நித்தி ஈக்வடாரில் ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார்!
அமெரிக்காவுக்கு அருகில் ஈக்வடாரில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார் நித்தியானந்தா. இந்து மதத்துக்கு இந்தியாவில் ஆபத்தாம். எனவே தனது தீவுக்கு யார் வேண்டுமானாலும் வந்து இந்து மதத்தை பின்பற்றலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஐநா இவனது இந்த அறிவிப்பை அங்கீகரிக்காது என்றே நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஒரு தீவை விலைக்கு வாங்கும் அளவுக்கு பொருளாதாரத்தை கொடுத்து நித்தியிடம் ஏமாந்துள்ளனர் இந்து மக்கள்.
இவனது பாஸ்போர்ட் ஏற்கெனவே காலாவதியாகி விட்டது. பிறகு எப்படி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியும்? இத்தனை வழக்குகள் இருக்க இவனை இந்தியாவிலிருந்து தப்பிக்க விட்டது யார்?
தேடப்படும் ஒரு குற்றவாளி தனி நாட்டுக்கு தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டு இந்தியாவுக்கே சவால் விடுகிறான். மோடியும் அமீத்ஷாவும் இவனுக்கு எதிராக காய் நகர்த்துவார்களா? அல்லது பிரக்யாசிங்குக்கு பதவி கொடுத்தது போல உயர் பதவி ஏதும் பிஜேபியில் வழங்கப்படுமா?
கல்விப் பணி செய்து கொண்டு நாட்டில் மத வெறுப்பை போக்கி அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று கூறி வந்த ஜாகிர் நாயக்குக்கு பிடி வாரண்ட் பிறப்பித்த மோடி நித்தியானந்தாவுக்கு மவுனம் காப்பதேன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்து பெண்கள் அல்லவா? இந்து மதத்துக்கே இது இழிவல்லவா?
ஆன்மீகம் என்ற பெயரில் படித்த மக்களும் அவனது வலையில் வீழ்ந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இந்து மதத்தில் உண்மையான ஆன்மீகத்துக்கு வெற்றிடம் உள்ளதையே நித்தியின் முன்னேற்றம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பல குடும்ப பெண்களை ஆன்மீக வலையில் வீழ்த்தி அந்த குடும்பத்தவரின் மானத்தோடு விளையாடி வரும் இவனெல்லாம் ஒரு ஆன்மீக வாதியா?
No comments:
Post a Comment