'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, May 22, 2015
சாதியை ஒழிக்கா விட்டால் நாடு சீரழிந்து விடும்! - நரேந்திர மோடி
சாதியை ஒழிக்கா விட்டால் நாடு சீரழிந்து விடும்! - நரேந்திர மோடி
பிஹாரைச் சேர்ந்த ‘தேசிய கவி’ என்று அழைக்கப்படும் மறைந்த ராம்தாரி சிங் தின்கர் என்ற கவிஞரின் படைப்புகளைக் கொண்டாடும் 50-ம் ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி சாதிப்பிரிவினையைக் கடக்க வேண்டும் என்று பிஹார் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிஹார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாத அளிக்கிறேன். சாதி அரசியல் எனும் பிரிவினைகளைத் தாண்டி மக்கள் எழுச்சியுற வேண்டும் இல்லையெனில் பொதுவாழ்க்கை சீரழிந்து விடும்.
இந்தியாவின் மேற்குப் பகுதி செல்வச் செழிப்புடன் இருக்கலாம் ஆனால் கிழக்குப் பகுதியின் ஞானமும் ஒன்றிணையாவிட்டால் இந்தியா அதன் முழு சக்தியுடன் திரண்டு செயல்பட முடியாது. தெய்வங்களில் லஷ்மியும், சரஸ்வதியும் இணைந்து விட்டால், அதாவது செல்வமும், கல்வியும் ஞானமும் இணையும் போது இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறுகிறது என்பதை உலகம் பார்க்கத்தான் போகிறது” என்றார்.
கவிஞர் ராம்தாரி சிங் 1961-ம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்றை மேற்கோள் காட்டி பேசிய மோடி, “ஓரிரு சாதிகளின் உதவியுடன் ஒருவரும் ஆட்சி புரியமுடியாது. அனைவரின் ஆதரவும் தேவை, சாதித் தளைகளிலிருந்து விடுபடாவிட்டால் பிஹாரின் பொதுவாழ்க்கை சீரழிந்து விடும்.
ராம்தாரி சிங் தின்கரின் படைப்புகள் நாட்டின் இளைஞர்களுக்கும் ஜெயபிரகாஷ் நாராயணனின் லட்சியங்களுக்கும் பாலமாக உள்ளது.
அவருள்ளாக தீக்கொழுந்து இருந்தது, ஆனால் அது எதையும் எரிப்பதற்காக அல்ல, மாறாக வரும் தலைமுறைகள் வெளிச்சம் பெறுவதற்காக” என்றார் நரேந்திர மோடி.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
22-05-2015
நாட்டில் மதக் கலவரத்தை தூண்டி அதன் மூலம் இந்து ஓட்டு வங்கியை ஒருமுகப்படுத்தி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி இதனை சொல்லக் கூடாது.
-லல்லு பிரசாத் யாதவ், ஷரத் யாதவ்
சரியான வார்த்தையை இரு தலைவர்களும் சொல்லியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடந்த ரயில் விபத்தை சதி என்று பொய்யுரைத்து அதன் மூலம் அந்த பிணங்களை ஊர் முழுக்க இழுத்துச் சென்று கலவரத்தை ஊக்குவித்ததே நரேந்திர மோடியும், அமீத்ஷாவுமோ. இன்று ஆட்சியில் அமர்ந்து விட்டோம் என்பதால் ஏதோ நாட்டு நலனில் அக்கறை வந்து விட்டதாக பிஜேபியினர் நம்பலாம். ஆனால் பொது மக்களின் கருத்தோ வேறு விதமாக உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment