விடுதலை வேண்டுமா? முழு குர்ஆனையும் மனனம் செய்!
சவுதி நாட்டவரான ராபியா அல் தௌஸ்ரியின் இளைய மகன் அப்துல்லா! இவர்களின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஃபைஸல் அல் அம்ரி என்பவனோடு அப்துல்லாவுக்கு வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஃபைஸல் அல் அமரி அப்துல்லாவை குத்தி கொன்று விடுகிறான். தந்தையின் கண் முன்னே இது நடக்கிறது.
காவல் துறை ஃபைஸல் அல் அம்ரியை கைது செய்து சிறையில் அடைத்தது. மரண தண்டனையும் தீர்ப்பானது. இது போன்ற குற்றங்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் உடனுக்குடன் தலையை வெட்டி தண்டனையை நிறைவேற்றுவார்கள். தனது மகனை இழந்த தௌஸ்ரி கொலையாளியை மன்னிக்க முடிவு செய்தார். முழு குர்ஆனையும் மனனம் செய்து தனது தவறுக்காக பரிகாரம் கண்டால், தான் மன்னிப்பதாக தௌஸ்ரி சொன்னார். இறந்தவர்களின் ரத்த பந்தங்கள் மன்னித்தால் கொலையாளி விடுதலையாக்கப்படுவது குர்ஆனின் கட்டளை.
அதன்படி குற்றவாளி ஃபைசல் அல் அம்ரி முழு குர்ஆனையும் மனனம் செய்தார். தௌஸ்ரியால் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் உதவி
அல்யௌம் நாளிதழ்
அல்யௌம் நாளிதழ்
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
-----------------------------------
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 5:45
அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்
அல்குர்ஆன் 17:33
2 comments:
இது ஒரு வேடிக்கையான செய்தி. அரேபிய உலகத்தின் தனித்துவமானது.
நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இந்தியாவில் ஒரு மாணவன் குரானை மனப்பாடம் செய்வான் ஆகில் ....அதுஅவனுக்கு நேரத்தை வீணாக்கிவிடும். குரானில் ஒன்றும் இல்லை. வெறும் ஒன்றுக்கொன்று தொடா்பில்லாத வசனங்கள். சதிருக்குறள் திருமந்திரம் போல் எளிய நடையோ உயரிய இலக்கிய வளமோ பொருள்செறிவோ ஏதும் கிடையாது. பின் மனனம் செய்தால் நேரம் உழைப்பு மனித வளம் அனைத்தும் பாழ் தான்.
Post a Comment