விவேகானந்தர் பார்பனியத்தின் கொடுமையை அழகாக விளக்குகிறார்.
1897 ஆம் ஆண்டு சென்னையில், அன்றைய மதராஸ் நகரத்தில் விவேகானந்தர் பேசியதின் ஒரு பகுதி,
" முகமதியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டார்கள் என்பது அடித்தட்டு மக்களுக்கும் ஏழை பாழைகளுக்கும் எப்படி இருந்தது. அவர்களைக் காப்பாற்ற வந்த இரட்சகராகவே அது அமைந்தது. அதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒருவர் முகமதியர்களாக மாறினார்கள்.இந்த மாற்றத்தைப் போர் வாள்கள் செய்ய வில்லை.வாள்முனைகளும் தீச்சுவாளைகளுமே இந்த மாற்றத்தை ஏற்படுத்தின என்று சிந்திப்பது அறிவின்மையின் உச்சம்...."
18 comments:
பெரியவர்களின் கருத்துக்கள் மரியாதை நிமித்தமாக எளிமையாக இருக்கும். பிரச்சனையை கையில் எடுத்து தீர்வு காணும்நிலையில் இருப்பவர்கள்தான் பிரச்சனையின்முழுஅம்சங்களை எடுத்து அலசுவார்கள்.சுவாமி விவேகானந்தருக்கு அல்லா அளித்த ஆயுள் 40 ஆண்டுகள்தாம்.
அரேபிய குப்பைகளைக் கிண்டிக் கொண்டிருக்க அவருக்கு நேரம் கிடையாது. முழு புத்தகததையும் படித்தால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். ” தீண்டாமை கொடுமையைப்பற்றி பேசும் போது இசுலாத்திற்கு மதம் மாற்றப்பட்டவர்கள் தீண்டாமை கொடுமையில் இருந்து காப்பாற்றிக் கொண்டனா்.இந்துவாக இருந்தால் ” தீண்டாமை” பிற மதத்திற்கு சென்றால் ”மரியாதை” என்ற இந்துக்களின் முட்டாள்தனமான செயலை கண்டிக்கின்றார் சுவாமிஜி.
அரேபிய படையெடுப்புக்களை முழுமையாக விவாதிக்க சுவாமிஜிக்கு நேரம் யில்லை.
ஆக அவரது கருத்துக்கள் முழுமையானதல்ல.
சுவனப்பிரியன் சுவாமி விவேகானந்தா் ஆரிய திராவிடம் வாதம் கட்டுக் கதை.பொய் என்கிறாா்.அதை ஏன் நம்ப மறுக்கின்றீர்.
-------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானம் தோற்றிய நாளில் இருந்தே அரேபியர்கள்தாம் வசித்து வருகின்றார்கள்.கௌதம புத்தா் பெரும் படையுடன் சென்று அந்த நாட்டை அழித்து புத்த மதத்தை பரப்பினாா் என்று எடுத்துக் கொள்வோம்.
கஜினி முஹம்மதிற்கும்
கோரி முஹம்மதிற்கும்
ஔரங்கசீப்பிற்கும்
மாலிக்காபுருக்கும்
ஹெக்மத்தையாருக்கும்
பாரத ரத்னா பட்டம் கொடுக்க மனு அனுப்புவோம்.
உலகத்திற்கு அன்பையும் ஒழுக்கத்தையும் பிரம்மச்சரியத்தையும் ஏகபத்தினிவிரதத்தையும் அஹிம்சையையும கற்றுத்தந்தது குரான்தான்
.முஹம்மதுதான் என்று பிரச்சாரம் செய்வோம்.
நம்புவதற்கு நிறைய முஸ்லீம்கள் மற்றும்
இந்துக்கள் இளிச்சவாயன்கள் அதை விட நிறைய பேர்கள் கிடைப்பார்கள். வாழ்க.
குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு
2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது.
இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே.
கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை.
ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள் (இவர்களே பெரும்பான்மை) ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதையே இந்த சட்டம் உறுதி செய்கிறது. இவ்வாறு வந்து தங்கியிருக்கும் பலர் இதனை வரவேற்றிருக்கிறார்கள்.
இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லீம் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களோ, அல்லது அவற்றின் வரலாறோ தெரியாதவர்கள் இந்த விவாதம் செய்வதற்கே லாயக்கற்றவர்கள் என்பதால், அவற்றை இங்கே நான் பேசப்போவதில்லை.
ஆனால், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு முஸ்லீம் கட்சிகள் எப்படி முஸ்லீம்களை இந்த சட்டத்தில் சேர்க்காமல் விடலாம் என்று கடும் கோபத்துடன் இன்று வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் பேயாட்டம் ஆடிகொண்டிருக்கிறார்கள். மறு பக்கம், எப்படி இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று அஸ்ஸாமில் கோபத்துடன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றுகொன்று தொடர்புடையவை.
ஆப்கானிஸ்தானிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேசிலிருந்து ஏன் இந்தியாவுக்குள் முஸ்லீம்கள் வரவேண்டும்? தனக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு சென்ற முஸ்லீம்கள் ஏன் இந்தியாவுக்குள் வர விரும்புகிறார்கள்?
முக்கிய காரணம் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது. இன்று அதன் குடிமக்கள் வறுமையினால் இந்தியா வர நேர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடிய காரணம் என்றாலும் அதற்காக குடியுரிமை வழங்க தேவையில்லை.
இதற்கு தனி சட்டம் வேண்டும்.
