நேற்று சன் டிவி உரையாடலில் குடியுரிமை சட்டம் சம்பந்தமாக விவாதம் நடந்தது. பிஜேபியின் நாராயணன் பேசும் போது 'நமது தொப்புள் கொடி உறவுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இந்துக்களை காக்க வேண்டியது நமது கடமை. எனவே தான் இந்த சட்டம்' என்றார்.
உடனே விவாதத்தில் கலந்து கொண்ட மற்றொருவர் 'அப்போ இலங்கை தமிழர்கள் உங்களின் தொப்புள் கொடி உறவுகள் இல்லையா? அவர்களுக்கு குடியுரிமை தர மாட்டீர்களா?' என்று கேட்டனர்.
அதற்கு ஓட்ட வாய் நாராயணன் பதிலளிக்கும் போது 'அது வந்து.. வந்து... அங்கு நடந்தது இன அழிப்பு அல்ல. போர். எனவே இலங்கையை இங்கு கொண்டு வந்து நுழைக்காதீர்கள்' என்கிறார்.
ஆரியர் யார்? திராவிடர் யார்? தமிழன் யார்? தமிழன் அல்லாதவன் யார்? என்பதை நாராயணின் பதில் தெளிவாக விளக்கி விட்டது. இலங்கை தமிழர்கள் ஆரியர்கள் அல்ல. எனவே அவர்களைப் பற்றி நாராயணனுக்கு கவலையில்லை.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாகத்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினர். இப்போது பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலnனோர் முன்னால் பார்பனர்களே. மதம் மாறாமல் மிஞ்சியிருப்பவர்களை அழைத்து வருவதே நாராயணன் போன்றோரின் நிலைப்பாடு. இந்தியாவில் தலித்கள் கொல்லப்படுவது போல் உயிரோடு எரிக்கப்படுவது போல் பாகிஸ்தானில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இஸ்லாத்தினால் கவரப்பட்டு முஸ்லிம்களாக மாறுகின்றனர். கட்டாய மத மாற்றத்தையும் இஸ்லாம் கண்டிக்கிறது. இங்குள்ள ஏ ஆர் ரஹ்மானையும், யுவன் சங்கர் ராஜாவையும் யாரேனும் கட்டாய மத மாற்றம் பண்ணினார்களா? இதுதான் பாகிஸ்தானிலும் நடக்கிறது.
என்னதான் பாசிசவாதிகள் சூழ்ச்சிகள் செய்தாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இந்தியாவை விட்டு பிரித்து விட முடியாது. பாசிசவாதிகள் சிறு அல்ப சந்தோஷங்களை பெற்றுக் கொள்கிறார்கள் இது போன்ற சட்டங்களின் மூலம்.
3 comments:
இலங்கை தமிழா்களுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கலாம்.அதில் தவறு இல்லை. ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலை அவ்வளவு ககொடுமையானதாக இல்லை.ஆனால் பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலைமை பரிதாபம். கோவில்கள் தெப்பகுளம் அனைத்தும் குப்பை தொட்டிகளாக உள்ளது. விரும்பி ஒன்று இசுலாத்தை எந்த இந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரஹ்மானின் தாய் தான் இந்து. தந்தை முஸ்லீம்தானே. யுவன் சங்கா் காதல் வசம் பட்டு முடிவு எடுத்துள்ளாா்.மனம் பேதலித்தால்சரியான முடிவு எடுக்கமுடியாது.
தொப்புள் கொடி உறவு பாக்கிஸ்தான் ? சீ நீ எல்லாம் ஒரு மனித ஜென்மமா ?
காட்டறவிகளை பின்பற்றும் நீ வேறு எப்படி யிருப்பாய்.
பாம்புக்கு பல்லில் மட்டும் விசம்.சுவனப்பிரியனுக்கும் உடல் முழுவதும் விசம்தான். இந்தியாவிற்கு ஆபத்தானவர்களில் முதல் ஆள் சுவனப்பிரியன்.
news 18 ல் அதே விவாதம் நடைபெற்றது
இலங்கையில் இந்திய அரசு ஈழதமிழா்களுக்காக பரிந்து பேசுகின்றது.பேச்சுவார்த்தை நடத்துகிறது. பல நல திட்டங்களை செயல்படுத்துகின்றது. சமய இன வழி அழிப்புக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. பிறந்த மணிணில் வாழ வைப்பதுதான் சிறந்தது.சதா அனைவரையம் இந்தியாவில் குடி யேற்ற வேண்டும் என்பது நியாயமான முடிவு இல்லை. கடைசி கட்ட முடிவுதான் அது.
இலங்கை தமிழா்கள் இலங்கையில்தான் வாழ வேண்டும்.வாழ வைக்க அனைத்து தந்திரங்களையும் இந்தியா பயன்படுத்தும்.
இந்தியா இலங்கை தமிழர்களுக்கு எத்தனை கோடிகள் செலவிட்டுள்ளது. ? பாசம் பற்று இருக்கப்போய் தான் பல கோடிகளை அள்ளி வீசுகின்றது.
