயே தங்கள் உடலையும் புதைக்க சம்மதித்தார்கள். இவ்வாறு இந்த நாட்டு ரத்தத்தில் கலந்து விட்ட அவர்களை அந்நியர்கள் என்று மற்ற யாரும் சொல்லலாம் நீங்கள் சொல்லலாமா? ராம பிரான் கோபித்துக் கொள்ள மாட்டாரா?
நீங்கள் அதிகம் வெறுத்து ஒதுக்கும் ஒளரங்கஜேப்பின் வரலாறை பார்ப்போம்.
இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!
முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.
“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.
********************************************
இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.
ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.
குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.
“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”
Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.
************************************
ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!
இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?
நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!
ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.
பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.
ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.
ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.
இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?
மன்னர்களே இந்து பெண்களை மணந்து இந்த நாட்டு ரத்த கலப்பாகி விட்டனர். அதே போல் அரபு நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த இரண்டு சதவீத முஸ்லிம்களும் இந்த நாட்டு இந்து மக்களோடு திருமண உறவு வைத்து இந்திய ரத்தத்தில் கலந்து விட்டனர். மற்றும் உள்ள 98 சதவீத முஸ்லிம்கள் முன்பு இந்துக்களாக இருந்து வர்ணாசிர கொடுமையினால் இஸ்லாத்தை ஏற்றவர்களே!
ஏஆர் ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும் இஸ்லாமிய குடும்பத்தில் பெண் எடுத்துள்ளார்கள். இவர்களின் வாரிசுகளை எந்த ரத்தத்தில் சேர்ப்பீர்கள்? முதலியாரும், தலித்தும் இங்கு இஸ்லாத்தில் சங்கமித்துள்ளன. இனி சாதிவெறியும் இதனால் ஒழியும்.
இப்பொழுது சொல்லுங்கள். முகலாய மன்னர்கள் மற்றும் இந்திய முஸ்லிம்கள் வந்தேறிகளா?


1 comment:

Dr.Anburaj said...

இது எல்லாம் சரிதான் சுவனப்பிரியன். சீனாவில் முஸ்லீம்கள் பற்றி என்து கருத்துக்கள் இதற்கும் பொருந்தும்

முஸ்லீம்கள் சிந்தனையாலும் செயலாலும் அரேபியர்கள். தாய்மண் சிந்தனை கிடையாது. தாயநாட்டு கலாச்சாரம் இவர்களிடம் காணப்படாது. இந்தியாவில் வாழ்ந்தாலும் சமய கலாச்சார அரேபிய சார்பு காரணமாக இந்து பண்பாட்டை முழுமையாக அழித்து அரேபிய கலாச்சாரம் மட்டும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற கொள்கைதான் பிரச்சனை.

முஸ்லீம்கள் முழு அரேபியர்களாக மாறக் கூடாது.இந்திய முஸ்லீம்கள் அரேபியஅடிமைத்தனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் ராஸ்டிரிய ஸ்வயம் செவக் சங்கத்தின் கொள்கை.