2
இதற்கு தனி சட்டம் வேண்டும். உதாரணமாக இவர்களுக்கு குடியுரிமை இல்லாத ஆனால் வேலை செய்யும் அனுமதி கொடுக்கக்கூடிய பத்திரங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் குடியுரிமை தேவையில்லாதது. ஏனெனில் எதிர்காலத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட அதிக வேலைவாய்ப்புள்ள நாடாக ஆனால், இவர்கள் திரும்ப பாகிஸ்தான் பங்களாதேஷ் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட பொருளாதார அகதிகளுக்கு குடியுரிமை தேவை இல்லாதது. அவர்களே கூட முக்கியமாக கருதாத ஒரு விஷயம். ஆனால், மத ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதால் இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள், இந்தியாவை விட பாகிஸ்தான் வளம் மிகுந்த நாடாக ஆனாலும் திரும்பி போவப்போவதில்லை. ஆகவே அவர்களுக்கு குடியுரிமை தேவையான ஒரு விசயம்.
இது சாதாரணமான காமன் சென்ஸ் விஷயம். ஆனால், ராஜன் குறை, அ.மார்க்ஸ், என் ராம், ஜென்ராம், ரோமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா இன்ன இதர மாங்கா மடையர்களுக்கு காமன் சென்ஸ் என்பதை விட இந்துக்களை எதிர்க்க கிடைத்த வாய்ப்பாகவே அதனை உருத்திரித்து ஊதி பெருக்கி பேயாட்டம் போடுவது முக்கியம்.
உதாரணமாக ஸ்ரீ லங்கா தமிழர்கள் உள்நாட்டுப் போராட்டங்களின் போது அகதிகளாய்த் தமிழர்கள் வந்தனர். அவர்களுக்கு தக்க இடம் கொடுத்து ஆதரித்து வருகிறது இந்தியா. ஆனால் சிங்களர்கள் அவர்களுடன் வந்திருந்தால் அவர்களைத் திரும்ப அனுப்புவது தான் நியாயம். அவர்களையும் தமிழர்களைப் போலவே கருதவேண்டும் குடியுரிமை தர வேண்டும் என்று எந்த முட்டாளும் சொல்ல மாட்டான்.
ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக எழுதி அதனால் சிங்கள பத்திரிகையாளர் இந்தியாவிடம் புகலிடம் கேட்டால் அதை இந்தியா புரிந்துணர்வுடன் விண்ணப்பத்தை ஏற்று பரிசீலிக்க வேண்டும். அது தான் நியாயம். ஆனால் தமிழர்களுக்குத் தரும் புகலிடத்தின் அடிப்படையே வேறு. இதை புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் நடிப்புப் புரட்சியாளர்கள் தான் இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள். இது அப்பட்டமான இனவாதம்.
இதே நேரத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தவர் வெள்ளையின போலீஸாலும் வெள்ளையினத்து அதிகார வர்க்கத்தாலும் கொல்லப்பட்டபோது எழுந்த குரலை நாம் நினைவில் கொள்ளவேண்டும். #blacklivesmatter என்ற கோஷம் பலரால் எழுப்பப்பட்டது. இதில் வெள்ளையரும் இந்த குரலை எடுத்து கலந்துகொண்டார்கள்.
இதற்கு எதிராக வெள்ளையினத்தவரால் இன்னொரு முழக்கம் வைக்கப்பட்டது. அது #alllivesmatter என்பது.
ஆனால் இதிலுள்ள வன்மமும் வக்கிரமும் எளிதில் விளங்கிகொள்ளக்கூடியது. கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கான அமைப்பு ரீதியான காரணங்களுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷமான ”கருப்பினத்தவரின் உயிர்கள் மதிக்கத்தக்கவை” என்ற வாசகத்தில் உள்ள முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வெள்ளையின அரசியல்வாதிகள் எல்லா உயிர்களுமே மதிக்கத்தக்கவைதான் என்று எதிர்குரல் கொடுக்கிறார்கள்.
இது கருப்பினத்தவர்களின் துன்பத்தை அவர்களது அவல நிலையை உதாசீனம் செய்கிறது. அவர்களது துன்பத்தை நிராகரிக்கிறது. எல்லாருமே ஒரே மாதிரியான அவலநிலையில்தான் இருக்கிறார்கள் என்று பம்மாத்து செய்கிறது. எல்லா உயிர்களுமே முக்கியமானவைதான் என்று அதனை எதிர்ப்பது இனவாதத்தின் காரணமாக கொல்லப்பட்ட கருப்பினத்தவர்களின் உயிர்களை அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்துகிறது. இவ்வாறு எல்லா உயிர்களும் முக்கியமானவைதான் என்று சொல்லி பலத்த விமர்சனத்துக்கு ஆளானவர்கள் ஹில்லரி கிளிண்டன், டோனல்ட் ட்ரம்ப் போன்றவர்கள்.
”எல்லா உயிர்களும் முக்கியமானவை” என்று சொல்வதே ஒரு இனவாத கோஷமே என்று கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் கார்லா ஷெட் கடுமையான விமர்சனம் வைக்கிறார். இன்னும் பலரின் கடும் விமர்சனத்துக்கு ஆளான ஜென்னிபர் லோபஸ், ஹில்லாரி கிளிண்டன் போன்றவர்கள் தாங்கள் கூறியதற்கு மன்னிப்பு கோரினார்கள்.
எல்லாருமே பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகையால் முஸ்லிம்களையும் இந்தச் சட்டத்தில் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அர்த்தமற்ற கோரிக்கையும் இந்த அப்பட்டமான இனவாதத்துடன் ஒப்பிடக் கூடிய ஒன்று.
இந்தியாவில் அப்படிப்பட்ட நேர்மையான விவாதத்துக்கு எதிரான எதிரான சூழ்நிலை நிலவுகிறது. காரணம் பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது.
பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் – இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிரான கொடுமைகள் அமைப்பு ரீதியானவை. இவைகள் தங்களை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துகொண்டவை. இவர்களின் நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ராணுவ தளபதியாகவோ முஸ்லீமை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால் இந்த பாகிஸ்தான்தான், இந்தியா இவ்வாறு 31,313 பேர்களுக்கு குடியுரிமை வழங்குவதை “இந்து பாசிச பயங்கரவாதம்” என்று அழைக்கின்றது. இவை தங்கள் நாட்டில் அமைப்பு ரீதியான வெறுப்பை கொடுமைகளை இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது செலுத்தாமல் இருந்தால் ஏன் அவர்கள் இந்தியாவுக்கு ஓடி வரப்போகிறார்கள்? என்று ஒரு அறிவுஜீவி கூட கேட்கவில்லை.
