Followers

Sunday, December 15, 2019

(Birth certificate) பெற எப்படி விண்ணப்பிப்பது ? எங்கு விண்ணப்பிப்பது ?

இந்தியாவில் 1969-ஆம் ஆண்டு பிறப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. 1970 -ஆம் ஆண்டு முதல் அது நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் 2000-மாவது ஆண்டு முதல் பிறப்பு கட்டாயமாக பதியப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் 2000-மாவது ஆண்டிற்க்கு முன் பிறந்தவர்களிடம் பிறப்பு சான்றிதழ் (Birth certificate) இருப்பது அரிது,
1969 முதல் 2018 வரை பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழ் (Birth certificate) பெற எப்படி விண்ணப்பிப்பது ? எங்கு விண்ணப்பிப்பது ? தேவையான ஆவணங்கள் என்ன ? என்பதை விரிவாக பார்ப்போம்
எங்கு விண்ணப்பிப்பது ?
சென்னை போன்ற மாநகராட்சியாக இருந்தால் 1990 முன் பிறந்தவர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகத்திலும் (ரிப்பன் பில்டிங்), 1990 பிறக்கு பிறந்தவர்கள் மண்டல மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்
நகராட்சி, கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள், நகராட்சி, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிப்பது ?
பிறப்பு சான்றிதழுக்கு தந்தை தான் விண்ணப்பிக்க முடியும், தந்தை உயிருடன் இல்லை என்றால் தாய் விண்ணப்பிக்கலாம், தாயும் உயிருடன் இல்லை என்றால் நீங்களே விண்ணப்பிக்கலாம்
எப்படி விண்ணப்பிப்பது ?
1969-க்கு பிறகு பிறந்தவர்களை இரு வகையாக பிரிக்கலாம். மருத்துவமனையில் பிறந்தவர்கள், வீட்டில் பிறந்தவர்கள்
மருத்துவமனையில் பிறந்தவர்கள் எப்படி விண்ணப்பிப்பது ?
நீங்கள் பிறந்த மருத்துவமனைக்கு சென்று , நீங்கள் பிறந்த தேதி மற்றும் விபரங்களை சொன்னால் அவர்கள் சரி பார்த்து , நீங்கள் மருத்துவமனையில் பிறந்ததற்க்கான சான்றிதழ் தருவார்கள் (Certificate from hospital)
இந்த மருத்துவமனை சான்றிதழுடன், கீழ்காணும் ஆவணங்களை சேர்த்து விண்ணப்பித்தால் அரசு பிறப்பு சான்றிதழ் வழங்கும்
1. உங்கள் பெயருடன், உங்களின் தாய், தந்தை பெயர் உள்ள ஆவணங்கள்
a) பள்ளி மாற்று சான்றிதழ் (School TC) அல்லது
மதிப்பெண் சான்றிதழ்
b) ரேஷன் கார்ட்
C) பாஸ்போர்ட்
2. தந்தை , தாய் பெயருக்கான ஆதாரம்
a) தாய், தந்தையின், ஆதார் கார்ட்
b) தாய், தந்தையின் பாஸ்போர்ட்
c) தாய், தந்தையின் ஓட்டர் ஐடி, ஓட்டுனர் உரிமம்,
பேங்க் பாஸ் புக் என ஏதேனும் ஒரு ஆவணம்
3. நோட்டரி பப்ளிக் மூலம் ரூ.20 பிரமாண பத்திரத்தில் தாய், தந்தை மற்றும் உங்களில் புகைபடம் ஒட்டி ஒரு அஃபிடவிட் பெற வேண்டும். (இது மிகவும் எளிது ரூ. 150 வரை செலவாகும்)
மேலே குறிபிட்ட ஆவணங்களில் அனைத்தும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உங்களிடம் எது இருகின்றதோ அதை வைத்து விண்ணப்பிக்கலாம்
ஆவணங்களில் உள்ள பெயர்களில் சிறு மாற்றங்கள் இருந்தாலும் பரவாயில்லை இருப்பதை வைத்து விண்ணப்பிக்கலாம்
வீட்டில் பிறந்தவர்கள் எப்படி விண்ணப்பிப்பது ?
நீங்கள் வீட்டில் பிறந்து இருந்தால் முதலில் "பிறப்பிற்க்கான கிடைக்கப்பெறா சான்று (Non -Availability of Birth Certificate (NABC))" பெற வேண்டும்.
பிறப்பிற்க்கான கிடைக்கப்பெறா சான்று (NABC) பெற கீழ்காணும் ஆவணங்கள் தேவைபடும்
1. உங்களில் முதல் வகுப்பு (1st STD) அல்லது LKG படித்த பள்ளியில் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்று (மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் (TC), அல்லது வேறு ஏதேனும் ஒரு சான்று)
