Followers

Saturday, December 07, 2019

இன்று எங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய மார்க்கம்.

ஒரு மதத்தைப் பின்பற்றிக் கொண்டு வெவ்வேறு சாதிகளாகவும் நாங்கள் இருந்தோம்.
இன்று எங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய மார்க்கம்.

நான் இக்பால் என்கின்ற செந்தில் ஆகவும் பிள்ளைமார் ஜாதியில் பிறந்தவன்.
ஹிதாயத்துல்லா என்கின்ற சுந்தர்ராஜன் வன்னனாகவும் இருந்தோம். இன்று எங்களை ஒன்றிணைத்தது இனிய மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாம் என்றால் என்ன ?
உலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோ தான் அமைந்திருக்கின்றன.
உதாரணமாக,
கிருஸ்துவ மதம் இயேசு கிருஸ்துவின் பெயரைக் கொண்டுள்ளது.
புத்த மதம் கௌதம புத்தரின் பெயரில் அமைந்துள்ளது.
யூத மதம் யூதா என்ற ஒரு மூதாதையரின் பெயரில் அமைந்துள்ளது.
சிந்து நதிக்கு கீழ் வாழும் மக்களை இந்து என்று பூலோகப் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.
ஆனால்!

இஸ்லாம் மட்டும் இதில் விதி விலக்கு!

இதன் பெயர் எந்த ஒரு தலைவரையோ, இனத்தையோ, நாட்டையோ குறிப்பது அல்ல. மாறாக, ஒரு முஸ்லிமிடம் (இறை நம்பிக்கையாளனிடம்) இருக்க வேண்டிய தன்மைகளை பிரதிபலிப்பதாகவே இதன் பெயர் அமைந்துள்ளது.
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவையாகும்.
படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் இஸ்லாம்.
இஸ்லாம் என்றச் சொல்லுக்கு 'அமைதி' என்றொரு பொருளும் உண்டு.
இறைவனின் கட்டளைகளுக்கேற்ப அமையும் வாழ்க்கையில் தான் உடலும் உள்ளமும் அமைதி பெறும் என்பதையே இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன் தான்!
உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது
என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.
இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம்.
எனவே, 'ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல.
இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனை.


2 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம் ஆன ஒருவன் உலகில் எந்த பகுதியில்

வாழ்ந்தாலும் ”அரேபியனாக” மாறியிருப்பான். அரேபியனாக வாழ்வான். சவுதியில் மழை பெய்தால் மகிழ்ச்சி அடைவான். சவுதியில் குண்டு வெடித்தால் வருத்தம் கொள்வான். இது மதம் அல்ல ? அடிமைத்தனம்.

தானும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் கலகம் செய்து வாழ்வான்.கொடும் மரணம் அடையலாம்.

அகண்ட அரபிஸ்தான் அமைக்க வேண்டும் என்று முஹம்மது என்ற அரேபிய தளபதி திட்டம் தீட்டினாா். கஸ்வாத் -இ.ஹிந்த் என்று இந்தியாவின் மீது போர் தொடுங்கள் என்று தனது சீடர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தாா்.அவர் காலத்தில் இந்தியா மீது படையெடுக்க முடியவில்லை. ஹிந்த என்ற வார்த்தை ஹிந்துஸ்தானம் என்பதன் சுருக்கம். முஹம்மதிற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வார்த்தை எப்படி தெரிந்தது ? ஆச்சரியமே.

60 போர்களை நடத்திய சமாதான புறா அண்ணல் முஹம்மது ஆட்டிறைச்சிக்கு ஆசைப்பட்டு யுத பெண்ணிடம் ஆட்டு இறைச்சி சாப்பிட்டாா்.

யுத பெண்மணி விஷம் வைத்த இறைச்சியை சமைத்து கொடுத்து விட்டா். சில கவளங்கள் விழுங்கிய முஹம்மது ஏதோ மாறுபட்ட பொருள் கலந்துள்ளது என்பதைகண்டுபிடித்து விட்டாா். அதன் விளைவு தொடா்ந்து உடல் உபாதைக்கு ஆளாகி கடுமையான கொஞ்சகாலம் உடல் வேதனை அடைந்து இறந்தாா்.விஷம் என்ற பொறியில் ஆட்டிறைச்சிக்கு ஆசைப்பட்டு மாட்டிக் கொண்டாா் அரேபிய மணி.

Dr.Anburaj said...


இந்தியாவிலும் இன்று இருக்கும் சமூக அமைப்பு சாதி கட்டமைப்பு 500 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை.சாதி கலப்பு நடந்து கொண்டேயிருக்கின்றது. புதிய சாதிகள் அல்லது குழுக்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றது. புதிய நாகரீகம் தோன்றிக்கொண்டேயிருக்கின்றது.

ஒரு மதமாக தோன்றிய அரேபிய மதததை படித்தவன் அனைவரும் சன்னி சியா அகமதி போரா ......இப்படி ஆயிரம் பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவன் குண்டு வீசி போர்தொடுத்து அழித்துக்கொண்டிருக்கின்றான். சிரியா மற்றும் யேமன் நாட்டில் முஸ்லிம்கள்தான் வாழந்து வருகின்றார்கள்.சவுதி அரேபியா நாட்டு போரவிமானங்கள் அங்கே குண்டு போட்டி மக்களை கொல்கின்றது. ஆப்கானிஸ்தானத்தில் தினம் தினம் பயங்கரவாத தாக்குதல் நடக்கின்றது.குரான் படித்தவர்கள் மதத்தை வைத்திருப்பார்கள்.மனிதத்தை இழ்ந்து வாழ்கின்றர்கள்.

ஆனால்சிறு சிறு பிரச்சனைகளையும் சமாளித்து இந்துமதம் பல பிரிவு மக்களையும் அன்புடனும் சகோதரத்துவத்துடன் வாழ வைத்திருக்கின்றது.இந்து மதம் மனிதனை சிறந்த மனிதனாக வாழ வைக்க உயா்த்த சதா முயன்று வருகின்றது.

இதுதான் இந்து மதத்தின் சிறப்பு. வெற்றி.