ஆனால், அறிவுஜீவிகளை விட முக்கியம் இங்கே இருக்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகளின் அப்பட்டமான இந்து வெறுப்பு.
ராமர் ஒரு கற்பனை என்று நீதிமன்றத்தில் தாக்கீது செய்த காங்கிரஸ் அரசாங்கமும், ராமர் என்ன பொறியியல் படித்தவரா என்று கிண்டல் செய்த திமுகவும், இந்து மத எதிர்ப்பையே முழு நேர வேலையாக செய்யும் கம்யூனிஸ்டுகளும் வழக்கமாக இந்து மதத்தின் மீது காட்டும் வெறுப்பை தாண்டி, இன்று இந்துக்கள் மீதே தங்கள் வெறுப்பை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் தப்பி இங்கே ஓடிவந்த இந்துக்கள் மீது.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் ஒரு சில பிராந்தியங்களில் பெரும்பான்மையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமையை வழங்குவது என்பது அவர்கள் மீதான வன்முறையை சிங்களர்கள் அதிகரிக்கவும், அந்த நிலப்பரப்புக்களை சிங்களர்கள் ஆக்கிரமிக்கவுமே வழிவகுக்கும். ஆனால் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களோ அல்லது அவர்கள் தேர்தலில் வென்று தங்களை தாங்களே நிர்வகிக்கும் வாய்ப்புக்களோ கிடையாது. 1947இலிருந்து இந்திய அரசு தன் கண்களை இறுக மூடிகொண்டதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகள் இந்துக்கள் மீது கடுமையான இன ஒழிப்பு நடத்தியதால், இன்று விளிம்பு நிலையில் இன்னமும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிகொண்டு இருப்பவர்களே அதிசயம் என்று ஆகியிருக்கும் நிலையில் அப்படி அங்கிருந்து வந்தவர்களுக்கும்குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று பஸ்களை கொளுத்தி போராட்டம் செய்யும் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் தங்கள் மனதில் எந்த அளவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பை வைத்திருக்கிறார்கள் என்று அறியலாம்.
இங்கே தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத ஆதரவு குழுக்கள் பகிரங்கமாக மேடைகளில் இந்த சட்டத்தை எதிர்த்து பேசுகிறார்கள். இந்த சட்டத்துக்கும் இவர்களுக்கும் ஸ்னான பிராப்தி கூட கிடையாது. பங்களாதேஷிலிருந்து வந்த இந்துக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
இங்கே போராட்டமாக வெடிப்பது அப்பட்டமான இந்து வெறுப்பு மட்டுமே. அந்த வெறுப்பு அறிஞர்களாலும் சான்றோர்களாலும் கண்டிக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட இந்து வெறுப்பை பரப்பும் கட்சிகள் மக்களால் முக்கியமாக இந்து மக்களால் புறம் தள்ளப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் முக்கியமாக இந்துக்கள் திமுகவை கடுமையாக நிராகரிக்கவேண்டும். இந்து வெறுப்பையே தனது ஆரம்பமாகவும், இடையாகவும் கடையாகவும் வைத்துள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தை தமிழ்நாட்டில் ஒரு சதவீத வாக்கு கூட பெற முடியாத கட்சியாக ஆக்க உங்கள் அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
------------------------------------
நாம் ஏன் CAB ஆதரிக்கனும்
அவனுகள ஏன் சேர்த்துக்கவே கூடாது
என்பதற்கு இந்த ஒரேயொரு புகைப்படம் போதும்.
இது 1946ல நவகாளி கலவரத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பிணங்கள்.
பல நாட்கள் கவனிப்பாரற்றுக் கிடந்ததால் கழுகுகள் கொத்தித் தின்றுகொண்டிருந்த சமயம் எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்தியாவிலிருந்து, பெரும்பான்மை இஸ்லாம் மதம் என்ற அடிப்படையில் இருந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தானாகப் பிரிந்தபோது (ஆனா நாம மட்டும் இந்து நாடுனு சொல்லக்கூடாதுனு நடுசெண்டர தூக்கிட்டுத் திரிவானுக.)
முகமது அலிஜின்னாவால்
Direct action என்ற பெயரில் அரேங்கேறிய கொடூரம் இது.
ஊரைவிட்டு பங்களாதேஷ் (அன்று பாகிஸ்தான்) கிளம்புறப்ப உருக்குலச்சிட்டுப்போங்க என்பதே அவனுடைய உத்தரவு.
கிட்டத்தட்ட 5000 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
பல்லாயிரம் இந்துக்கள் படுகொலை.
இந்தியாவின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை இதுவே.
அவன்தான் இன்னக்கி மறுபடியும் வந்து உங்க கூட இங்க தங்கிக்கவானு கேட்கிறான்.
அவன நீ சேர்த்துக்கிட்டா,
நாங்க இங்க மெஜாரிட்டி.
எங்களுக்கு மறுபடியும் ஒரு பாகிஸ்தான் கொடுனு வாங்கிட்டு மறுபடியும் ஒருநாள் ஊரைவிட்டு அதேமாதிரி கிளம்புவான்.
இதைவிட கொடூரமான சம்பவம் நடக்கும்.
அன்னக்கி நீ இந்த அரசாங்கத்த பார்த்து, என்ன பண்ண இவனுகள தடுக்காமனு ஒப்பாரி வைப்ப.அதான் இப்பவே தடுக்கிறான்.இன்னொரு நவகாளி சம்பவம் இங்க நடக்கக்கூடாதுனு.
CABஐ எதிர்க்கும் நடுசெண்டர்கள் இந்தப்படத்த நல்லா ஒருதடவ பார்த்துக்க.
அரைநூற்றாண்டுக்கு முன்பே அவர்கள் உனக்குக் கத்துக்கொடுத்த வரலாற்றுப் பாடம் இது.
எனவே, இங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடிமக்கள் திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய தெளிவான, சுருக்கமான விளக்கங்கள் இங்கு கேள்வி – பதில் வடிவில் வழங்கப்பட்டிருக்கின்றன…
1. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது என்ன?
இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை வரையறுப்பதே தேசிய குடிமக்கள் பதிவேடு. 1951ஆம் வருடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1955ஆம் வருடத்திய குடிமக்கள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் பதிவேடு இது. துரதிர்ஷ்டவசமாக இத்தனை ஆண்டுகாலமாக இந்தப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் யார் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் இருக்கும். நமது நாட்டில் இதுவரையிலான அரசுகள் இம்முயற்சியை மேற்கொள்ளாததால், 1955ஆம் வருடத்திய தேசிய குடிமக்கள் பதிவேடே (National Register of Citizens-NRC) இறுதியானதாக உள்ளது. 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோதுதான் குடிமக்கள் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது.
2. தே.கு.பதிவேடு புதுப்பிக்கப்படாததால், யார் இந்தியர் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறதா?
இதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. கடந்த 65 ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்ட சூழலில், உண்மையான இந்தியக் குடிமகன் யார் என்பதைத் தீர்மானிப்பது சவாலானதே. ஆனால், தனது பூர்வீக ஆவணங்கள் (முன்னோரின் சொத்து பத்திரங்கள்), வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒருவரும் தான் தேசியக் குடிமகன் என்பதை நிரூபிக்க முடியும். 1971க்கு முந்தைய பூர்வீக ஆவணங்கள் எதையும் மக்கள் வழங்கத் தேவையில்லை என்று டிச. 31இல் அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இவை எதுவும் இல்லாதவர்களும், கல்வி அறிவு இல்லாதவர்களும் கூட சாட்சியங்களின் அடிபப்டையில் குடிமகன் பதிவேட்டில் சேர முடியும். குடிமகன் என்பது எந்த மத, மொழி, இன அடிப்படையும் அற்றது என்பதையும் மறக்கக் கூடாது.
3. தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் அமலாக்க பாஜக துடிப்பது ஏன்?
இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும். எனவேதான், தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்தது. தற்போது தேர்தலில் வென்ற பிறகு ஜனநாயக முறையில் அதற்கான முயற்சிகளில் பாஜக அரசு இறங்கி இருக்கிறது.
இந்தப் பதிவேட்ட்டில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் காரணமாகவே முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறைகளில் இறங்கி உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானது அல்ல. இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அவர்கள்து கோரிக்கைகளிப் பரிசீலிக்கவும் தயாராக இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.
4. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்பது என்ன?
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வரவேற்று மகிழும்,
பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்துள்ள ஹிந்து அகதிகள்.
1947 தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பிரிந்த பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர்களில் லட்சக் கணக்கானோர் முஸ்லிம் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காக மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு துரத்தப்பட்டு இந்தியாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வந்தனர். அவர்களுக்கு இந்தியா புகலிடமும் குடியுரிமையும் அளிக்க உருவான சட்டமே 1955ஆம் வருடத்திய குடியுரிமைச் சட்டம். இந்தச் சட்டம், இந்தியாவில் யார் குடிமகனாக இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஒருவர் இந்தியாவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும் என்பதே அந்த சட்டத்தின் அடிப்படை. அரசியல் சாசனத்தில் பாகம்-2, ஷரத்துகள் 5-11 இல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் இச்சட்டம் இதுவரை 6 முறை (1985, 1992, 2003, 2005, 2015, 2019) திருத்தப்பட்டுள்ளது.
5. 2019ஆம் வருடத்திய குடியுரிமை சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?
இந்தியாவின் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய (இஸ்லாமிய) நாடுகளில் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து புகலிடம் தேடி இந்தியா வந்துள்ள மக்களுக்கு அடைக்கலமும், குடிமகன் என்ற உரிமையும் அளிக்க 2019ஆம் வருத்திய குடிமக்கள் திருத்தச் சட்டம் வகை செய்கிறது. அதற்கு அவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (முன்னர் இது 11 ஆண்டுகளாக இருந்தது); 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்தவராக இருக்க வேண்டும்; அவர்கள் ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மை (எந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்தார்களோ அந்த நாட்டில்) மக்களாக இருக்க வேண்டும். அவர்கள் முறைப்படி அரசுக்கு மனுச் செய்து, இந்தியக் குடியுரிமை பெறலாம் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம்.
இந்த நாடுகளில் நடைபெறும் இஸ்லாமியர்களின் வன்முறையும், சிறுபான்மையினரின் வேதனையும் உலகம் அறிந்த உண்மை. 1947இல் இந்நாடுகளில் இருந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையையும் இப்போதைய எண்ணிக்கையையும் ஒப்பிட்டாலே ஆபத்தின் வீரியம் புரியும். இந்த நாடுகளில் நிம்மதியாக வாழ முடியாமல், உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்ள சொத்துகளையும் உறவுகளையும் இழந்து தப்பியோடி வரும் அபலைகள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அவர்களுக்கு உதவுவது நமது கடமை.
6. இந்த சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை?
பாகிஸ்தானில் ஹிந்துக்களின் அவல நிலை.
இந்தக் கேள்வியே அடிப்படைப் புரிதல் அற்றது. ஏனெனில் அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அவர்களால் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் தான் அடைக்கலம் நாடி இந்தியா வருகின்றனர். அவர்களையும், அவர்களை அந்த நாடுகளில் கொடுமைப்படுத்திய பெரும்பான்மை மதத்தினரையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்கக் கூடாது. இருப்பினும், இஸ்லாமியர்கள் வரவே கூடாது என்று இந்தச் சட்டத்தில் கெடுபிடி ஏதும் இல்லை. தேவை இருப்பின் அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து இந்திய குடியுரிமை பெற முடியும். ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய ஆறு மதத்தினருக்கு விசேஷமாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அடைந்துள்ள பாதிப்பின் அடிப்படையில் மட்டுமே. இந்தியாவை விட்டால் அவர்களுக்கு நாதி ஏது?
7. அப்படியானால், பாகிஸ்தானில் அகமதியாக்களும் ஷியாக்களும் முஸ்லிம்கள் என்றபோதும் அங்குள்ள ஷன்னி முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே? அவர்களை இந்தியா புறக்கணிப்பது மதரீதியான பாரபட்சம் ஆகாதா?
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு; மதரீதியாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள நாடு. ஷியாக்களும் அகமதியாக்களும் இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுகள். ஒருகாலத்தில் அவர்களும் சேர்ந்துதான் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, இஸ்லாம் மதத்தின் உட்பிரிவுகளுக்குள் நடைபெறும் மோதலுக்காக நாம் பரிதாபப்பட முடியாது. அது அந்நாட்டின் உள்விவகாரம். அதில் இந்தியா தலையிடக் கூடாது.
இருப்பினும் தஞ்சம் வேண்டி வந்தால், பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு அளிக்கப்பட்டது போல புகலிடம் அளிக்கத் தடை ஏதும் இல்லை. தவிர, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்துவரும் வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே எந்த அரசும் செயல்பட முடியும். எதிர்காலத்தில் அகமதியாக்கள் இந்தியக் குடியுரிமை கோரினால், அதை அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
8. அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும் தற்போதைய குடிமக்கள் திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஏன்?
அஸ்ஸாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு முகாமில் தங்கள் ஆதாரங்களுடன் திரண்ட மக்கள்.
1951 முதல் 1971 வரை, அண்டை நாடான கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய பங்களாதேஷ்) லட்சக் கணக்கான ஹிந்து, முஸ்லிம் மக்கள் அகதிகளாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஊடுருவினர். அவர்கள் வங்கமொழி பேசியதால் மேற்கு வங்கத்தில் பிரச்னை ஆகவில்லை. ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேகப் பண்பாட்டு அடையாளங்களும் தங்கள் அரசியல் அதிகாரமும் இந்த அகதிகளால் பாதிக்கப்படுவதாகக் கருதிய அஸ்ஸாம் மாநிலப் பிரிவினைவாதிகள் 1979 முதல் 1985 வரை நடத்திய வன்முறைகளால் 900க்கு மேற்பட்டோர் அங்கு உயிரிழந்தனர். அதையடுத்து, 1985இல் அஸ்ஸாம் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அப்போதைய மத்திய அரசுக்கும் (ராஜீவ் காந்தி பிரதமர்) அஸ்ஸாம் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்துக்கான தே.கு.பதிவேடு உருவாக்கப்பட்டு, 1971 மார்ச் 25க்குப் பின்னர் அம்மாநிலத்தில் நுழைந்தவர்கள் அந்நியர்களாகக் கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.
பிற மாநிலங்களைப் பொருத்த வரை, 1951ஆம் வருடத்துக்குப் பின் இந்தியாவுக்குள் வந்தவர்கள் அந்நியர்களாவர். (அதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது வேறு விஷயம்). அஸ்ஸாமிலோ, 1971க்குப் பிறகு வந்தவர்கள், 1985 வருடத்திய ஒப்பந்தப்படி அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமே நேரடிக் கண்காணிப்பில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி உள்ளது. இப்போதைய கணக்கெடுப்பின்படி, சுமார் 19 லட்சம் பேர் அஸ்ஸாம் தே.கு.பதிவேட்டில் தகுந்த ஆதரங்களை சமர்ப்பிக்காததால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் உண்டு. அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேக நலனுக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, குடிமக்கள் திருத்தச் சட்டப்படி புதிய குடியுரிமை பெறுவோர் அங்கு குடிபுக முடியாது.
9. வேறு சில வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு விலக்கு உள்ளதா?
ஆம். பழங்குடியின மக்கள் மிகுந்த மேகாலயம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின்படி, இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லாது. அதாவது, இம்மாநிலத்தவர் அல்லாத ஒருவர் புதிதாக இம்மாநிலங்களில் யாரும் குடிமகனாக முடியாது. அதேபோல, உள்நுழைவு உரிம அனுமதிச் சட்டம் (Inner Line Permit) கொண்டுள்ள அருணாசல பிரதேசம், நாகலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் 370வது ஷரத்தின் படி இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
10. இந்தியாவின் அண்டைநாடான ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சட்டத்தின் ஏன் குடியுரிமை அளிக்கப்படவில்லை?
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்.
இந்த சட்டத் திருத்தம் மதரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவைப் பொருத்த வரை, அங்குள்ள மொழி அடிப்படையிலான, இன அடிப்படையிலான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள்; ஆனால், பெரும்பான்மை சிங்களவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் நாடுகளில் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடக் கூடாது. தவிர, தமிழகத்தில் அகதியாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் (ஸ்ரீலங்கா) திரும்பவே துடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் குடும்பத்துடன் ஸ்ரீலங்கா செல்லும் ஈழத் தமிழர்கள் பலர் உள்ளனர். மேலும், அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வது அவர்களது பல்லாண்டுகால உரிமைகளை தங்கள் சொந்த நாட்டில் இழப்பதாகிவிடும்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள். இன்று அரசியல் சூழல் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளும் இப்போது இல்லை. எனவே மாறியுள்ள சூழலின் அடிப்படையில், நட்பு நாடான ஸ்ரீலங்கா அரசுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.
