Followers

Saturday, April 25, 2015

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி புனித மெக்காவில்!



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மெக்காவுக்கு வருகை புரிந்தார். மெக்காவில் உள்ள நஸீம் ஏரியாவில் நடந்து வரும் நபிகள் நாயகத்தின் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மெக்கா வந்திருந்தார் சாரா உமர். இது பற்றி அவர் பேட்டியளிக்கும் போது...

"இஸ்லாம் அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு சிலர் இஸ்லாம் என்றாலே வன்முறை மார்க்கம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபிய அரசு இஸ்லாத்தின் உன்னதமான கொள்கைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மக்காவையும் மதினாவையும் விரிவுபடுத்தும் மிகப் பெரும் பணியை செய்து வரும் சவுதி அரசை பாராட்டுகிறேன். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதற்காக மிகவும் மகிழ்கிறேன். இதே போன்ற கண்காட்சிகளை மற்ற நாடுகளுக்கும் சவுதி அரசு விரிவுபடுத்தி இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை களைய முயலவேண்டும். இந்த கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன்" என்றார்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டார் சாரா உமர். இவரது மகன் சயீத் ஒபாமாவோடு இந்த பயணத்தை மேற்கொண்டார். பேரன் மூஸா ஒபாமாவும் சேர்ந்து வந்திருந்தார். அனைவரும் புனித உம்ரா பயணத்தையும் மேற்கொண்டனர்.

இவர்களைப் போன்றே பராக் ஒபாமாவும் தூய இஸ்லாத்தை விளங்கிக் கொள்வாராக! உலகில் அமைதியை நிலை நாட்ட தன்னால் ஆன முயற்சிகளை எடுப்பாராக!

தகவல் உதவி
அரப் நியூஸ்
22-04-2015

2 comments:

Dr.Anburaj said...

பிரச்சனை ஒபாவிடம் இல்லை.கலகக்காரா்களாக அரேபிய நாடுகளின் மக்கள் இருப்பதுதான் பிரச்சனை.

Dr.Anburaj said...

சுவாமி விவேகானந்தா் குறித்து அமோிக்க ஜனாதிபதி ஓபாமா அவர்கள் குறிப்பிடும் போது ” Salvation is not the monopoly of any single organisation " என்று கம்பிரமாக உரைப்பாா். U tube ல் காணலாம்.இந்த உலகில் ஒவ்வொருமதமும் மிகச்சிறந்த பெண்களை ஆண்களை துறை வல்லுநா்களை சிந்தனையாளா்கள் தொணடுள்ளம் கொண்டவா்களை முமீன்களை இரட்சிக்கப்பட்டவா்களை அந்தணா்களை உருவாக்கியுள்ளது எஇனியும் உருவாக்கும் வல்லமை கொண்டது என்று உண்மையை ஓங்கிச் சொல்கிறா் சுவாமிஜி.பாவம் பாட்டிக்கு என்ன தொியும்.இசுலாம் என்று ஏதோ பிற்றிக் கொண்டு வரவில்லை.அடக்கமாக அமைதியாக வ்நதிருப்பது அவரது முகத்தில் தொிகின்றது. சுவனப்பிாியன் முகத்தில்தான் வீண் ஆா்பாட்டம் தொிகின்றது. திருமந்திரங்களை மறந்து விட்டீரே ஏன் ?