Followers

Wednesday, December 25, 2019

நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.....

நெருப்பு மாதிரி ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் தெறிக்கிறது, யார் இந்த வடநாட்டு புள்ளிங்கோ தெரியலை, மோடியையும் ஊடகத்தையும் அலற விட்டு இருக்கான்.
"நரேந்திர மோடிக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இந்த நாட்டின் மக்கள் பிரிட்டிஷ்க்காரனையே ஓட விட்டவர்கள், நீங்கள் எந்த மாத்திரம்? உங்களை மாதிரியான ஆட்களின் தகுதி என்னவென்று உணருங்கள்,
உங்களை எந்த மாதிரியான இடத்துக்கு தூக்கி எறிவோம் என்றால் திரும்பி உங்களால் அங்கிருந்து வரவே முடியாது, (ஒரு பிரதமர் என்றும் பாராமல்...)
(ஊடகத்தை பார்த்து) உங்களை நினைத்தால் கேவலமாக இருக்கிறது, வெட்கமாக இல்லையா? உண்மைகளை சொல்வதில் இருந்து பின் வாங்குகிறீர்கள், பாரத்ததின் மீடியாக்கள் விலை போய் உள்ளது,
நாட்டில் ஜிடிபி விழுந்து விட்டது, நாட்டின் விவசாயிகளுக்கு உணவில்லை, நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள்.
உங்களுக்கு நரேந்திரா மோடியின் காலை கழுவதிலேயே வேலை சரியாக இருக்கு,
பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எத்தனை பொண்டாட்டி இருக்கு, அவங்க என்ன செய்றாங்க, என்ன சமைக்கிறாங்க என்று காட்டுறிங்க,
அரே பய்யா நாம் இந்தியாவின் மக்கள், எங்களை பற்றிய செய்தி காட்டுங்களேன், எங்களை பற்றி கவலைப்படுங்களேன்,
எங்கள் நாட்டின் விளைச்சல் என்னாது என்று காட்டுங்கள், ஜிடிபி என்னா ஆனது காட்டுங்கள், மோடி எங்கே போய் ஒழிந்திருக்கிறார் என்பதை காட்டுங்களேன்,
மோடியும் மோடி அரசும் இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் சீக்கியம் என்று துண்டாடி கொண்டு இருக்கிறது,
நாட்டின் இறையாண்மையை எல்லாம் நார் நாராக நாசப்படுத்துவீர்கள் மக்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டுமா? எங்களை எல்லாம் முட்டாள் என்று நினைத்தீர்களா?
ஜார்கண்ட் மக்கள் மோடியையும் மோடி அரசாங்கத்தையும் முகத்தில் அறைந்திருக்கிறார்கள், அதன் சத்தம் இன்னும் ஐந்து வருஷம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
NRC மற்றும் CAB ஐ கொண்டு இந்திய அரசியலை அமைப்பை கிழ்த்து கொண்டு இருக்கிறீர்கள்,
குடிமக்கள் பதிவேட்டில் ராஷ்டிரபதியின் குடும்பதினரின் பெயரையே தூக்கி இருக்கிறீர்கள் அப்படி எனில் சாதாரண மக்களின் நிலை என்னாகும்?
#NONRC #NOCAB
Copy & Paste


5 comments:

Dr.Anburaj said...


சாதி மாநில வட்டர (பணம்) விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வோட்டு போட்டால் விபரீதங்கள்தான் நாட்டில் அரங்கேறும்.

ஜார்கண்டில் பாரதிய ஜனதாக மொத்தத்தில் 34 சதம் வோட்டுக்களை பெற்றுள்ளது. உண்மையில் வென்றுள்ளது பாரதிய ஜனதா அரசுதான். மலைவாழ் மக்கள் - நகரவாசிகள் என்ற பிரச்சனை மேற்படி மாநிலத்தில் முக்கியமானது. பாரதிய ஜனதா முதல்வா் சுயேட்சையாக போட்டியிட்ட தனது சக அமைச்சரிடம் தோற்றுள்ளாா். பாரதியஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

மாநில விசயங்கள் மக்களை அதிகம் கவரும்.தேசிய பிரச்சனைகள் குறித்து மக்கள் அதிகம் அக்கறை கொள்ளாதது தவறு.ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். திரு.மோடிக்கு அடுத்த தேர்தல் குறித்து கவலை கிடையாது. கோழைத்தனம் காரணமாக காங்கிரஸ் அரசு நிலுவையில் வைத்துள்ள கோப்புக்களை மோடி அரசு முடித்து வைக்கின்றது. முத்தலாக் 370 ரத்து அயோத்தி கோவில் அஸ்ஸாம் பிரச்சனை - வெளி நாட்டவா் குடியேற்றம் பிரச்சனை போன்றவைகள் அடங்கும்.
இது மோடிஜியின் சாதனைப் பட்டியல்.