1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பலர் அந்நாட்டுக்கே திரும்பிவிட்டனர். தற்போது, 107 இலங்கை அகதி முகாம்களில் சுமார் 64,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீள அவர்களது நாட்டிலேயே குடிபுகச் செய்வதுதான் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்க உதவியாக இருக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை அளிப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இருப்பினும், இப்போதுதான் இதற்கான விவாதம் துவங்கி உள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக, ஏற்கனவே, ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழர்களுக்கு 1964ஆம் வருடத்திய சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் தேவைப்படின் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டுகோளை முன்வைத்தால் அவர்களுக்கென புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே விவாதத்தைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஈழத் தமிழ் அகதிகளுக்காக தமிழகத்தில் நீலிக் கண்ணீர் விடும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஏன் அவர்களை இந்தியக் குடிமக்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையில், அதற்கான வேண்டுகோள் ஈழத் தமிழ் அகதியிடமிருந்து இதுவரை வரவில்லை. அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் கனவுடன்தான் அகதிகள் முகாம்களில் தவிக்கின்றனர்.
11. இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சிலர் கூறுகிறார்களே? நீதிமன்றம் இதற்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதா?
வன்முறையால் அரசையும் நீதித்துறையையும்
மக்களையும் மிரட்ட முயலும் சமூக விரோதிகள்.
கண்டிப்பாக இல்லை. அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணைப்படி, குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் வரம்புக்கு உள்பட்டது. இதைத் திருத்த அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள 11வது ஷரத்தின்படி, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. யாருக்கு குடியுரிமை வழங்குவது என்பது தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல் சாசனம் கூறுகிறது. அதாவது அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை வலிமை கொண்ட மோடி அரசு தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை (Citizenship Amendment Bill- CAB) நிறைவேற்றி, சட்டமாக்கி (CAA) இருக்கிறது. இதனைத் தடை செய்ய முடியாது என்பதே ஹரீஷ் சால்வே போன்ற மூத்த சட்ட வல்லுநர்களின் கருத்து.
அடுத்த குற்றச்சட்டு மதரீதியான பாரபட்சம் தொடர்பானது. இந்திய அரசியல் சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும். இதனையும் குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) மீறவில்லை. இதில் எந்த இடத்திலும் மதப் பாகுபாட்டுக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம், ஏற்கனவே இந்தியாவில் உள்ள குடிமக்கள் தொடர்பானது அல்ல. இது மூன்று முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்ட ‘சிறுபான்மை’ இந்திய வம்சாவளியினருக்கான விசேஷச் சட்டம். இதனையும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றல்ல. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. தவிர, குடிமக்கள் பதிவேட்டின் மூல ஆதாரத்தில் மதம் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.
12. இந்தச் சட்டத்தை தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனரே! அது சாத்தியமா?
வன்முறைக்கு வித்து:
மேற்கு வங்கத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே
தலைமை தாங்கி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி.
நிச்சயமாக இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. இதை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாநில அரசுகள் அதற்கான விலையை அரசியல் சாசனப்படி கொடுக்க வேண்டியிருக்கும். மத்திய அரசுக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைக்க இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு; அதில் உச்ச நீதிமன்றமும் தலையிடாது. இதேபோலத் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணிகளையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கவோ, தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனால், பரபரப்புக்காக சிலர் வாய்க்கு வந்தபடி அறிக்கை வெளியிடுகின்றனர். உண்மை என்னவென்று அவர்களுக்கே தெரியும்.
13. எத்தனையோ பொருளாதார சீர்திருத்தப் பணிகள் காத்திருக்கையில், இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் என்ன அவசரம்?
நல்ல கேள்வி. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்றே தெரியாத நிலையில் தான் நமது நாடு இருக்கிறது என்பதே அவமானம். இந்தப் பணி கடந்த 70 ஆண்டுகளில் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யக்கூட நரேந்திர மோடி அரசு வர வேண்டி இருக்கிறது. இதையும் 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில் மோடியால் செய்ய முடியவில்லை. ஏனெனில் அப்போது ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்தது. தற்போது ஜனநாயகரீதியாக தேர்தல்களில் தனது வெற்றிகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளதால்தான் இவை சாத்தியமாகி உள்ளன. இதனை அசுரப் பெரும்பான்மை கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் செய்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திராது.
நமது குடிமக்களின் நிலை தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கான திட்டங்களை விரயமின்றித் தீர்மானிக்க முடியும். எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் அத்தியாவசியமாகும். அதேபோல, இந்த நாட்டை நம்பி அடைக்கலம் புகுந்தோர் எத்தனை நாட்களுக்கு அவநம்பிக்கையுடன் காத்திருப்பது? அவர்களும் நமது சகோதரர்கள் அல்லவா? அவர்களது கண்ணீரைத் துடைக்க இனியும் தாமதிப்பது சரியா?
இவ்விரு சட்டங்களும் தனித் தனியானவை. என்றபோதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளவை. எனவே, ஏற்கனவே தாமதத்தால் மறுக்கப்பட்ட நீதியை அவர்களுக்கு வழங்குவதே நியாயமாக இருக்க முடியும்.
14. தே.கு.பதிவேடு, கு.தி.சட்டம் ஆகிய விவகாரங்களில் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற பாஜக அரசு தவறிவிட்டது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றனவே?
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றத்தின்போது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்.