2. நீங்கள் எந்த முகவரியில் பிறந்ததாக குறிப்பிடுகின்றீர்களோ அந்த முகவரியில் உங்கள் தாய் அல்லது தந்தையின் ஏதேனும் ஒரு சான்று (பழைய ரேஷன் கார்ட், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வீட்டு பத்திரம் அல்லது ஏதேனும் ஒரு அரசு ஆவணம்)
3. உங்கள் உடன் பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழ் வைத்து இருந்தால் அவற்றின் நகல்
4. நீங்கள் மருத்துவமனையில் பிறக்கவில்லை என்பதற்க்கான நோட்டரி பப்ளிக் அஃபிடவிட் (இது மிகவும் எளிது ரூ. 150 வரை செலவாகும்)
நான் மேலே சொன்ன ஆவணங்களில் போதிய ஆவணங்கள் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் பிறந்த ஊரின் காவல் நிலையத்தில் இருந்து "சரிபார்ப்பு சான்றிதழ் (Verification certificate)" சமர்பித்து பிறப்பிற்க்கான கிடைக்கப்பெறா (NABC) சான்றிதழ் பெறாலாம்
இந்த பிறப்பிற்க்கான கிடைக்கப்பெறா (NABC) சான்றிதழுடன், கீழ்காணும் ஆவணங்களை சேர்த்து விண்ணப்பித்தால் அரசு பிறப்பு சான்றிதழ் வழங்கும்
1. உங்கள் பெயருடன், உங்களின் தாய், தந்தை பெயர் உள்ள ஆவணங்கள்
a) பள்ளி மாற்று சான்றிதழ் (School TC) அல்லது
மதிப்பெண் சான்றிதழ்
b) ரேஷன் கார்ட்
C) பாஸ்போர்ட்
2. தந்தை , தாய் பெயருக்கான ஆதாரம்
a) தாய், தந்தையின், ஆதார் கார்ட்
b) தாய், தந்தையின் பாஸ்போர்ட்
c) தாய், தந்தையின் ஓட்டர் ஐடி, ஓட்டுனர் உரிமம்,
பேங்க் பாஸ் புக் என ஏதேனும் ஒரு ஆவணம்
3. நோட்டரி பப்ளிக் மூலம் ரூ.20 பிரமாண பத்திரத்தில் தாய், தந்தை மற்றும் உங்களில் புகைபடம் ஒட்டி ஒரு அஃபிடவிட் பெற வேண்டும். (இது மிகவும் எளிது ரூ. 150 வரை செலவாகும்)
மேலே குறிபிட்ட ஆவணங்களில் அனைத்தும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உங்களிடம் எது இருகின்றதோ அதை வைத்து விண்ணப்பிக்கலாம்
ஆவணங்களில் உள்ள பெயர்களில் சிறு மாற்றங்கள் இருந்தாலும் பரவாயில்லை இருப்பதை வைத்து விண்ணப்பிக்கலாம்
வீட்டில் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற பழைய வழிமுறை ஒன்றும் உள்ளது அதையும் பார்ப்போம்
நீதிமற்ற உத்தரவை பெற்று, அதன் மூலம் பிறப்பு சான்றிதழ் பெறலாம், இதற்க்கு உங்களின் பள்ளி கூட சான்றிதழ் மற்றும் நீங்கள் பிறந்த ஊரில் உங்களின் பிறந்த விபரங்கள் அறிந்த 2 சாட்சிகள் மூலம் நீதிமன்ற உத்தரை பெறாலாம். இந்த துறையில் அனுபவம் உள்ள வக்கீல்கள் மூலம் முயற்சி செய்தால் , வீட்டில் பிறந்தவர்கள் மிக எளிதாக பிறப்பு சான்றிதழ் பெறலாம்
பிறப்பு சான்றிதழ் பெற பொதுவான அறிவுறை :
பிறப்பு சான்றிதழ் எடுப்பது கடினமான விஷயம் அல்ல, நான் மேலே குறிபிட்ட அனைத்து வகையிலும் எனது உறவினர்கள் சிலருக்கு பிறப்பு சான்றிதழ் எடுத்து கொடுத்துள்ளேன். அந்த அனுபத்தின் அடிப்படையிலேயே இந்த பதிவை எழுதியுள்ளேன்
எல்லா ஆவணங்களும் சரியாக நீங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம் ரூ.100 முதல் ரூ.500 வரை செலவாகும். ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் வக்கீல்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் பிறந்து இருந்தால் ரூ.2000 வரை செலவாகும், வீட்டில் பிறந்து இருந்தால் சற்று கூடுதலாக செலவாகும். அவ்வளவுதான். மேலே குறிபிட்ட உங்களின் ஆவணங்களின் நகலை கொடுத்தால் போதும் (ஒரினினல் ஆவணங்களை காண்பித்தால் போதும், கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை)
பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வது, பெயர் சேர்ப்பது , ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது ஆகியவற்றின் வழிமுறைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்
பிறப்பு சான்றிதழ் பெறுவது சம்மந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிகின்றேன்
ஆக்கம் : S.சித்தீக் M.Tech

No comments: