Followers

Monday, May 11, 2015

கஃபாவுக்கு உள்ளே என்ன இருக்கு அங்க யாரு போறாங்க?

"அண்ணே! கஃபாவுக்கு உள்ளே என்ன இருக்கு அங்க யாரு போறாங்க?" - சென்னி மலை










பலருக்கு சந்தேகம் உள்ளது. கஃபாவுக்குள் சிவ லிங்கம் இருப்பதாகவும். அதனையே முஸ்லிம்கள் வணங்குவதாகவும் ஒரு நம்பிக்கை சிலரிடம் உள்ளது. அந்த கஃபாவுக்குள்தான் இறைவன் இருப்பதாக குர்ஆனில் எங்குமே சொல்லப்படவில்லை. இறைவனை வணங்க உலகில் முதன் முதலாக எழுப்பப்பட்ட இறை இல்லமே கஃபா. அது ஒரு செவ்வக வடிவில் உள்ள கட்டிடமே. அதற்குள் எவ்வாறு தற்போது கட்டப்பட்டுள்ளது என்ற வரைபடமும் தரப்பட்டுள்ளது. அவ்வப்போது அதனை சுத்தம் செய்ய இந்தியா, பாகிஸ்தான் நாட்டு தொழிலாளிகள் உள்ளே சென்று தூய்மைபடுத்தி விட்டு வருவதை சர்வ சாதாரணமாக காணலாம்.

ஹஜ்ஜூக்கு வரும் வெளிநாட்டு மந்திரிகள் தூதர்கள் சவுதி மன்னர்கள் சேர்ந்து கூட்டாக வருடம் ஒரு முறை தூய்மைபடுத்துவார்கள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. உள்ளே சிலைகள் ஏதும் இருந்தால் இன்று வரை அது வெளியே தெரிந்திருக்கும்.

உலக முஸ்லிம்கள் குறிப்பிட்ட இடத்தை நோக்கி சீராக தொழ வேண்டும் எதிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இறைவனால் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது.

உள்ளே சென்றவர்கள் அதன் உள் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை தங்களது செல் பொனிலும் படம் பிடித்து இணையத்தில் விட்டுள்ளனர்.

1400 அண்டுகளுக்கு முன்பு இதே கஃபாவில் 365 சிலைகள் இருந்ததாம். நாள் ஒன்றுக்கு ஒரு சிலை வீதம் வணங்கி வந்தார்கள். அந்த சிலைகளில் நபி ஆப்ரஹாம், நபி இஸ்மாயீல் போன்றோரின் உருவம் பொதித்த சிலைகளும் இருந்தன. மெக்கா இஸ்லாமியரின் கட்டுப்பாட்டில் வந்தவுடன் அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தச் சொன்னார் நபிகள் நாயகம். அந்த இடங்கள் கழுவி சுத்தம் செய்யப்பட்ட பிறகே கஃபாவுக்குள் பிரவேசித்தார் நபிகள் நாயகம். எனவே கஃபாவுக்குள் சிலை இருக்கிறது என்ற பொய் பிரசாரத்தை இனியும் நம்ப வேண்டாம் என்று சென்னி மலை, ராம் நிவாஸ் போன்றோருக்கு சொல்லிக் கொள்கிறேன்.


அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும்.

-குர்ஆன் 3;96


இறைவன் கூறிய வாக்கு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று உலக மக்கள் நேர் வழி பெறுவதற்காக தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்காக வருடா வருடம் லட்சக் கணக்கில் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். சண்டை சச்சரவுகள் இல்லாமல் இன்று வரை பாக்கியம் பொருந்திய இடமாகவும் அமைதி தவழும் இடமாகவும் மெக்கா இருந்து வருகிறது.

2 comments:

Dr.Anburaj said...

இந்தியாவில் ஆலயங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளது.தியான முறைகளும் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. காபா வுக்கு முந்தைய ஆலயங்கள் உமது தாய்நாடாம் இந்தியாவில் நிறைய உள்ளது

Dr.Anburaj said...

காபாவைில் உள்ள கருப்புக் கல்லை ஏன் முத்தமிட வேண்டும்.ஏன் கல்லெறிய வேண்டும்.ஏன் மலையைச்சுற்றி ஓட வேண்டும் ?????? அமுகம்மதுவுக்கு முந்தைய அரேபிய கலாச்சாரம் அது. அரேபிய கலாச்சாரத்தில் பல மாற்றங்களைச் செய்த முகம்மதுவிற்கு இது பிடித்ததாக இருந்துவிட்டது.ஆக அரேபிய கலாச்சாரம் தொடா்ந்து விட்டது.