இந்திய ஊடகங்கள் பாஜக அரசின் எந்த நல்ல திட்டங்களை இதுவரை ஆதரித்திருக்கின்றன? ‘ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்ற பழமொழி உண்டு. இடதுசாரி மயமான ஊடகங்களுக்கும், புரட்சிகர ஜனநாயகம் பேசும் லிபரல்களுக்கும் பாஜக எப்போதும் எட்டிக்காயாகவே இருந்துள்ளது. இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் இத்தகைய தவறான நபர்களால் வழிநடத்தப்படுகின்றனர். அதுவே இப்போதைய கலவரங்களுக்கு காரணம். உண்மை நிலையை நாம் மக்களிடம் எடுத்துச் செல்லும்போது, இந்த தவறான நபர்களின் அபத்தங்கள் வெளிப்படும். இஸ்லாமியர்கள் உண்மை நிலையை உணர வேண்டும். அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கத் தயார் என்று அதனால்தான் அரசு தற்போது கூறி இருக்கிறது.
15. முன்கூட்டியே இஸ்லாமியர்களுடன் பேசி இருந்தால் தற்போதைய கலவரங்களைத் தடுத்திருக்கலாம் என்ற கருத்து சரியா?
லோக்சபாவில் அதீத பலத்துடன் நிறைவேறிய கு.தி.ச.மசோதா.
உண்மையில், இந்தக் கலவரத்துக்கான அடிப்படை வெறுப்புணர்வு, அயோத்தி ராமஜன்மபூமி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோதே (நவ. 9, 2019) துவங்கிவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டமும் முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவற்றையும் அப்போது எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் அமைதி காத்தன. அப்போது அடங்கி இருந்த அடிப்படைவாத சக்திகள், இப்போது எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் வன்முறையில் இறங்கி உள்ளனர் என்பதே யதார்த்த உண்மை.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அனைவரின் கருத்துகளும் செவி மடுக்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஜனநாயகரீதியாக நிறைவேறி இருக்கிறது. இப்போது அரசியல் சாசன அடிப்படையில் அது மீறப்பட இயலாத சட்டம். எனவேதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்ப்பதாகக் கூறாமல், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை (CAB) எதிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தவர்களின் மனுக்களை உடனடியாக விசாரிக்கவும், இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிமன்றங்கள் மறுத்ததில் இருந்தே, இந்தச் சட்டத்தின் அரசியல் சாசன அடிப்படை வெளிப்படுகிறது.
ராஜ்யசபாவிலும் நிறைவேறிய கு.தி.ச. மசோதா.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை மக்கள் மன்றத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையாக முன்வைத்து தேர்தலில் வென்றுள்ளது. அதனை நிறைவேற்றுவது பாஜகவின் கடமை. இதுவும் இஸ்லாமியர்கள் அறிந்ததே. அவர்களும் வாக்களித்ததால்தான் இந்த அரசு முழுப் பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டுமானால், இதனை விரும்பாதோர் ஜனநாயக முறையில் வென்று சட்டத்தைத் திருத்துவது தான் சரியானது. (ஷாபானு ஜீவனாம்ச மறுப்பு சட்டம் உதாரணம்). அதை விடுத்து வன்முறையில் இறங்கி மிரட்டல் அரசியலைக் கைக்கொள்வது முறையல்ல. இதனால் பாஜகவுக்கு மக்கள் மன்றத்தில் மேலும் ஆதரவு கூடும் என்பதை விரைவில் எதிரிகள் உணர்வார்கள்.
16. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட ஹிந்துக்களைக் காப்பாற்றுவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற முஸ்லிம் தலைவர்களின் கருத்து உண்மையா?
உண்மையல்ல. அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளோருக்கு (சுமார் 19 லட்சம்) அம்மாநிலத்தில்தான் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அது அம்மாநிலத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்து காரணமாக சாத்தியமில்லை. எனவேதான் விடுபட்டவர்களின் ஆவணச் சரிபார்ப்புக்கு மேலும் கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அது தனி விவகாரம்.
அரசு மதிப்பீட்டின்படி, மூன்று முஸ்லிம் நாடுகளில் இருந்து தப்பிவந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் சுமார் 30,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும். இதனை தவறாகப் பிரசாரம் செய்வது அரசியல் சாசனத்தை மீறுவதாகும். அத்தகையோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும்போதுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிக்கல்கள் தெரியவரும். அப்போது நடைமுறை அனுபவத்திலும், சூழ்நிலைக்குத் தக்கபடியும் மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு அந்தப் பிரச்னைகளைக் களைய வேண்டும்.
17. அண்டை நாடான மியான்மரில் மதக்கலவரங்களால் வெளியேறும் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏன் இந்த சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?
அஸ்ஸாமில் கு.தி.சட்ட ஆதரவுப் பேரணியில்
அம்மாநில முதல்வர் சர்வானந்த் சோனோவால்.
இதுபோன்ற கேள்விகளை இந்தியாவில் மட்டும் தான் கேட்க முடியும். ரோஹிங்க்யா முஸ்லிம்களால் மியான்மரில் ஏற்பட்ட பிரச்னைகளால்தான் அங்கு கலவர்ம் ஏற்பட்டது; அந்நாட்டு அரசும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தது. அதனால் அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை அண்டை நாடான பங்களாதேஷ் (அது ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும்) ஏற்கவில்லை. மற்றொரு முஸ்லிம் நாடான மலேசியாவும் அவர்களைத் துரத்துகிறது. எனவே அவர்கள் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் முறைப்படி வந்த அகதிகள் அல்லர். எனவே மியான்மர் நாட்டுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதே முறையானது. அந்நாட்டு அரசும் அவர்களை திரும்ப ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது. ரோஹிங்க்யா முஸ்லிம்களை பாகிஸ்தானோ, பங்களாதேஷோ கூட வரவேற்காத நிலைக்குக் காரணம் என்ன என்று நமது ‘லிபரல்கள்’ ஆராய வேண்டும்.
அடுத்து சீனாவில் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ள உய்கர் முஸ்லிம்களுக்கும் புகலிடம் கொடுக்குமாறு கோரிக்கைகள் நமது இடதுசாரிகளால் முன்வைக்கப்படலாம். அவர்களின் அதிகாரப்பசி அப்படிப்பட்டது. ஆனால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நுழையவும், குடிமகன் உரிமை பெறவும் இந்தியா சந்தை மடமல்ல.