Dr.Anburaj said...

யாரோ ஒரு படிக்காத ராகுல் காங்கிரஸ்காரன் எழுதிக் கொடுத்ததை இந்த பொடியன் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கின்றான். வாழ்க.
இந்த சிறுவனின் சான்று பெற வேண்டிய நிலையில் ........................பரிதாபம்.
------------------
நாட்டின் இறையாண்மையை எல்லாம் நார் நாராக நாசப்படுத்துவீர்கள் மக்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டுமா? எங்களை எல்லாம் முட்டாள் என்று நினைத்தீர்களா?

பதில் - இறையான்மைக்கு என்றும் ஒரு கேடும் வந்து விடாது. பாக்கிஸ்தான் பிரிவினை முதுகெலும்பு இல்லாத சில தலைவார்களின் கோழைத்தனம் காரணமாகவும் இந்திய அரசு வலுவாக தன்னை அமைத்துக் கொள்ளாததாலும் ஏற்பட்டு விட்டது. இன்று நிலைமை வேறு.
அரசின் தலைமை திரு.நரேந்திர மோடி மற்றும் திரு.அமித்ஷா விடம். இரண்டுமே நெருப்பு. சுனாமி. பத்ரகாளியின் விஸ்வரூபம் இவர்களுக்கும் எடுக்கத் தெரியும்.

இந்தியா வலிமையான நாடு. எவனாலும் நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட அள்ள முடியாது.
முஸ்லீம் அமைப்புக்களின் தலைவா்கள் அவனவன் கெண்டைக்கால் மயிரை பிடுங்கிக் கொள்ளலாம்.வேறு என்ன பண்ணிக் கிழித்து விடுவார்கள்.

1947 ல் நாடு இல்லை. 2020 பிறக்கப் போகின்றது. கஜனி,கோரி முஹம்மது பெற்ற வெற்றிகளை படித்து விட்டு போதை ஏறி, இந்தியாவின் மீது படையெடுத்த பாக்கிஸ்தானத்து முஸ்லீம்களுக்கு தோல்விக்கு மேல் தோல்விதான் பெற்றுள்ளான். 1971 போரில் இந்தியாவிடம் சரண் அடைந்து பாக்.முஸ்லீம் வீரர்கள் எண்ணிக்கை 94000.
1.70 ச.கீ.மீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியை இழந்து போனது பாக்கிஸ்தான் அரசு. பாக்கிஸ்தான் இரண்டாக பிளக்கப்பட்டது.மறந்து விட வேண்டாம்.

டோக்லாமில் சீனாக்காரனை பின்வாங்கவே வைத்த அரசு திரு நரேந்திர மோடி அரசு.
மறந்து விட வேண்டாம்.

கூட்டம் சோ்ந்து கலவரம் செய்யதவன் புகைப்படங்கள் பொது மக்கள் பாரவைக்கு உத்தரபிரதேச அரசு வைத்துள்ளது. அடையாளம் காணப்பட்டு கைது செய்து, சேதங்களுக்கு்ண்டான தொகையை வசுலிக்கும் போது கோர்ட் வாய்தா ஜாமீன் என்று அலையும் போது- சொத்துக்கள் பறிமுதல் என்ற பிரச்சனை வரும் போது

ஞானம் பிறக்கும்.
2020 பிறக்கப்போவதை அறியாத ஒரு முட்டாள் எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் சிறுவன் அப்பாவி.இதைப்போய் பெரியஏதோ பிரமாண்டம் போல் பதிவு செய்து வெளியிட்டுள்ள சுவனப்பிரியன் ஒரு முட்டாள்.

Dr.Anburaj said...

