பல ஆண்டுகளுக்கு முன் சவுதியில் நடந்த சம்பவம்!
ட்ரெய்லர் கன ரக வாகனங்களை ஓட்டுபவர்கள் சவுதியில் பெரும்பாலும் பாகிஸ்தான், எகிப்து, சூடான் நாட்டுக்காரர்களாகவே இருப்பர். சில சமூக விரோதிகள் இவ்வாறு கன ரக வாகனங்களை ஆளரவமற்ற பாலைவன பிரதேசங்களில் வழி மறித்து ஓட்டுனரை கீழே தள்ளி விட்டு வண்டியை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விடுவர். தகராறு செய்த ஒரு சில ஓட்டுனர்களை கொன்றும் போட்டனர். இது சவுதி காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆப்ரிக்காவில் இருந்து உம்ரா விசாவில் வருபவர்கள் அல்லது வேலை தேடி வருபவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பாமல் இங்கேயே தங்கி விடுகின்றனர். இவர்களுக்கு ஐடியும் இல்லாததால் எங்கும் வேலை செய்ய முடியாது. எனவே இது போன்ற வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.
சவுதி காவல் துறை இதனை சமாளிக்க மஃடியில் ஒரு வாரம் அந்த ஏரியாக்களில் காத்திருந்தனர். கள்ளர்களும் வழக்கமாக ஒரு ட்ரெய்லரை மறிக்க மறைந்திருந்த காவல் துறை ஐந்து பேரையும் வளைத்து பிடித்தது. உடன் விசாரிக்கப்பட்டு இரண்டொரு நாளில் பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டி மக்களின் பார்வைக்காக அதே ஏரியாவில் உடல்களை கட்டி தொங்க விட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அந்த இடத்தில் நடந்த வழிப்பறி, கொலைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வந்தது.
ஆந்திராவில் 4 பேர் என் கவுண்டரில் போட்டுத் தள்ளியதை சிலர் விமரிசிக்கின்றனர். பாதிப்படைந்த அந்த பெண் மருத்துவரின் குடும்பத்தவராக நாம் பார்க்க தவறி விடுகிறோம். அந்த பெண் மருத்துவராவதற்கு எத்தனை சிரமப்பட்டிருப்பார். அந்த குடும்பத்தின் வலி எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை ஏனோ நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
நீதி மன்றங்கள் அதன் கடமையை ஒழுங்காக செய்து வந்திருந்தால் இது போன்ற என் கவுண்டர்களை யாரும் வரவேற்க மாட்டார்கள். சாதி பார்த்து, மதம் பார்த்து நீதி மன்றங்கள் நீதி வழங்குவதால்தான் இது போன்ற என் கவுண்டர்களை பலரும் வரவேற்கின்றனர்.
அடுத்து பெண்களும் சற்று முன்னேற்பாடோடு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தனியாக இரு சக்கர வாகனத்தில் அந்த மருத்துவர் அந்த இடத்துக்கு செல்லும் போது தனது தந்தையையும் பாதுகாப்புக்கு கூட்டிச் சென்றிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. மது ஒரு மனிதனின் உள் இறங்கி விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகிறான். மது ஆறாக ஓடும் ஒரு தேசத்தில்: அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தி காசு பார்க்கும் ஒரு தேசத்தில் பெண்கள்தான் சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இந்த மருத்துவரின் மரணம் ஆறுவதற்குள் உத்தர பிரதேசம் உனாவில் பாஜக எம்எல்ஏவால் சீரழிக்கப்பட்ட பெண் எரித்து கொல்லப்படடுள்ளார். கண்டிப்பாக அந்த பெண்ணுக்கு யோகி ஆதித்யநாத் அதிகாரத்தில் நீதி கிடைக்காது. நிர்பயா வழக்கும் சிறிது சிறிதாக நீர்த்துப் போய் விடும். நிர்பயாவுக்கு வக்காலத்து வாங்கும் உள்துறை அமைச்சகம் உனா பெண் எரிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் ஏற்றுமா? கண்டிப்பாக ஏற்றாது. ஏனெனில் சாதி வித்தியாசம். குற்றம் சட்டப்பட்டுள்ளவர் பிஜேபி எம்எல்ஏ. இதுதான் இந்திய நீதி.
அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது.
திருக்குர்ஆன் 2:179
திருக்குர்ஆன் 2:179
1 comment:
குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது பொரு்ததமற்றது.திரைப்படங்களில் காதல் காட்சிகள அரைகுறை உடை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.
Post a Comment