அகதிகள் விவகாரம் உலகளாவிய பிரச்னையாகி வருகிறது. இதனைத் தீர்க்க இந்தியா மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.
18. ‘வசுதைவ குடும்பகம்’; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றெல்லாம் சொன்ன பாரதத்துக்கு, பிற நாடுகளால் கைவிடப்பட்ட மக்களைக் காக்கும் தார்மிகக் கடமை இல்லையா?
கண்டிப்பாக உண்டு. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டிய முதன்மைக் கடப்பாடும் இந்திய அரசுக்கு உண்டு. தனக்கு மிஞ்சியே தானம் என்ற பழமொழி உண்டு. அதை நிறைவேற்றிய பிறகு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சமூக உறவுகள், பண்பாட்டு மாற்றங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றை உத்தேசித்த பிறகு, வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு கருணை காட்டலாம். அதற்கான காலம் வரும்போது பாரதம் தனது கடமையை நிச்சயம் நிறைவேற்றும்.
கடமையை செய்
பலனை எதிர்பாராமல்....( ஸ்ரீமத் பகவத்கீதையின் வரிகளைக் சேவைக்கு ஆதாரமாக கையாண்டுள்ளாா் ஒரு அரேபிய மதத்தவா்)
திருவனந்தபுரத்தில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் கிழக்கேகோட்டை பேரூந்து நிலையம்... தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பத்மநாபசுவாமி கோவிலுக்கு வந்து செல்லும் காலை வேளையில் சாலை ஓரத்தில் கொஞ்சம் பேர் திரண்டு நின்று வேடிக்கை பார்த்து கலைந்து செல்கின்றனர்..
பேரூந்தில் இருந்து இறங்கி தனது தோழிகளுடன் அலுவலகம் நோக்கி நடந்து சென்ற ஒரு முஸ்லிம் இளம்பெண் #புஷாரா கூட்டத்தில் தனது பார்வையை செலுத்த நடைபாதை சிலாப் காலில் இடித்து விரலில் காயத்துடன் இரத்தம் வழிந்தோட வலியில் துடிக்கும் ஒரு ஐயப்ப பக்தர்... அருகில் தந்தையின் வேதனையை பார்த்து மனம் நொந்து செய்வதறியாமல் நிற்கும் அவரது மகன்..
சுற்றி நின்று வேடிக்கை பார்த்து நகர்ந்து செல்லும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம்பட்ட அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்ப முன்வராத நிலையில் புஷாரா துரிதமாக ஓடி அருகில் உள்ள கடையிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்து அந்த மனிதரை சாய்ந்து அமரவைத்து விரலில் காயம் பட்ட இடத்தை கழுவியதோடு, மீண்டும் மருந்து கடை சென்று டிரெசிங் பொருட்கள் வாங்கி வந்து அவரது கால் காயத்துக்கு கட்டு போட்ட மனிதநேய உதவிகள்...
உடுத்தியிருக்கும் ஆடையை வைத்து சமூகத்தை அடையாளம் காண வலியுறுத்தும் பிரதமர் ஆளும் தேசத்தில் #புஷாரா போன்றவர்கள் ஆடைக்குள் மனிதத்தையும் சேர்த்து வைத்து இறைவன் பலன் தருவான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையில் தங்கள் கடமையை இன்னும் அதிகமாக செய்வோம்...
Colachel Azheem அவர்கள் பதிவிலிருந்து....
எனது பதிவுகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி சுவனப்பிரியன்.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டங்கள் குறித்த உண்மையை அறிந்து கொள்ள மேற்படி கட்டுரைகள் உதவும். முஸ்லீம்கள் வீண் வதந்திகளை நம்பாதிருப்பார்களாக.பாக்கிஸ்தான் நாட்டின் பரப்பளவு 7 லட்சம் ச.கிமீ. அதற்கான பங்காளிகள்பாக்கிஸ்தான் பிரஜைகள் அனைவரும். ஆனால் ஒரு பங்காளி தனது மிருக பலத்தால் படிக்கும் வல்லாதிக்க கருத்துக்களால் அடுத்த பங்காளியை- இந்துக்களை மிருக பலத்தோடு வஞ்சித்து விரட்டுகின்றான். ஆக நொந்தவன் இந்து. அவனுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டிய தார்மீக கடமைநமக்கு உண்டு. ஆனால் பாக்கிஸ்தானை விட்டு இந்துவை விரட்டியவனுக்கு நாம் அடைக்கலம் கொடுக்கும் கேள்வி ஏழக் கூடாது. அது அண்ணன்-தம்பி பிரச்சனை.நாட்டின் எல்கைக்குள ் தீர்க்க வேண்டும்.
திராவிட முன்னேற்ற கழகம் தலைவா் ஸ்டாலின் ஆட்சியை
பிடிக்க முஸ்லீம்களை மிதியடியாக பயன் படுத்த நினைக்கின்றாா்.
ஏமாறாதீர்கள்.
கோவை -அல் உம்மா பிரச்சனை -கலகம் - குண்டு வெடிப்பு என்று நடந்த அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் மூல காரணம் ஆட்சியில் இருந்த திமுகழகம்தான்.நியாயமாக செயல்பட்டிருந்தால் சமூக இணக்கத்தை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் முஸ்லீம்களை கொம்பு சீவி விடுவது - இந்துக்களை மறுபக்கம் தூண்டி விடுவது என இரட்டை வேடம் போட்டதால் அரசு இயந்திரம் தோல்வி அடைந்தது.தமிழ்நாடு போலீஸ் வேலை நிறுத்தம் செய்த கொடுமை அரங்கேறியது.
மீண்டும் முஸ்லீம்களை கொம்பு சீவுகிறது திமுகழகம்.
Post a Comment