தினமணி தலையங்கம் - தேதி தெரியவில்லை 16.08.2012 ஆக இருக்கலாம்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் எல்லை மாகாணங்களான சிந்து, பலுசிஸ்தான் பகுதிகளிலிருந்து இந்துக்கள் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் தேடுவது அதிகரித்து வருகிறது. இந்த கவலைதரும் போக்கு மிக அண்மையில் அதிகரித்திருப்பதற்கு இந்திய அரசு ஆச்சரியம் தெரிவித்தாலும், விடுதலைபெற்ற நாள்முதலாய் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளையும் பற்றித் தெரிந்த வரலாற்று நோக்கர்களுக்கு இதில் எந்த ஆச்சரியமும் இருக்க வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கயானி, தனது விடுதலை நாள் உரையில் பேசும்போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் அச்சமின்றி அவர்களது மதநம்பிக்கைகளைப் பின்பற்றலாம், வாழலாம், பணிபுரியலாம் என்று குறிப்பிட்டாலும்கூட, அத்தகைய சூழல் பாகிஸ்தானில் அருகிக்கொண்டே வருகின்றது என்பதன் அடையாளம்தான் இவ்வாறு இந்தியாவில் அடைக்கலம் தேடுவோர் எண்ணிக்கை நாளும் கிழமையும் அதிகரிக்கக் காரணம்.

புனித யாத்திரைக்குச் செல்வதாகக் கூறி பாகிஸ்தானிலிருந்து வந்த 250 இந்துக்கள், தாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், அங்கே தண்டனை கிடைக்கும் என்றும் சொல்லி, அடைக்கலம் கேட்கின்றனர். இவர்கள் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டபோது இவர்களிடம் எழுதி வாங்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளில் ஒன்று மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பி வருவோம் என்பது. அடுத்த நிபந்தனை, பாகிஸ்தான் குறித்து அவதூறாக எதுவும் பேச மாட்டோம் என்பது.

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்களுக்கு சொல்லொணாத் துயரங்கள் நிகழ்த்தப்படுவதாகவும், இளம்பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் செய்யப்படுவதாகவும், இது குறித்த எந்தப் புகார்களையும் பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்வதே இல்லை என்பதால், மதவாதிகளின் தாக்குதல் பல வகையிலும் அதிகரித்து வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து இஸ்லாமியரும் மதவாதிகள் அல்லர். இந்துக்களின் கோயில் உடைமைகள், அவர்களது வீடுகள், சொத்துகள் ஆகியவற்றால் பொறாமைகொண்ட மதவாதிகள்தான் இத்தகைய அத்துமீறல்களை, அநியாயங்களை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்த நிகழ்வுகள் பாகிஸ்தானில் மட்டும்தான் நடைபெறுவதாகக் கருதத் தேவையில்லை. வங்கதேசத்திலும் மெüனமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு. உருதுவை அரசு மொழியாகக் கொண்டுள்ளது. ஆனால், அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் உருதுவை ஏற்க மறுத்து, வங்கமொழிதான் அரசு மொழியாக இருக்க வேண்டும், உருதுமொழியை ஏற்க மாட்டோம் என்று புரட்சி செய்தது. ஒரே மதத்தினர் தாய்மொழியான வங்க மொழியில் பிரிந்து நின்றதால்தான் வங்கதேசம் உதயமானது. ஆனால், வங்கதேசம் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பின்னர், அங்கே இந்துக்கள் எண்ணிக்கை 30%லிருந்து, தற்போது 9.2% ஆக குறைந்துவிட்டது.

Dr.Anburaj said...

1992ல் இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதுபற்றிய பதிவுதான் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா (வெட்கம்) என்கிற நாவல். வங்க மொழியை ஆட்சி மொழியாக்கப் போராடிய ஒரு டாக்டர், இந்த மண் என்னுடையது; நான் ஏன் வெளியேற வேண்டும் என்று உறுதியோடு இருக்கும் டாக்டர், தன் மகள் கடத்தப்பட்டு மீட்கப்படாத நிலையில், தன் உறுதிகுலைந்து, மகன், மனைவியுடன் இந்தியாவுக்குப் புறப்படுவதுதான் இந்த நாவலின் கரு. இந்த நாவல் மீதான தடை வங்கதேசத்தில் இன்றுவரை தொடருகிறது.