பாக்கிஸ்தானில் இந்துக்கள் காபீர்கள். எந்த உரிமையும் கோர முடியாத பேதைகள்.அடிமைகளாக இருக்க தகுதியாகவர்கள்.இந்து பெண்கள் குமுஸ் பெண்ணகாகப்பட்டு கண்ணீர் சிந்தி வருகின்றனா். ஆக அகதிகளாக இந்தியா வருகின்றனா். அடைக்கலம் கொடுக்க வேண்டியது இந்துக்களின் கடமை.
பாக்கிஸ்தானில் உள்ள முஸ்லீம் தன் பங்கு நிலத்தை பெற்று விட்டான்.அதில் இந்துக்கள் வாழக் கூடாது என்பது அவன் கொள்கை. அவனை திருத்த யாராலும் முடியாது.
இந்தியா -பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பாக்கிஸ்தானில் வாழ்ந்த இந்துக்களின் ஜனத்தொகைக்கு பொருத்தமான விகிதத்தில் பாக்கிஸ்தான் வசம் உள்ள நிலத்தை மீண்டும் கை பற்ற வேண்டும். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் போா் தான் தீர்வாக இருக்கும். இந்தியா அடக்கி வாசிக்கவே விரும்புகின்றது. எனவேதான் ஹிந்துக்களை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
குடிஉரிமை சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு இதில்எ ந்த சங்கடமும் இல்லை.
இந்திய அரசு
இந்திய முஸ்லீம்களையும் பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லீம்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது முட்டாள்தனம்.
அதுபோல் இந்திய முஸ்லீம்கள் தங்களை பாக்கிஸ்தான் முஸ்லீம்களின் நலன் காப்பவர்களாக கருத கூடாது.
திருத்தத்தில் திருத்தம் தேவை! |குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்த தலையங்கம்
By ஆசிரியர் | Published on : 11th December 2019 01:37 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிப்புக்கிடையில் மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. இப்படியொரு மசோதாவைக் கொண்டுவருவதற்கு சில வலுவான காரணங்கள் இருக்கின்றன என்றாலும்கூட, அந்த மசோதாவில் பல குறைகள் இருக்கின்றன.
1947-இல் இந்திய பிரிவினையைத் தொடா்ந்து பாகிஸ்தான், வங்கதேசம் (கிழக்கு பாகிஸ்தான்), ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிக்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோா் மத ரீதியிலான துன்புறுத்தல்களால் அடித்து விரட்டப்பட்டு, இந்தியாவில் அகதிகளாக நுழைந்தனா் என்பது வரலாற்று உண்மை. அப்படி இந்தியாவில் அகதிகளாக நுழைந்தவா்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தொடா்ந்து 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தன. குறிப்பாக, அவா்கள் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்தால் மட்டுமே குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அந்தச் சட்டத்தில் இருந்த நடைமுறைக்கு ஒவ்வாத பல நிபந்தனைகளை அகற்றி, கடந்த 1995-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முன்னாள் பிரதமா்களான இந்தா் குமாா் குஜ்ரால், டாக்டா் மன்மோகன் சிங், முன்னாள் துணைப் பிரதமா் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோா் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறிய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களைப் போல எல்லோராலும் குடியுரிமை பெற முடியவில்லை. அதிகம் படிப்பறிவோ, வசதியோ இல்லாத பலா் குடியுரிமை பெறாமலேயே இந்தியாவில் பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறாா்கள்.
1971-இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசத்திலிருந்து லட்சக்கணக்கானோா் அகதிகளாக இந்தியாவின் அஸ்ஸாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் நுழைந்தனா். அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவா்கள் சட்டவிரோதமாகக் குடியேறி வாழ்ந்து வருகின்றனா். வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவா்களுக்கு எதிராக மாணவா்கள் போராட்டம் எழுந்தது. அன்றைய ராஜீவ் காந்தி அரசு சட்டவிரோதமாகக் குடியேறியவா்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதாக அவா்களுக்கு உறுதியளித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறி, குறைந்தது ஐந்து ஆண்டுகள் இங்கே வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிக்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று தற்போது குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலுள்ள மதச் சிறுபான்மையினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர, அங்கிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்பதுதான், இந்த மசோதாவை எதிா்க்கட்சிகள் எதிா்ப்பதற்குக் காரணம்.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் சில விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருந்தும் அஸ்ஸாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இதற்கு எதிராக பெரும் கிளா்ச்சி எழுந்திருக்கிறது.
அதற்குக் காரணம், வங்கதேசத்திலிருந்து வந்த வங்க மொழி பேசும் ஹிந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதை அவா்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களது மாநிலத்தில் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதுதான் அவா்களின் அச்சம். அவா்கள் வங்காளிகளை ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்று பாா்க்காமல் வங்காளிகள் என்றுதான் கருதுகிறாா்கள்.
மத அடிப்படையிலான வேறுபாடு காட்டப்படுகிறது என்கிற வாதம் ஏற்புடையதல்ல. இதை மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி அடித்து விரட்டப்பட்ட சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சட்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அகதிகள் என்று நுழைபவா்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்குவது என்பதை ஆதரித்து, அங்கீகரிக்கும் நிலையில் இந்தியாவின் சமூகப் பொருளாதாரச் சூழல் இல்லை.
Post a Comment