ஒரு நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்கும் வரை, சிறுபான்மையினருக்கு சட்டத்தின் பாதுகாப்பு முழுமையாகக் கிடைக்கும், அவர்கள் உடைமைக்கும் மதச் சடங்குகளுக்கும் பாதகம் ஏற்படாது என்பதற்கு இந்தியா மட்டுமே உதாரணமாகத் திகழ்கிறது. அங்குமிங்குமாக சில தவறுகள் நடந்தாலும், பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் நடத்தப்படுவது போல, இந்தியாவில் சிறுபான்மையினர் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதில்லை.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு சிறுபான்மையினருக்கு மேலதிகமான கவனமும் சலுகைகளும் தரப்பட்டன. மதச்சார்பற்ற இந்தியாவில் வழங்கப்படும் இத்தகைய சலுகைகளையும், மனித உரிமைகளையும், இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தானிடமும், வங்கதேசத்திடமும் நாம் எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. அந்த அரசுகள் அவ்வாறு இந்து சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க முயன்றாலும், தீவிரவாத அமைப்புகளின் கட்டளைக்குக் கீழ்படியும் அவல நிலையில்தான் அங்குள்ள அரசுகள் உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இது எனது மண் என்று அங்கேயே தங்கிய மூத்த தலைமுறை இன்றில்லை. அன்றிருந்த இணக்கமான சூழலும் இன்றில்லை. தற்போதைய இரண்டாவது, மூன்றாவது தலைமுறையால் அந்நாடுகளில் வாழ முடியாத சூழல் உள்ளது. இத்தகைய சிறுபான்மை இந்துக்கள் அந்நாடுகளிலிருந்து சட்டப்படி வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புக விரும்பினால் அவர்களை வரவேற்று அரவணைப்பது மட்டுமே இப்போதைய நிலையில் இந்தியா செய்யக்கூடியது.

இவ்வாறு வெளியேற விரும்பும் பாகிஸ்தான் வாழ் இந்துக்களின் சொத்துகள் வழக்கமாக அங்குள்ள மதவாதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதை விற்க முடியாமல் வெளியேறும் சூழ்நிலையும் இருப்பதால்தான் அவர்கள் இந்தியா வரும்போது பிச்சைக்காரர்களைப் போல, அரசின் தயவை எதிர்நோக்கி வரும் நிலைமை உள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்துக்களின் சொத்துகளுக்கு இன்றைய சந்தை மதிப்புக்கான ரொக்கத்தை பாகிஸ்தான் அரசு கொடுத்தாலும்கூட, இவர்கள் போற்றிப் பாடி வெளியேறுவார்கள். இதற்கான உதவிகளை இந்திய அரசு,பாகிஸ்தானிடம் பேசி, சொத்துக்கான தொகையைப் பெற்றுத்தர முடிந்தால், அதுவே இவர்களுக்கு அரசு செய்யும் பேருதவியாக இருக்கும்!

Dr.Anburaj said...


பாக்கிஸ்தான் -பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள இந்துக்களுக்கு தினமணி கேட்ட நிவாரணம்.

இத்தகைய சிறுபான்மை
இந்துக்கள் அந்நாடுகளிலிருந்து சட்டப்படி வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புக விரும்பினால் அவர்களை வரவேற்று அரவணைப்பது மட்டுமே இப்போதைய நிலையில் இந்தியா செய்யக்கூடியது.

இவ்வாறு வெளியேற விரும்பும் பாகிஸ்தான் வாழ் இந்துக்களின் சொத்துகள் வழக்கமாக அங்குள்ள மதவாதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும்,

அதை விற்க முடியாமல் வெளியேறும் சூழ்நிலையும் இருப்பதால்தான் இந்துக்கள் இந்தியா வரும்போது பிச்சைக்காரர்களைப் போல, அரசின் தயவை எதிர்நோக்கி வரும் நிலைமை உள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்துக்களின் சொத்துகளுக்கு இன்றைய சந்தை மதிப்புக்கான ரொக்கத்தை பாகிஸ்தான் அரசு கொடுத்தாலும்கூட, இவர்கள் போற்றிப் பாடி வெளியேறுவார்கள்.

இதற்கான உதவிகளை இந்திய அரசு,பாகிஸ்தானிடம் பேசி, சொத்துக்கான தொகையைப் பெற்றுத்தர முடிந்தால், அதுவே இவர்களுக்கு அரசு செய்யும் பேருதவியாக இருக்கும்!
-------------------------------------------------------------------------
இந்திய முஸ்லீம்கள் கோரிக்கை வலுவாக சர்வதேச அரங்கில் வைக்க வேண்டும்.
உலக நாடுகளை வற்புருத்த வேண்டும்.குறிப்பாக அரேபிய மத நாடுகளை
ஐநா சபையில் முறையிட வேண்டும்.